"விபத்து நடைபெறுவதே உங்களால்தான்" -போலீஸ் புகாரால் பரபரப்பு! யார்மீதென தெரிஞ்சா நீங்களே ஷாக்காவீங்க!
விபத்து நடைபெறுவதே உங்களால்தான் என பிரபல நிறுவனத்தின் மீது போக்குவரத்து போலீஸார் ஓபன் லெட்டர் ஸ்டேட்மெண்டை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சமீபகாலமாக இந்தியாவில் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் விபத்தினால் 1.51 லட்சம் பேர் பரிதமாபமாக பலியாகியுள்ளனர். ஆகையால், இதனைக் கட்டுபடுத்த பல்வேறு விதிமுறைகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுதான் இருக்கின்றன. இருப்பினும் வாகன ஓட்டிகள் துளியளவும் அதனை மதிப்பதே இல்லை.

ஆகையால், இதற்கு ஒட்டுமொத்தமாக தீர்வு காண வேண்டும் என்பதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் கடுமையான மாற்றங்களை மேற்கொண்டு மத்திய அரசு கடந்த வருடம் அறிமுகம் செய்தது.
இந்த புதிய சட்டத்தில் முன்னதாக காணப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டது.

ஆகையால், முன்னதாக 500 மற்றும் ஆயிரம் ரூபாய் என காணப்பட்ட அபராதத் தொகை 10 ஆயிரம், 20 ஆயிரம் என கடுமையாக உயர்ந்தன. குறிப்பாக, ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது.

இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில் இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், வாகன ஓட்டிகள் தங்களின் சித்து வேலையை தற்போது வரை தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றனர். மேலும், விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர்.

அந்தவகையில், அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் விபத்துகளுக்கு பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனத்தை சண்டிகர் போலீஸார் கைகாட்டி உள்ளனர்.

அது எப்படி நாட்டில் அதிகம் நடைபெறும் விபத்துகளுக்கு சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் காரணமாக இருக்க முடியும் என உங்களுக்கு கேள்வி எழும்பலாம். இந்த விசித்திரமான புகாரைதான் ஓபன் லெட்டராக சண்டிகர் மாநில போலீஸார், அவர்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இணைய வாசிகள் மட்டுமின்றி வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிலவும் அதிர்ச்சியில் உரைந்துள்ளன.

சண்டிகர் போலீஸார் தங்களின் புகாரைத் தொடர்ந்து சில செய்தி நாளிதழின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். அவை, சமீபத்தில் அரங்கேறிய விபத்துகளின் புகைப்படங்கள் ஆகும். இந்த புகைப்படத்தில் காணப்படும் பெரும்பாலான விபத்துகளுக்கு பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்களே காரணம் என கூறப்படுகின்றது.
இதனாலயே, சொகுசு உற்பத்தி கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ போலீஸார் இத்தகைய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் சமீபத்தில்கூட ஓர் சம்பவம் சண்டிகரில் அரங்கேறியது. இதில், சாலையில் சென்றுக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் மீது பிஎம்டபிள்யூ கார் மோதியதில் சைக்கிளை ஓட்டிச் சென்ற 17 சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அதே சைக்கிளில் பின்பக்கதக்தில் அமர்ந்து சென்ற சிறுவனும் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபோன்று, பல்வேறு சம்பவங்கள் பிஎம்டபிள்யூ காரை மையமாகக் கொண்டு அரங்கேறியிருக்கின்றது. இதனாலயே சண்டிகர் போலீஸார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின்மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு 1.51 லட்சம் பேர் விபத்துகளினால் பலியாகியுள்ளனர்.

குறிப்பாக இந்த காரின் அதிக திறன் வெளிப்பாட்டை கருத்தில் கொண்டே சண்டிகர் போலீஸார் இத்தகைய ஓபன் லெட்டர் தகவலை வெளியிட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

ஆனால், இதற்கு கார் உற்பத்தி நிறுவனத்தை நாம் காரணமாக கூறிவிட முடியாது. ஏனென்றால் நாட்டில் உள்ள அனைத்து பிஎம்டபிள்யூ கார்களும் விபத்தை ஏற்படுத்துவதில்லை. நாட்டின் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இத்தகைய சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
மேலும், இது முழுக்க முழுக்க மனித தவறுகளினாலயே நடைபெறும் ஓர் சம்பவம் ஆகும். ஆகையால், வாகனத்தின்மீதோ, வாகன உற்பத்தி நிறுவனத்தின் மீதோ குறை கூறுவது ஏற்புடையதல்ல.

அதேசமயம், சில நேரங்களில் வாகனங்களில் பிரேக் டவுண் ஏற்படலாம். இதற்கு வாகனத்தை முறையாக பராமரிக்காததே முக்கிய காரணம்.
சண்டிகர் போலீஸாரின் இந்த குற்றச்சாட்டுடன் ஓர் கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ கார்கள் அதிவேகத்தில் இயங்கக்கூடியவையாக இருப்பதால் இதனை கட்டுபடுத்த வேண்டி கோரிக்கையாக அது இருக்கின்றது. இத்துடன் கூடுதலாக அவசரகாலங்களில் உதவுகின்ற தொழில்நுட்பங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








