விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது

இந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகின்றன. இதில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது

இந்த சூழலில் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா முதல் இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜூலை மாதம் 7,807 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 5,302 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதாவது 2,505 கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இது 47.25 சதவீத வளர்ச்சியாகும். இரண்டாவது இடத்தை ஹூண்டாய் வெனியூ பிடித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனமானது கடந்த ஜூலை மாதம் 6,734 வெனியூ கார்களை விற்பனை செய்துள்ளது.

விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது

ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9,585 வெனியூ கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. 2,851 கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 29.74 சதவீத வீழ்ச்சியாகும். 3வது இடத்தை இந்தியாவின் பாதுகாப்பான கார்களில் ஒன்றான டாடா நெக்ஸான் பிடித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 4,327 டாடா நெக்ஸான் கார்கள் விற்பனையாகியுள்ளன.

விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 3,344 நெக்ஸான் கார்களை மட்டுமே டாடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. 983 கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ள நிலையில், 29.40 சதவீத வளர்ச்சியை நெக்ஸான் பதிவு செய்துள்ளது. இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான கார் என்ற பெயரை பெற்றுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300 நான்காவது இடத்தை பெற்றுள்ளது.

விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 4,464 எக்ஸ்யூவி300 கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பாண்டு ஜூலை மாதம் 2,519 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. 1,945 கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 43.57 சதவீத வீழ்ச்சியாகும். 5வது இடம் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காருக்கு கிடைத்துள்ளது.

விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது

கடந்தாண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஜூலை மாதம் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் விற்பனை 22.28 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பாண்டு ஜூலை மாதம் 2,438 ஈக்கோஸ்போர்ட் கார்களை மட்டுமே ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 3,137 ஈக்கோஸ்போர்ட் கார்கள் விற்பனையாகியிருந்தன. 699 கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன.

விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் வரும் மாதங்களில் போட்டி அனல் பறக்க போகிறது. ஏனெனில் பல்வேறு புதிய தயாரிப்புகள் இந்த செக்மெண்ட்டில் களமிறங்கவுள்ளன. இதில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் கியா சொனெட் ஆகிய இரண்டு கார்களும் இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை பெரிதும் தூண்டியுள்ளன.

விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது

டொயோட்டா-சுஸுகி ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்திருப்பது தெரிந்த விஷயம்தான். இதன்படி டொயோட்டா நிறுவனமானது, மாருதி சுஸுகி கார்களை தனது பெயரில் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வருகிறது. முதலில் மாருதி சுஸுகி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் க்ளான்சா என்ற பெயரில் விற்பனைக்கு வந்தது.

விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது

இந்த வரிசையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் டொயோட்டா பிராண்டில் அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. மறுபக்கம் கியா நிறுவனம் செல்டோஸ், கார்னிவல் கார்களை தொடர்ந்து சொனெட் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த 2 கார்களும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 5, 2020, 0:11 [IST]
English summary
Compact SUV Sales Report For July 2020. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+