2020 மாடலில் வெளிவந்தது 'சைனீஸ் ஆக்டோவியா'... ஃபோக்ஸ்வேகனை அசர வைத்த சீன நிறுவனம்...

சீன வாகன உற்பத்தி நிறுவனமான பவுஜன், சைனீஸ் ஆக்டோவியா என்ற புனைப் பெயருடைய ஆர்சி-5 செடான் மாடலின் 2020 வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டூப்ளிகேட் கார்

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் பவுஜன் வாகன தயாரிப்பு நிறுவனம் அதன் பிரபல ஆர்சி-5 எனும் செடான் ரக காரின் 2020 மாடலை அந்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரை உலக வாகன சந்தை அனைத்தும் 'சீனர்களின் ஆக்டோவியா' எனும் பட்ட பெயரை வைத்து அழைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

ஆம், சீன நிறுவனமான புவுஜன் தயாரிக்கும் இந்த காரானது, உலக ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்து வரும் ஆக்டோவியா மாடலின் காப்பி வெர்ஷனாக உள்ளது.

எனவேதான் பவுஜன் ஆர்சி-5 ஃபாஸ்ட்பேக் செடான் ரக காரை 'சீன ஆக்டோவியா' என அழைக்கின்றனர்.

பவுஜன் நிறுவனமானது சீனாவின் முக்கிய நிறுவனங்களான செயிக் மோட்டார், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் முல்லிங் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வாகனங்களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், இம்மூன்று நிறுவனங்களின் இணைவில் தயாரிக்கப்பட்டதுதான் ஆர்சி-5 ஃபாஸ்ட்பேக் செடான். இந்த காரும் ஃபோக்ஸ்வேகன் ஆக்டோவியா மாடலும் பார்ப்பதற்கு ட்வின்ஸைப் போன்று காட்சியளிக்கும். குறிப்பாக, இவ்விரு கார்களுக்கும் இடையே பல ஒற்றுமையான விஷயங்கள் காணப்படுகின்றன.

அதாவது, ரியர் விண்ட் ஷீல்ட் மற்றும் சிங்கிள் யூனிட் பூட் திறப்பு உள்ளிட்டவை ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றது.

டூப்ளிகேட் கார்

அதாவது, ஆடி ஆர்எஸ்7 மாடல்களில் காணப்படுவதைப் போன்ற சரிவான ரியர் விண்ட் ஷீல்டுகள் இந்த கார்களுக்கு இடையே ஒற்றுமையானதாக இருக்கின்றது. இவ்வாறு சரிவு முகம் கொண்டிருக்கும் ரியர் விண்டு ஷீல்ட் கொண்ட காரைதான் ஃபாஸ்ட்பேக் என குறிப்பிடுகின்றோம்.

அந்த விண்ட் ஷீல்டுகள் கூரை பகுதியில் தொடங்கி நேரடியாக ரியர் மின் விளக்கு பகுதி வரை இருக்கும்.

மற்ற ஹேட்ச்பேக் கார்களில் இதுபோன்ற ரியர் பகுதியைக் காண முடியாது. அதாவது, ஹேட்ச்பேக் கார்களின் பின்பக்க விண்ட் ஷீல்ட் தனியாகவும், பூட்லிட் தனியாகவும் இருக்கும். ஆனால், ஃபாஸ்ட்பேக் செடான் கார்களில் பூட் கதவாகவே ரியர் விண்ட் ஷீல்டு தயார் செய்யப்பட்டிருக்கும்.

இந்த அமைப்பைதான் ஃபோக்ஸ்வேகன் ஆக்டோவியாவுடன் ஒத்துப் போகும் வகையில் பவுஜன் ஆர்சி-5 பெற்றிருக்கின்றது. இதுதான் இந்த காரின்மீது விமர்சனத்தை வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதுமட்டுமின்றி மேலும் பல அம்சங்கள் இவ்விரு கார்களுக்கும் இடையே ஒத்துப் போகும் வகையில் அமைந்திருக்கின்றது. அதாவது, உடல் அமைப்பு முதல் காரின் நீளம் வரை பல அம்சங்கள் ஒரே மாதிரியானதாக உள்ளது.

இருப்பினும், எஞ்ஜின் போன்றவற்றில் இந்த கார் மாறுபட்டதாக இருக்கின்றன. அந்தவகையில், 2020 பவுஜன் ஆர்சி-5 காரில் இரு விதமான எஞ்ஜின் தேர்வு வழங்கப்படுகின்றது. அவையிரண்டும் பெட்ரோல் எஞ்ஜின்கள் ஆகும். அவை, 1.5 லிட்டர் NA மற்றும் 1.5 லிட்டர் டர்போ ஆகும்.

இதில், வழக்கமான எஞ்ஜின் 99 பிஎச்பி பவரையும், டர்போ எஞ்ஜின் 147 பிஎச்பி பவரையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

டூப்ளிகேட் கார்

உண்மையில் பவுஜன் நிறுவன தயாரிப்புகள் பல சீனாவில் விலையுயர்ந்த மாடல்களாக விற்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஆர்சி-5 மாடலும் அதிக விலைக் கொண்ட மாடலாக களமிறக்கப்படலாம் என தெரிகின்றது. அந்தவகையில் இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம் விலையில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அதிகபட்ச விலைக்கேற்ப கூடுதல் சிறப்பு வசதிக் கொண்ட மாடலாக ஆர்சி-5 காரை பவுஜன் தயாரித்திருக்கின்றது.

அதாவது, பவுஜன் ஆர்சி-5 மாடல் அதன் மூதாதையாரன ஆர்எஸ்-5 க்ராஸோவர் மாடலை தயாரிக்கும் அதே பிளாட்பாரத்தில் வைத்துதான் தயாரிக்கப்பட்டு வருகின்றது. எனவே, இதன் நீளம், அகலம் மற்றும் உயரம் அனைத்தும் ஆர்எஸ்-5 க்ராஸோவரை ஒத்ததாக இருக்கின்றது. வீல் பேஸும் கூட ஒரே மாதிரியானதாக இருக்கின்றது.

சீன நிறுவனம் இதுபோன்று காப்பி வெர்ஷனாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களைத் தயாரிப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக பல உலக புகழ்வாய்ந்த மாடல்களை அவை டூப்ளிகேட் செய்து சீனாவில் அறிமுகம் செய்திருக்கின்றன. இதனால் வீண் சிக்கலிலும் அந்த நிறுவனங்கள் சிக்கியிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, May 8, 2020, 6:30 [IST]
English summary
Chinese Octavia 2020 Unveiled. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+