டெல்லியில் சிட்ரோன் நிறுவனத்தின் புதிய கார் ஷோரூம் விரைவில் திறப்பு

அடுத்த ஆண்டு இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருக்கும் சிட்ரோன் கார் நிறுவனம் தனது புதிய கார் ஷோரூமை டெல்லியில் அமைத்து வருவது தெரிய வந்துள்ளது.

டெல்லியில் சிட்ரோன் நிறுவனத்தின் புதிய கார் ஷோரூம் விரைவில் திறப்பு

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் தனது கீழ் செயல்படும் சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் விரைவில் கார் விற்பனையை துவங்க இருக்கிறது. இந்த ஆண்டு சிட்ரோன் நிறுவனத்தின் முதல் கார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, சிட்ரோன் பிராண்டின் முதல் கார் மாடல் அறிமுகம் தள்ளிப்போய் வருகிறது.

டெல்லியில் சிட்ரோன் நிறுவனத்தின் புதிய கார் ஷோரூம் விரைவில் திறப்பு

இந்த நிலையில், அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் வர்த்தகத்தை முறைப்படி வர்த்தகத்தை துவங்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது சிட்ரோன் நிறுவனம். நாட்டின் முக்கிய நகரங்களில் கார் ஷோரூம்களை அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

டெல்லியில் சிட்ரோன் நிறுவனத்தின் புதிய கார் ஷோரூம் விரைவில் திறப்பு

அதன்படி, டெல்லியில் உள்ள நரைனா என்ற பகுதியில் தனது புதிய கார் ஷோரூமை அமைக்கும் பணிகளில் சிட்ரோன் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான படம் ஒன்று டீம் பிஎச்பிதளம் மூலமாக வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்த ஷோரூம் திறப்பு விழாவும் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

டெல்லியில் சிட்ரோன் நிறுவனத்தின் புதிய கார் ஷோரூம் விரைவில் திறப்பு

டெல்லி தவிர்த்து, நாட்டின் இதர முக்கிய நகரங்களிலும் ஷோரூம்களை அமைக்கும் பணியில் சிட்ரோன் ஈடுபட்டுள்ளது. முதல் மாடலாக சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டெல்லியில் சிட்ரோன் நிறுவனத்தின் புதிய கார் ஷோரூம் விரைவில் திறப்பு

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஞ்சு நாட்டு டிசைன் கைப்பக்குவத்துடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

டெல்லியில் சிட்ரோன் நிறுவனத்தின் புதிய கார் ஷோரூம் விரைவில் திறப்பு

இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 128 பிஎச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும்.

டெல்லியில் சிட்ரோன் நிறுவனத்தின் புதிய கார் ஷோரூம் விரைவில் திறப்பு

இந்த இரண்டு எஞ்சின் தேர்வுகளுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.

டெல்லியில் சிட்ரோன் நிறுவனத்தின் புதிய கார் ஷோரூம் விரைவில் திறப்பு

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை அடுத்து மூன்று புதிய கார் மாடல்களை இந்தியாவில் வரிசை கட்ட சிட்ரோன் திட்டமிட்டுள்ளது. ஒரு காம்பேக்ட் எஸ்யூவி, ஒரு பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மற்றும் காம்பேக்ட் செடான் கார் மாடல்களை இந்தியா கொண்டு வரும் என்று தெரிகிறது.

Most Read Articles

மேலும்... #சிட்ரோவன் #citroen
English summary
Ahead of the brand's first product arrival, Team-BHP has released images of an upcoming Citroen showroom in India. The new Citroen dealership is said to be situated in the Naraina area of Delhi and will be one of the first showrooms of the French brand in the country.
Story first published: Wednesday, December 30, 2020, 17:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X