Just In
- 44 min ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 2 hrs ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 3 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 14 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- Sports
எதிரணி வீரர்களை சீண்டறது கீழ்த்தரமானது.. இதுமூலமா நம்மோட பலவீனம்தான் வெளிப்படும்!
- Movies
திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்!
- Finance
நரேந்திர மோடியின் செம அறிவிப்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..!
- News
காட்டுப்பள்ளி துறைமுக திட்டத்திற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: சிபிஎம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ.250 கோடியில் புதிய விமானம்! எதுக்குனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க! இப்படி ஒன்னு நிச்சயம் தேவை
250 கோடி ரூபாயில் புதிய அதி நவீன விமானம் ஒன்றை வாங்க இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். எதற்காக இந்த புதிய விமானம் என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 250 கோடி செலவில் புதிய அதி நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய விமானம் ஒன்றை வாங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. துள்ளியமான கால நிலையை பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த விமானம் வாங்கப்பட இருக்கின்றது. இதன்மூலம் துள்ளியமான வானிலை மட்டுமின்றி மாசுபாடு பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் இதுகுறித்த தகவலை அறிவியல் & தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதிப்படுத்தினார். இந்த விமானம் அதி நவீன தொழில்நுட்பம் அடங்கியது என்பதால் நாட்டின் வெவ்வேறு பாகங்களின் காலநிலையைக் கூட மிக துள்ளியமாக கணித்து கூற முடியும் என அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வியின் அடிப்படையில் இந்த தகவலை அவர் வெளியிட்டார். "வானிலை முன்னறிவிப்பு தொடர்பாக ஆராயும் வகையில் சிறப்பு விமானத்தை வாங்க அரசு திட்டமிட்டு வருகிறதா?" என உறுப்பினர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "நாட்டில் வளிமண்டல செயல்முறை ஆய்வுகளுக்காக ஒரு சிறப்பு ஆராய்ச்சி விமானத்தை வாங்குவது குறித்து தனது அமைச்சகம் பரிசீலித்து வருவதாக" தெரிவித்தார். தொடர்ந்து, "விஞ்ஞான உபகரணங்களுடன் பொருத்தப்பட்ட இந்த விமானத்தின் விலை ரூ. 250 கோடி ஆகும்" என்றும் அவர் கூறினார்.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளின் வானிலை மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் சிக்கல்களைப் பற்றி ஆராயவும், அதில் உடனடி தீர்வு காண்பதற்கும் இந்த விமானம் பயன்படுத்தப்படும் என்று ஹர்ஷ் வர்தன் கூறினார். அதாவது, மக்களுக்கு இயற்கை பேரிடர் பற்றி உடனடியாக அறிவிப்பு வழங்க மற்றும் துள்ளியமான தரவுகளைப் பெறுவதற்கும் இது உதவும் என குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி காற்று மாசுபாடு மற்றும் அதன் சுகாதாரம், நீரியல் தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்டவற்றிற்கும் இந்த சிறப்பு விமானம் பயன்படும் என கூறப்படுகின்றது. இவற்றைப் பற்றி முன்கூட்டியே அறிவதன் மூலம் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதுடன் மூலம் பெரும் சிக்கல்களை முன்னரே தவிர்க்க முடியும்.

புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐ.ஐ.டி.எம்) இந்த முழு திட்டத்திற்கும் நோடல் ஏஜென்சியாக செயல்படும் என்று அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார். இது புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய தன்னாட்சி அமைப்பாகும்.

இதுவே, சிறப்பு விமானம் சார்ந்த அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் தற்போதைய வானிலை அறிவிப்புகளைக் காட்டிலும் மிகவும் துள்ளியமான தகவலை இந்திய வானிலை அறிவிப்பு மையம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுவாக விமானம் என்றாலே ஊர் விட்டு ஊர் மற்றும் நாடு விட்டு நாடு கடக்கவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கால நிலை மற்றும் காற்றின் மாசை அளக்க விமானமா என்ற கேள்வி பலரின் மத்தியில் எழும்பியுள்ளது.
விமானம் என்றால் இது வழக்கமான விமானத்தைப் போன்று இருக்காது என கூறப்படுகின்றது. அது விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்துவதைப் போன்ற சிறப்பு ஏர்கிராஃப்ட் வடிவத்தைப் பெற்றிருக்கும் என யூகிக்கப்படுகின்றது.

இத்தகைய சிறப்பு விமானமே எதிர்காலத்தில் வானிலை மற்றும் நாம் எந்த மாதிரியான மாசுற்ற பகுதியில் வசித்து வருகின்றோம் என்ற தகவலை வழங்க இருக்கின்றது. மத்திய அரசின் இந்த முயற்சியால் மீனவர்கள் மிகுந்த பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், மக்களும் முன் கூட்டியே மழையில் நனையாமல் இருக்க குடை எடுத்துச் செல்லவும் முடியும். இதுமட்டுமின்றி வாகன ஓட்டிகள் மற்றும் பயணத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் வானிலை தகவலை முன்கூட்டியே துள்ளியமாக அறிந்து கொள்வதால் தங்களின் பிளானில் மாற்றங்களைச் செய்து கொள்ள முடியும்.