Just In
- 4 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கேரளாவை ரோல் மாடலாக காட்டி புதிய விதியை அமல்படுத்திய மாநிலம்... எந்த மாநிலம் - அது என்ன விதி என தெரியுமா..?
கேரளாவை ரோல் மாடலாகக் காட்டி புதிய விதி ஒன்றை குறிப்பிட்ட மாநிலம் ஒன்று அமல்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வாகனங்கள் சார்ந்து ஒவ்வொரு நாளும் புதிய புதிய சட்டங்களும், விதிகளும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தற்போது வாகனங்களின் இருப்பிடத்தை கண்டறியக் கூடிய ஜிபிஎஸ் தொழில்நுட்ப கருவியை இந்தியாவின் குறிப்பிட்ட மாநிலம் ஒன்று கட்டாயப்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநில அரசே இந்த புதிய விதியை அறிவித்துள்ளது. இந்த புதிய விதி வணிக ரீதியாக இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதன்படி, கால் டாக்சி சேவையில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள், லாரிகள் மற்றும் டிரக்குகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக வாகனங்களில் இது கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில போக்குவரத்து ஆணையர் அவினாஷ் தக்னே கூறியதாவது, "ஜிபிஎஸ் கருவிகள் வாகனங்களின் நடமாட்டத்தைக் கண்கானிக்க உதவும். மேலும், போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கவும் இது உதவும். தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. அங்கு ஜிபிஎஸ் கருவியின் மூலம் செய்த கண்காணிப்பில் பல முறைகேடான ஓட்டுநர்கள் கண்டறியப்பட்டிருக்கின்றனர்"

"இதனை மாநிலத்தில் செயல்படுத்துவதன் மூலம் இங்கும் விதிமீறல்கள் கட்டுக்குள் கொண்டுவரப்படும். மேலும், வாகனங்களையும் எளிதில் கண்கானிக்க முடியும். ஒரு வாகனம் நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்கிறதா அல்லது விதிகளை மீறி செயல்படுகிறதா என்பதை மிக சுலபமாக அறிந்து கொள்ள முடியும்".

"அவ்வாறு, ஓர் வாகனம் விதிமீறலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அதே வழியில் இருக்கும் போக்குவரத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்படும். அவர் உடனடியாக வாகனத்தைக் கண்டறித்து அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பார். இது பெரும் குற்ற சம்பவங்களைக் கூட களையெடுக்க உதவும்" என்றார்.

இந்த புதிய விதியைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களையும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் மூலமாக மட்டுமே ஜிபிஎஸ் கருவி வாங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த கருவிகள் நேரடியாக மஹாராஷ்டிரா போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். அங்கு வாகனங்கள் அனைத்து இயக்கமும் கண்கானிக்கப்பட இருக்கின்றது.

இந்த கருவியைப் பொருத்தவதன் மூலம் வாகனதிருட்டு போன்ற கசப்பான சம்பவங்களைக் கூட தடுக்க முடியும். எனவேதான் தற்போது விற்பனைக்கு வரும் புதிய வாகனங்களி இந்த கருவியை வாகன உற்பத்தி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

அந்தவகையில், குறிப்பாக புதிதாக விற்பனைக்கு வரும் மின்சார வாகனங்களில் இக்கருவி கட்டாயம் இடம்பெற்றுவிடுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோன்று புதுமுக விலையுயர்ந்த கார்களிலும் இக்கருவி இடம்பெற்றுவிடுகின்றது. அதேசமயம், சந்தையில் மிக குறைந்த விலையில் இக்கருவிகள் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன.
குறிப்பு: புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.