திடீரென தூக்கிபோட்ட பின் வீல்... கட்டுக்கடங்காமல் காற்றில் பறந்த கார்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது

அதி வேகத்தில் வந்த கார் காற்றில் பறப்பதைப் போன்ற வீடியோக் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

திடீரென தூக்கிபோட்ட பின் வீல்... கட்டுக்கடங்காமல் மரத்திற்கு மேல் பறந்த கார்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது...

இணையத்தில் விபத்துகுறித்து பல்வேறு வீடியோக்கள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வீடியோக்களின் வரிசையில் புதிதாக ஓர் வீடியோ இணைந்துள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அரங்கேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீரென தூக்கிபோட்ட பின் வீல்... கட்டுக்கடங்காமல் மரத்திற்கு மேல் பறந்த கார்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது...

அதிவேகத்தில் சீறிப் பாய்ந்து வந்த காரொன்று கட்டுப்பாட்டை இழந்து காற்றில் பறப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் அடங்கியிருக்கின்றன. கார் காற்றில் பறக்க அதிக வேகமாக வந்தது முக்கிய காரணமாக இருந்தாலும், அதன் பின் வீல் திடீரென தூக்கிப்போட்டதே காற்றில் பறந்ததற்கு முக்கிய காரணமாக உள்ளது.

திடீரென தூக்கிபோட்ட பின் வீல்... கட்டுக்கடங்காமல் மரத்திற்கு மேல் பறந்த கார்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது...

ஆமாங்க, கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் கார் வந்ததன் காரணத்தினால் கார் விமானத்தைபோல் காற்றில் பறந்திருக்கின்றது. இந்த சம்பவம் அனைத்தும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகியிருந்தது. இதில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திடீரென தூக்கிபோட்ட பின் வீல்... கட்டுக்கடங்காமல் மரத்திற்கு மேல் பறந்த கார்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது...

விமானத்தை விஞ்சக்கூடிய வகையில் கார் பறப்பது பார்ப்போரை பதை பதைக்க வைக்கின்ற வகையில் அமைந்திருக்கின்றது. இதுபோன்ற காரணத்தினால்தான் வாகன ஓட்டிகளை எப்போதுமே கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில் பயணிக்குமாறு அரசும், வாகனத்துறை வல்லுநர்களும் அறிவுறுத்துகின்றனர். ஆனால், பெரும்பாலானோர் இந்த விதியை மீறி மின்னல் வேகத்தில் பறக்கின்றனர்.

திடீரென தூக்கிபோட்ட பின் வீல்... கட்டுக்கடங்காமல் மரத்திற்கு மேல் பறந்த கார்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது...

இதன் விளைவாக பல்வேறு இன்னல்களைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகின்றது. கலிஃபோர்னியாவின், ஹைவே 99-இல் அரங்கேறிய இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஆறு அடிக்கும் அதிகமான உயரத்தில் கார் பறந்திருக்கக் கூடும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

திடீரென தூக்கிபோட்ட பின் வீல்... கட்டுக்கடங்காமல் மரத்திற்கு மேல் பறந்த கார்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது...

முன்னதாக சிறிய தடுப்பின் மீது மோதியதன் காரணத்தினாலயே கார் நிலைகுலைந்தது என்றும், அதனாலயே மண் மேட்டின்மீது ஏறி கார் பறந்தது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இதையேதான் வீடியோவும் காண்பிக்கின்றது. புழுதி படர கார் காற்றில் பறந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

திடீரென தூக்கிபோட்ட பின் வீல்... கட்டுக்கடங்காமல் மரத்திற்கு மேல் பறந்த கார்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது...

இந்த சம்பவம் நெடுஞ்சாலையில் அமைந்திருந்த பெட்ரோல் பங்க்கிற்கு அருகில் அரங்கேறியிருக்கின்றது. அந்த பெட்ரோல் பங்க்கில் பொருத்தியிருந்த கேமிராவிலேயே சம்பவம் குறித்த அனைத்து காட்சிகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. சம்பவத்தில் காரில் பயணித்தவர்களுக்கு என்னவாயிற்று என்ற தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

மோசமான பின் விளைவுகளைச் சந்தித்திருக்கக் கூடும் என யூகிக்கப்படுகின்றது. அதேசமயம், காரில் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதேசமயம், கார் முழுவதுமாக அப்பளம் போல் நொறுங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
California Car Speeds Off Highway Catches Fire Caught On Video Details. Read In Tamil.
Story first published: Friday, November 20, 2020, 14:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X