இன்சூரன்ஸ் க்ளைமிங்கை நிராகரிக்க புது யுக்தியை கையாளும் காப்பீட்டு நிறுவனம்... இது என்ன புது தலைவலி

இன்சூரன்ஸ் கிளைமிங்கை நிராகரிக்க காப்பீட்டு நிறுவனங்கள் புது யுக்தியை கையாளத் தொடங்கியிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இன்சூரன்ஸ் க்ளைமிங்கை நிராகரிக்க புது யுக்தியை கையாளும் காப்பீட்டு நிறுவனம்... இது என்னங்க புது தலைவலியா இருக்கு!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதிலும் பூட்டப்பட்ட நிலையே காட்சியளிக்கின்றது. பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு லேசான தளர்வுகள் வழங்கப்பட்டிருப்பதால் படிப்படியாக இந்திய மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகின்றது. அதேசமயம், வைரஸ் தொற்றின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகின்றது.

இன்சூரன்ஸ் க்ளைமிங்கை நிராகரிக்க புது யுக்தியை கையாளும் காப்பீட்டு நிறுவனம்... இது என்னங்க புது தலைவலியா இருக்கு!

எனவே, மக்கள் வழக்கம்போல் நடமாடுவதற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையே காணமப்படுகின்றது. இருப்பினும், ஒரு சிலர் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். அவ்வாறு, வாகனங்களில் வெளியே வரும் மக்களுக்கு குறிப்பிட்ட நிபந்தனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

இன்சூரன்ஸ் க்ளைமிங்கை நிராகரிக்க புது யுக்தியை கையாளும் காப்பீட்டு நிறுவனம்... இது என்னங்க புது தலைவலியா இருக்கு!

அதனடிப்படையில் மட்டுமே அவர்கள் வெளியேற வர அனுமதிக்கப்படுகின்றது. அதாவது, இருசக்கர வாகனத்தில் ஒருவரும், சிறிய ஹேட்ச் பேக் மற்றும் செடான் ரக கார்களில் ஓட்டுநருடன் சேர்த்து மூவர் மட்டுமே பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவே வாகனங்களில் பயணிப்பதற்கு தற்போது அரசு காட்டியிருக்கும் வழிகாட்டுதல்கள் ஆகும்.

இன்சூரன்ஸ் க்ளைமிங்கை நிராகரிக்க புது யுக்தியை கையாளும் காப்பீட்டு நிறுவனம்... இது என்னங்க புது தலைவலியா இருக்கு!

எனவே, குறிப்பிட்ட அனுமதியைப் பெற்று பணி மற்றும் வேறு பகுதிகளுக்கு மக்கள் போக்குவரத்தை மேற்கொண்ட வருக்கின்றனர்.

இந்நிலையில், பிரபல காப்பீட்டு நிறுவனமான சோழமண்டலம் எம்எஸ், ஊரடங்கு காலத்தில் விபத்தைச் சந்திக்கும் வாகனங்களுக்கு இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாது என அறிவித்துள்ளது.

இன்சூரன்ஸ் க்ளைமிங்கை நிராகரிக்க புது யுக்தியை கையாளும் காப்பீட்டு நிறுவனம்... இது என்னங்க புது தலைவலியா இருக்கு!

காப்பீட்டு நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் அதன் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். வாகனம் சார்ந்து இயங்கும் துறைகள் பல அதன் வாடிக்கையாளர்களைக் கவர்கின்ற வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், சோழமண்டல் காப்பீட்டு நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு அவர்களை சற்றே கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இன்சூரன்ஸ் க்ளைமிங்கை நிராகரிக்க புது யுக்தியை கையாளும் காப்பீட்டு நிறுவனம்... இது என்னங்க புது தலைவலியா இருக்கு!

இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை கடிதம் வாயிலாக அதன் வாடிக்கையாளர்களுக்கு சோழமண்டலம் காப்பீட்டு நிர்வாகம் அனுப்பி வைத்து வருகின்றது. அதில், "பூட்டுதல் (தேசிய ஊரடங்கு) காலத்தில் சட்ட விதிகளை மீறி இயக்கும் வாகனங்கள் விபத்தைச் சந்தித்தால், அவர்களால் இன்சூரன்ஸை க்ளைம் செய்ய முடியாது" என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் க்ளைமிங்கை நிராகரிக்க புது யுக்தியை கையாளும் காப்பீட்டு நிறுவனம்... இது என்னங்க புது தலைவலியா இருக்கு!

அதேசமயம், உரிய அனுமதியுடன் வெளியில் செல்லும்போது விபத்தைச் சந்தித்த வாகனங்கள் மட்டும் இன்சூரன்ஸை க்ளைம் செய்துகொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதாவது, அரசின் இ-பாஸ் எனப்படும் கொரோனா காலத்தில் வெளியே செல்வதற்கு வழங்கப்படும் அனுமதி ரசீதை க்ளைம் படிவத்துடன் இணைத்து வழங்கினால் விபத்தால் ஏற்பட்ட இழப்பை இன்சூரன்ஸ் மூலம் திரும்பப் பெற முடியும்.

இன்சூரன்ஸ் க்ளைமிங்கை நிராகரிக்க புது யுக்தியை கையாளும் காப்பீட்டு நிறுவனம்... இது என்னங்க புது தலைவலியா இருக்கு!

இதனை விளக்கும் வகையில் ஓர் சம்பவம் சமீபத்தில் அரங்கேறியிருக்கின்றது. இளைஞர் ஒருவர் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்ற நேரத்தில் அவரின் விலையுயர்ந்த காரில் பயணித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் விபத்தைச் சந்திக்க நேர்ந்தது. இதற்கான இழப்புகளை இன்சூரன்ஸ் மூலம் திரும்பப் பெறலாம் என எண்ணிய அந்த இளைஞர், சோழமண்டலத்தின் அதிகாரியைத் தொடர்பு கொண்டுள்ளார்.

இன்சூரன்ஸ் க்ளைமிங்கை நிராகரிக்க புது யுக்தியை கையாளும் காப்பீட்டு நிறுவனம்... இது என்னங்க புது தலைவலியா இருக்கு!

இதற்கான படிவம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவரின் வீட்டுக்கு சோழமண்டலம் இன்சூரன்ஸ் நிர்வாகத்திடம் இருந்து ஓர் கடிதம் வந்துள்ளது. அக்கடிதத்தில், அரசிடம் இருந்து அனுமதி பெற்ற இ-பாஸ் சான்றையும் இணைக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. மேலும், இதனை 7 நாட்களுக்கு ஒப்படைக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் க்ளைமிங்கை நிராகரிக்க புது யுக்தியை கையாளும் காப்பீட்டு நிறுவனம்... இது என்னங்க புது தலைவலியா இருக்கு!

இதனைச் செய்யத் தவறினால் க்ளைம் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என திட்டவட்டமாக அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது, ஊரடங்கு உத்தரவு விதி நீடித்து வருவதன் காரணத்தால் வாகனங்களை வெளியே இயக்குவது குற்றமாகும். இந்த விதியை தனது வாடிக்கையாளர்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அதிரடி அறிவிப்பை அது வெளியிட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இன்சூரன்ஸ் க்ளைமிங்கை நிராகரிக்க புது யுக்தியை கையாளும் காப்பீட்டு நிறுவனம்... இது என்னங்க புது தலைவலியா இருக்கு!

இதுகுறித்த தகவலை டீம் பிஎச்பி தள பயனர் வெளியிட்டுள்ளார். மேலும், தற்போது சோழமண்டலம் அனுப்பி வைத்திருக்கும் அந்த கடிதத்தின் நகலையும் அவர் வெளியிட்டிருக்கின்றார்.

சோழமண்டலம் காப்பீட்டு நிர்வாகம் மேற்கொண்டிருக்கும் இதுமாதிரியான நடவடிக்கையை மற்ற காப்பீட்டு நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கின்றதா என்பதுகுறித்த தகவல் வெளியாகவில்லை.

இன்சூரன்ஸ் க்ளைமிங்கை நிராகரிக்க புது யுக்தியை கையாளும் காப்பீட்டு நிறுவனம்... இது என்னங்க புது தலைவலியா இருக்கு!

இருப்பினும், அரசின் கடும் நடவடிக்கை மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் நிராகரிப்பு உள்ளிட்டவற்றில் தப்பிக்க வேண்டுமானால் முன்னெச்சரிக்கையாக இ-பாஸை பெற்று வெளியேச் செல்வது கட்டாயமானதாக இருக்கின்றது. மேலும், பாதுகாப்பு அம்சங்களான கையுறை மற்றும் முகமூடி உள்ளிட்டவற்றையும் அணிந்து செல்வதும் அத்தியாவசியமானதாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 28, 2020, 7:30 [IST]
English summary
Car Insurance Company Cholamandalam To Reject Claim For Driving During Lockdown Period. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+