காருக்குள் வெடித்த பட்டாசுகள்! மிக மோசமான நாளாக அமைந்த தீபாவளி... வீடியோவ பாக்குறப்பவே பதறுது...

காருக்குள் பட்டாசுகள் வெடித்து சிதறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

காருக்குள் வெடித்த பட்டாசுகள்! மிக மோசமான நாளாக அமைந்த தீபாவளி... வீடியோவ பாக்குறப்பவே பதறுது...

கடந்த 14ம் தேதி அன்று இந்தயாவில் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகைத் தினத்தை முன்னிட்டு பலர் தங்கள் வீட்டு வாசலில் வான வேடிக்கை மற்றும் பட்டாசுக்களை வெடித்து மகிழ்ந்தனர். இந்த நிலையில், தீபாவளி தினத்திற்கு முந்தைய தினம் அரங்கேறியதாக ஓர் சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் உலா வர தொடங்கியுள்ளது.

காருக்குள் வெடித்த பட்டாசுகள்! மிக மோசமான நாளாக அமைந்த தீபாவளி... வீடியோவ பாக்குறப்பவே பதறுது...

அந்த வீடியோவில், நிற்காமல் சென்றுக் கொண்டிருக்கும் கார் ஒன்றில் பட்டாசுகள், புஷ்வானம் (மத்தாப்பு, பூந்தொட்டி) ஆகிய வேடிக்கை பட்டாசுக்கள் வெடிக்கும் காட்சிகள் அடங்கியிருந்தன. இந்த சம்பவம் எப்படி நேர்ந்தது என்ற தகவல் தற்போது வரை கிடைக்கவில்லை. இருப்பினும், சம்பவ இடத்தில் இருந்த அப்பகுதி வாசிகள் சிலர் தெரிவித்ததாவது, காருக்குள் டிரைவருடன் சேர்த்து நான்கு நபர்கள் இருந்ததாகவும், அவர்களில் மூவர் காயமின்றி தப்பித்ததாகவும் கூறினர்.

காருக்குள் வெடித்த பட்டாசுகள்! மிக மோசமான நாளாக அமைந்த தீபாவளி... வீடியோவ பாக்குறப்பவே பதறுது...

அதேசமயம், காரை ஓட்டி வந்த நபருக்கு என்னவாயிற்று என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. கார் மிகவும் பொறுமையான வேகத்தில் நகர்ந்து கொண்டே இருப்பதை நம்மால் காண முடிகின்றது. அத்துடன், பின்பக்க ஜன்னல் வாயிலாக தீ பிழம்புகள் வெளி வந்த வண்ணம் இருந்தன. இதுமட்டுமின்றி, சில வெடிகளும் ஜன்னல் வழியாக வெளியேறி சாலையில் வெடிப்பதையும் வீடியோ காட்டுகின்றது.

காருக்குள் வெடித்த பட்டாசுகள்! மிக மோசமான நாளாக அமைந்த தீபாவளி... வீடியோவ பாக்குறப்பவே பதறுது...

நெஞ்சை பதைப் பதைக்க வைக்கும் இந்த சம்பவம் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ள சாண்ட் கபீர் சாலையில் அரங்கேறியிருக்கின்றது. மின் கசிவு அல்லது காருக்குள் இருந்தவர்கள் யாரேனும் செய்த சிறிய தவறின் காரணாக இந்த தீ விபத்து சம்பவம் நேர்ந்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

காருக்குள் வெடித்த பட்டாசுகள்! மிக மோசமான நாளாக அமைந்த தீபாவளி... வீடியோவ பாக்குறப்பவே பதறுது...

இதுபோன்ற விபரீதமான சம்பவங்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே மக்களை மிகவும் பாதுகாப்பாக பட்டாசுகளைக் கையாளுமாறு அரசுகள் அறிவுறுத்தின. குறிப்பாக, கொரோனா வைரஸ் தடுப்பிற்காக பயன்படுத்தப்படும் கிருமி நாசினிகளைத் தடவிக் கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

காருக்குள் வெடித்த பட்டாசுகள்! மிக மோசமான நாளாக அமைந்த தீபாவளி... வீடியோவ பாக்குறப்பவே பதறுது...

இம்மாதிரியான சூழ்நிலையில் இந்த தீ விபத்து சம்பவம் குஜராத்தில் அரங்கேறியிருக்கின்றது. இது மக்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் தீ விபத்துகள் அதிகமாக காணப்படுகின்றது. மின்சார கசிவு மற்றும் மனிதர்களின் தவறு ஆகியவற்றின் காரணமாகவே பெரும்பாலான தீ விபத்து சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

சென்னையில், இந்த ஆண்டு தீபாவளியின்போது தீ விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன. ஆனால், அதிர்ஷ்டவசமாக தீக்காயங்களுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக்காட்டிலும் குறைவாக இருக்கின்றது. பொதுவாக கார்களில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் எளிதில் தீக்குரையாகக் கூடியவையாகக் காட்சியளிக்கின்றன. எனவேதான், எரிபொருள் நிரப்பும்போது மட்டுமின்றி பிற நேரங்களிலும் மிகவும் கவனத்துடன் கையாளும்படி வாகனத்துறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Car Catches Fire After Diwali Crackers Bursts Inside Rajkot Details. Read In Tamil.
Story first published: Wednesday, November 18, 2020, 18:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X