டீசல் கார் - மின்சார வாகனமாக புதிய அவதாரம்... பொழுதுபோகலான இப்படிலாம்கூட செய்வாங்களா?
இளைஞர் ஒருவர் ஆராய்ச்சி மற்றும் பொழுதுபோக்கிற்காக டீசல் எஞ்ஜினுடைய காரை மின்சார வாகனமாக மாற்றியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை உறுதிச் செய்கின்ற வகையில் புதுமுக மின்சார வாகனங்களின் அறிமுகம் இருக்கின்றது. இருப்பினும், மின்சார வாகனங்களின் விற்பனையோ குழந்த பருவத்திலேயே காட்சியளிக்கின்றது. இது வழக்கமான எரிபொருள் வாகனங்களைப் போன்ற விற்பனைப் பெற முடியாமல் தவித்து வருகின்றது.

மின்சார வாகனங்களின் இந்த நிலைக்கு அவற்றிற்கான கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் போதியளவில் இல்லாததே முக்கிய காரணம் இருக்கின்றது. இதுமட்டுமின்றி, புதிய மின்சார வாகனங்களின் விலையோ பட்ஜெட் மற்றும் நடுத்தர வர்த்தகத்தினரால் வாங்கவே முடியாத விலையைக் கொண்டதாக உள்ளது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் டாடா நெக்ஸான் மின்சார கார்.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

இந்தியாவின் மலிவு விலை மின்சார கார் என்றழைக்கப்படும் இது ரூ. 14 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதன் விலையைப் பார்த்தாலே உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் மின்சார வாகனங்களின் விற்பனை இன்றளவும் ஆரம்பநிலையில் இருக்கின்றது என.

இந்த நிலையைப் போக்கும் விதமாகவே சில தனியார் நிறுவனங்கள் குறைந்த விலையில் எரிபொருள் வாகனங்களை மின் வாகனங்களாக மாற்றி வருகின்றன.
அந்தவகையில் ஓர் மாற்றத்தைப் பெற்ற செவ்ரோலட் நிறுவனத்தின் பீட் காரைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கிவிருக்கின்றோம்.

ஆனால், இங்கே ஹேமங்க் தபாதே என்ற இளைஞர் ஆராய்ச்சி மற்றும் பொழுதுபோக்கிற்காக எரிபொருள் (ஐசிஇ எஞ்ஜினுடைய) வாகனங்களை மின் வாகனங்களாக மாற்றி வருகின்றார். இதனடிப்படையிலேயே, டீசலால் இயங்கும் செவ்ரோலெட் பீட் தற்போது மின்சார வாகனமாக மாறியிருக்கின்றது. இதுகுறித்த தகவலை டீ-பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது.

பெரும்பாலான நிறுவனங்கள் வருமானத்தை ஈட்டுவதற்காகவே வாகனங்களை இதுமாதிரி மாற்றி வடிவமைத்து வருகின்றன. ஆனால், ஹேமங்க்-கோ பொழுதுபோக வேண்டும் என்பதற்காக வாகனங்களை மாடிஃபை செய்து வருவதாகக் கூறப்படுகின்றது. அதேசமயம், வெளிநபர் அல்லாத அவருடைய குடும்பத்தாரின் கார்களே மட்டுமே அவர் மின்சார எஞ்ஜினுடைய வாகனமாக அப்கிரேட் செய்து வருகின்றார்.

ஆனால், தற்போது முழுமையான மின்சார வாகனமாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் செவ்ரோலெட் பீட், ஹேமங்க் தினசரி பயன்படுத்தும் வாகனகளில் ஒன்றாக இருக்கின்றது. இது நல்ல தரத்தில் இருந்த கார் என அவர் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப காரும் அதிகபட்சமாக 47,000 கிமீ தூரம் வரை மட்டுமே ஓடியிருப்பதாக அதன் ஓடோமீட்டர்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையிலேயே, கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த செவ்ரோலெட் பீட் காரின் 1.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் அகற்றப்பட்டு, மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் மாற்றத்துடன் சில தொழில்நுட்ப அம்சங்களையும் அவர் கூடுதலாக சேர்த்துள்ளார். இதனால், இந்தியாவின் முதல் மின்சார செவ்ரோலெட் பீட் என்ற பட்டத்தை அது சூடியுள்ளது.

இந்த பரிணாம மாற்றத்தால் அக்-கார் அதிகபட்சமாக 75 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றதாக மாறியிருக்கின்றது. இதுவே, மணிக்கு 100 கிமீ என்ற அதிகபட்ச வேகத்தை தொடும்போது அது கூடுதலாக 25 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் என ஹேமங்க் தெரிவித்துள்ளார்.

காரின் எரிபொருள் எஞ்ஜின் நீக்கப்பட்டதோடு அதன் கிளட்ச் சிஸ்டமும் எம்சியூ யூனிட்டைக் கொண்டு ரீபிளேஸ் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இதன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் 2-ஸ்பீடாக குறைந்துள்ளது. இதில் முதல் கியர், காரின் ஆரம்பநிலை இயக்கத்தின்போதும், சில கிமீ வேகத்தைத் தொட்டபின் இரண்டாவது கியரும் பயன்படுத்தப்படுகின்றது.
இருப்பினும், இரண்டாவது கியரை காரின் ஆரம்பநிலை இயக்கத்தின்போதும்கூட பயன்படுத்தலாம் என ஹேமங்க் கூறுகின்றார். எந்தவொரு உதவியுமின்றி தன்னுடைய கை வண்ணத்தினாலயே சொந்த காரை அப்கிரேட் செய்த இவர், இக்காருக்கு 15கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி பேக்கைக் கொடுத்துள்ளார். இந்த பேட்டரிகள் ப்யூவல் டேங் இருந்த இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இத்துடன், இந்த பேட்டரிகளை சார்ஜ் செய்ய ரெகுலர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் அவர் இணைத்திருக்கின்றார். எனவே, எந்த மாதிரியான சார்ஜிங் நிலையத்தில் வைத்தும் இக்காரை சார்ஜ் செய்துகொள்ளலாம். அந்தவகையில், வழக்கமான சார்ஜிங் போர்ட்டில் வைத்து மின்சார சக்தியை ஏற்றும்போது முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரங்கள் பிடிக்கும் என கூறப்படுகின்றது.

ஆனால், ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் வைத்து சார்ஜ் செய்தால் 45 நிமிடங்களே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழுமையான சார்ஜ் மூலம் 115 கிமீ தூரம் வரை செல்ல முடியும். அதுவே, ஏசி மற்றும் ஹெட்லைட் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தினால் 95 கிமீ ரேஞ்சை மட்டுமே இக்கார் வழங்கும்.

இதுமாதிரியான மாடிஃபிகேஷன்களுக்கு இந்திய மோட்டார் வாகன சட்டம் அனுமதியளிப்பதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், அரசிடம் உரிய அனுமதி பெற்று இயக்கலாம் என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் சுற்றுப்புறச் சூழலைக் கருத்தில் கொண்டு மோட்டார் வாகன சட்டம் இதற்கு அனுமதியளித்து வருகின்றது. ஆனால், தனி நபர் மாடிஃபிகேஷனுக்கு எம்மாதிரியான அங்கீகாரம் கிடைக்கும் என்பது பற்றிய தகவல் எங்களிடத்தில் இல்லை.


Click it and Unblock the Notifications








