கொரோனா எஃபெக்ட்: கார், பைக் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு!

கொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ள தாக்கத்தால், கார், பைக் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

கொரோனா எஃபெக்ட்: கார், பைக் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு!

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. வல்லரசு நாடுகளே ஆட்டம் கண்டுள்ளன. உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. எனவே, அனைத்து நாட்டு அரசுகளும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளையும், வைரஸ் பரவலையும் தடுக்க போராடி வருகின்றன.

கொரோனா எஃபெக்ட்: கார், பைக் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு!

இந்த நிலையில், கொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ள சமூக தாக்கத்தால், கார், பைக் உள்ளிடட் தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று கோடக் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.

கொரோனா எஃபெக்ட்: கார், பைக் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு!

வைரஸ் பரவும் அச்சத்தால், பொது போக்குவரத்து வாகனங்களிலும், டாக்சிகளிலும் பயணிப்பதை வாடிக்கையாளர்கள் மக்கள் தவிர்க்க துவங்குவர். சொந்தமாக கார், பைக் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு வாகனங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா எஃபெக்ட்: கார், பைக் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு!

கடந்த 2002ம் ஆண்டு நவம்பர் முதல் 2003ம் ஆண்டு ஜூலை வரை சீனாவில் பரவிய சார்ஸ் வைரஸ் தாக்கத்தின்போது, சீனாவின் பொருளாதாரம் சரிந்தது. வைரஸ் தாக்கம் முற்றிலும் குறைந்த பின்னர், சம்பந்தப்பட்ட பகுதிகளில் சீனர்கள் பொது போக்குவரத்தையும், வாடகை கார்களையும் தவிர்த்தனர்.

கொரோனா எஃபெக்ட்: கார், பைக் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு!

வைரஸ் பரவும் அச்சம் காரணமாக, சொந்தமாக கார், பைக் வாங்குவதில் அவர்கள் ஆர்வம் காட்டியதாகவும், இதனால், அந்த நேரத்தில், சீனாவில் வாகன விற்பனை 79 சதவீதம் என்ற அபரிதமான வளர்ச்சி கண்டதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா எஃபெக்ட்: கார், பைக் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு!

சார்ஸ் வைரஸ் சீனாவில் மட்டுமே பரவியது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் உலக அளவில் பரவி உள்ளது. எனவே, பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை உலக அளவில் மக்கள் தவிர்க்க துவங்குவதுடன், சொந்த வாகனங்களில் செல்வதற்கு விரும்பும் வாய்ப்பு உள்ளது.

கொரோனா எஃபெக்ட்: கார், பைக் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு!

இதனால், உலகின் பல்வேறு நாடுகளிலும் கார், பைக் விற்பனை அடுத்த சில மாதங்களில் மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்தியாவில் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளால், வாகனங்களின் விலை கணிசமாக அதிகரிக்கப்படுவதால், வாகன விற்பனை வளர்ச்சி பிற நாடுகளைவிட சற்றே குறைவாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா எஃபெக்ட்: கார், பைக் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு!

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை 6 சதவீதம் அளவுக்கு உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இருசக்கர வாகனங்களின் விற்பனையில் பெரிய முன்னேற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Via- Team BHP

Most Read Articles
English summary
According to a report, People may avoid public transport and will prefer own vehicles like car, bikes due to the Coronavirus fears.
Story first published: Friday, March 27, 2020, 11:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X