இந்திய வருகையை ரத்துசெய்த சீன பிரதிநிதிகள்.. இதன் பின்னணியில் என்ன இருக்கு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க
ஒரு பகீர் பின்னணியின் காரணமாக சீன பிரதிநிதிகள் இந்திய வருகையை ரத்து செய்துள்ளனர். இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா வைரஸின் தாக்கம் சீனாவிலேயே கடுமையாக காணப்பட்டாலும், உலக நாடுகள் அனைத்தும் பெரும் அச்சத்தில் உரைந்துள்ளன. இதற்கு, இந்த வைரஸ் தாக்கம் உள்ள நபர் ஒருவரை தொடுவது மற்றும் மற்றொருவரிடம் பேசுவதன் மூலமாகவே நான்கு பேருக்கும் அதிகமாக மிக எளிதில் பரவும் என்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஆகையால், சீனா மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் கடும் பீதியில் உள்ளது.

குறிப்பாக இந்த வைரஸ் தாக்கம் அடையும் நபர் பாதிக்கப்பட்ட 15 நாட்களுக்குள்ளாகவே நுரையீரல் பாதிக்கப்பட்டு இறக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாக கூறப்படுகின்றது. மேலும், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து காப்பதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்ற பதில் கூடுதல் கவலையளிக்கும் வகையில் உள்ளது.
ஆனால், இந்தியாவில் உள்ள ஒரு சில சித்த மருத்துவர்கள் இதற்கு மாற்று மருந்து இருப்பதாக ஆறுதல் வார்த்தை கூறி வருகின்றனர்.

இருப்பினும், உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் சர்வதேச விமான நிலையங்களை தீவிர கண்கானிப்பு வளைத்திற்குள் கொண்டு வந்துள்ளன. வேறொரு நாட்டில் இருந்து நுழையும் புதிய நபர்கள் கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த வைரஸ் மிக விரைவில் ஒவ்வொருவர் மீதும் அதி சுலபமாக பரவும் என்பதே இத்தகைய கட்டுப்பாட்டிற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.
இந்த வைரஸின் தாக்கம் சீனாவில் மிக அதிகளவில் காணப்படுவதால் அங்கு செல்வதற்கும், அந்நாட்டில் இருந்து வெளிநாடு சுற்றுலா செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்படும் வுஹான் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. அதிலும், வுஹான் சொந்த நாட்டிலேயே தனி தீவாக பிரிக்கப்பட்டு கடுமையாக கண்கானிக்கப்பட்டு வருகின்றது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது.

இந்நிலையில், இம்மாதம் நொய்டாவில் நடைபெறவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் கலந்துக்கொள்ள இருந்ததைப் சீன வாகன உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் தவிர்த்திருக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, அவர்களின் விமான பயணத்திற்கான அனுமதி சீட்டு உள்ளிட்டவை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ள ஆட்டோ எகனாமிக் டைம்ஸ் தளம், இதற்கு கொரோனா வைரஸின் தாக்கமே முக்கிய காரணமாக இருக்கின்றது என்று கூறியுள்ளது. ஆகையால், அவர்களின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கின்றது.

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆட்டோ எக்ஸ்போ நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், நடப்பு 2020ம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ நொய்டாவில் நடைபெற உள்ளது. வருகின்ற வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) தொடங்கும் இந்த கண்காட்சி 12 பிப்ரவரி 2020 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதில், பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் புதுமுக வாகனங்களை அறிமுகம் செய்ய ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றன.
அதில், சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களும் சேரும்.

ஆனால், சீனாவில் தற்போது அசாதரணமான சூழல் நிலவி வருகின்றது. கொரோனா பாதிப்பால் அந்நாடே செய்வதறியமால் திகைத்துபோய் நிற்கின்றது. மேலும், வைரஸ் தாக்கம் அதிகம் காணப்படும் இடங்கள் தற்போது முழுமையாக முடங்கிபோய் நிற்கின்றது.

இந்தசூழ்நிலையின் காரணமாக சீனா நாட்டின் மிக முக்கியமான வாகன உற்பத்தி நிறுவனங்களான எம்ஜி, கிரேட் வால் மோட்டார்ஸ், பிஒய்டி மோட்டார்ஸ், சங்கன் மற்றும் எஃப்ஏடபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் புதிய வாகனங்களின் அறிமுகத்தை ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அனைத்து நிறுவனங்களும், இந்தியாவில் புதிய வாகனங்களை அறிமுகம் செய்வது மட்டுமின்றி புத்துணர்வுடன் கால் தடம் பதிக்கவும் எண்ணி வந்தன. ஆனால், கொரோனா வைரஸின் தாக்கம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தற்போது சைனாவில் பல ஆயிரம் பேருக்கு இந்த வைரஸின் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, 18-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், இது சீனா மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது.
ஆனால், தற்போது வரை சீனாவே கடுமையான தாக்குதலை அடைந்த நாடாக கருதப்படுகின்றது.

சீன நிறுவனத்தின் இந்த முடிவால் நடப்பாண்டு வாகன கண்காட்சியில் அதிகம் உள்ளூர் வாகனங்களே காட்சியளிக்க இருக்கின்றது. இத்துடன், ஒரு சில வெளிநாட்டு தயாரிப்புகளும் காட்சியளிக்கும். ஏற்கனவே, ஒரு சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்துவதன் காரணமாக ஆட்டோ எக்ஸ்போவை புரக்கணிக்க இருப்பதாக அறிவித்திருந்தன.

இந்த சூழ்நிலையில் சீன நிறுவனமும் கொரோனா வைரஸின் காரணமாக பின் வாங்கியிருப்பதால் 2020 ஆட்டோ எக்ஸ்போவின் நிலை எப்படியிருக்கும் என்பது கேள்விக் குறியாகியுள்ளது. அதேசமயம் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் புதிய தயாரிப்புகள் கண்காட்சிக்கு பொலிவூட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம், சீன பிரதிநிதிகளின் வருகை ரத்தானது வாகனங்களின் காட்சிப்படுத்துதலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற தகவலும் பரவிய வண்ணம் இருக்கின்றது. ஆகையால், திட்டமிட்டபடி வாகனங்களின் அறிமுகத்தை இந்திய பிரதிநிதிகளை வைத்து சீன நிறுவனங்கள் மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








