விற்பனையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உடன் நேருக்கு நேர் மோதும் கியா சொனெட்!! வென்யூவை முந்தியது

சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் தற்சமயம் ட்ரெண்டிங்கில் இருப்பவை. இதனால் இந்த பிரிவுக்குள் இருக்கும் கார்களுக்குள் போட்டி தீவிரமாக இருக்கும். அது கடந்த 2020 அக்டோபர் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனையான காம்பெக்ட் எஸ்யூவி கார்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உடன் நேருக்கு நேர் மோதும் கியா சொனெட்!! வென்யூவை முந்தியது

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா அதிகளவில் இந்தியாவில் விற்பனையாகும் காம்பெக்ட் எஸ்யூவி கார் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. முந்தைய 2020 செப்டம்பர் மாதத்தை காட்டிலும் 30 சதவீதம் அதிகமாக கடந்த மாதத்தில் மட்டும் இந்த கார் 12,087 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

விற்பனையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உடன் நேருக்கு நேர் மோதும் கியா சொனெட்!! வென்யூவை முந்தியது

புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவின்போது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்தது மட்டுமில்லாமல் கடந்த மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள் வரிசையில் ஒன்பாவது இடத்திலும் இந்த மாருதி கார் உள்ளது.

விற்பனையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உடன் நேருக்கு நேர் மோதும் கியா சொனெட்!! வென்யூவை முந்தியது

இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியாவில் மிக சமீபத்தில், செப்டம்பர் மாதத்தில் அறிமுகமான கியா சொனெட் உள்ளது. முன்பதிவுகள் இந்த காருக்கு குவிந்த வருவதை வைத்தே செல்டோஸிற்கு பிறகு சொனெட்டின் மூலம் கணிசமான விற்பனைகளை கியா மோட்டார்ஸ் நிறுவனம் பெறவுள்ளது என்பது உறுதியாகிவிட்டது.

விற்பனையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உடன் நேருக்கு நேர் மோதும் கியா சொனெட்!! வென்யூவை முந்தியது

இதனை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் 11,721 யூனிட் சொனெட் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் வளர்ச்சியினால் ஹூண்டாயின் வென்யூ மூன்றாவது இடத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

விற்பனையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உடன் நேருக்கு நேர் மோதும் கியா சொனெட்!! வென்யூவை முந்தியது

ஐஎம்டி தொழிற்நுட்பம் என்ற பெரிய அப்கிரேடை வென்யூவில் ஹூண்டாய் நிறுவனம் கொண்டுவந்தாலும், சொனெட்டிற்கு முன்னால் இந்த கார் தோற்றுவிட்டது. கடந்த மாதத்தில் 9,020 வென்யூ கார்களை ஹூண்டாய் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. அதுவே 2020 செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 8,469 ஆக இருந்தது.

விற்பனையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உடன் நேருக்கு நேர் மோதும் கியா சொனெட்!! வென்யூவை முந்தியது

சொனெட், அர்பன் க்ரூஸர் போன்ற புதிய அறிமுகங்களினால் டாடா நெக்ஸானின் விற்பனை ஊரடங்கிற்கு பிறகு பெரிய அளவில் வளர்ச்சி பெறாமலேயே உள்ளது. 2020 செப்டம்பரில் 6000-க்கு அதிகமான நெக்ஸான் கார்கள் விற்பனையான நிலையில் 2020 அக்டோபரில் 6,882 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உடன் நேருக்கு நேர் மோதும் கியா சொனெட்!! வென்யூவை முந்தியது
Rank Model Oct'20 Oct'19 Growth (%)
1 Maruti Vitara Brezza 12,087 10,227 18
2 Kia Sonet 11,721 0 -
3 Hyundai Venue 8,828 8,576 3
4 Tata Nexon 6,888 4,438 55
5 Mahindra XUV300 4,882 3,045 60
6 Ford Ecosport 4,599 4,326 6
7 Toyota Urban Cruiser 3,006 0 -
8 Honda WR-V 1,100 1,367 -20
9 Mahindra TUV300 - 1,246 -

மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முறையே ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் உள்ளன. இவற்றின் விற்பனை எண்ணிக்கைகள் 4,500-க்கும் சற்று அதிகமானவைகளாக உள்ளன. சொனெட் போன்று சமீபத்திய அறிமுகமான டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி 3,000-க்கும் அதிகமான விற்பனை எண்ணிக்கையை கடந்த மாதத்தில் பெற்றுள்ளது.

விற்பனையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உடன் நேருக்கு நேர் மோதும் கியா சொனெட்!! வென்யூவை முந்தியது

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த டொயோட்டா காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.8.40 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. செப்டம்பர் மாதத்தில் அறிமுகமானாலும் அதன் முழு முதல் மாதம், 2020 அக்டோபர் தான். விரைவில் நிஸானின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரான மேக்னைட் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. விற்பனை போட்டியும் மேலும் தீவிரமடையவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 5, 2020, 8:30 [IST]
English summary
Compact SUV Sales Ocotober 2020
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+