ஒரு பக்கம் உதவி - மறுபக்கம் ஆப்பு... கொரோனா போதாதென்று கூடுதல் துயரத்தை ஏற்படுத்திய டெஸ்லா..!

ஒரு பக்கம் உதவியை வாரி வழங்கி வரும் டெஸ்லா நிறுவனம் மறுபக்கம் அதிர வைக்கின்ற அளவிற்கு தகவலை வெளியிட்டு வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஒரு பக்கம் உதவி - மறுபக்கம் ஆப்பு... கொரோனா போதாதென்று கூடுதல் துயரத்தை ஏற்படுத்திய டெஸ்லா..!

கொரோனா வைரசின் கோர பிடியில் சிக்கி உலக நாடுகள் பல பல்வேறு பின் விளைவுகளைச் சந்தித்து வருகின்றன. முக்கியமாக இந்த வைரஸ் ஒட்டுமொத்த மனித இனத்திற்கே குந்தகம் விளைவிக்கின்ற வகையில் உலகம் முழுவதிலும் பரவிக் காணப்படுகின்றது. எனவே, இந்த வைரசால் புது புது பிரச்னைகள் உருவாகிய வண்ணமே இருக்கின்றது. மனிதர்களை மட்டுமின்றி உலகின் சில முக்கியத்துதுறைகளை அது சின்னாபின்னமாக்கியுள்ளது.

ஒரு பக்கம் உதவி - மறுபக்கம் ஆப்பு... கொரோனா போதாதென்று கூடுதல் துயரத்தை ஏற்படுத்திய டெஸ்லா..!

குறிப்பாக, வாகனத்துறையை சற்று கூடுதலாகவே அது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. கொரோனா அச்சம் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு நிலவுவதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. பெரும்பாலான நாடுகளில் மக்கள் நடமாற்றத்திற்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளது. இதற்கு இந்தியாவின் தேசிய ஊரடங்கு உத்தரவை ஓர் சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு பக்கம் உதவி - மறுபக்கம் ஆப்பு... கொரோனா போதாதென்று கூடுதல் துயரத்தை ஏற்படுத்திய டெஸ்லா..!

இதே நிலைதான் உலகின் பல்வேறு நாடுகளிலும் நீடித்த வண்ணம் உள்ளது. இதனால், வாகன விற்பனை மட்டுமல்ல சிங்கிள் யூனிட்டைகூட உற்பத்தி செய்ய முடியாத நிலை நிறுவனங்கள் உருவாகியிருக்கின்றது. இதனால் பல நிறுவனங்கள் பெரும் இழைப்பைச் சந்திக்க நேர்ந்துள்ளது. மேலும், இந்த இழப்பை ஈடுகட்ட முடியாமல் அவை திணறி வருகின்றன.

ஒரு பக்கம் உதவி - மறுபக்கம் ஆப்பு... கொரோனா போதாதென்று கூடுதல் துயரத்தை ஏற்படுத்திய டெஸ்லா..!

இந்நிலையில்தான், அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் தானியங்கி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, அதன் ஊழியர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கின்ற தகவலை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளது.

கொரோனா வைரசின் காரணமாக ஒரு யூனிட்கூட தயாரிக்க முடியாத நிலை நிர்வாகத்திற்கு உருவாகியுள்ளது. இதனால் நிறுவனத்திற்கு பெருத்த இழப்பு ஏற்பட்டிருக்கின்றது.

ஒரு பக்கம் உதவி - மறுபக்கம் ஆப்பு... கொரோனா போதாதென்று கூடுதல் துயரத்தை ஏற்படுத்திய டெஸ்லா..!

இதன் விளைவாகவே பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் கணிசமான தொகையை பிடித்தம் செய்ய இருக்கின்றது. இது நடப்பு மாதம் மட்டுமல்லாமல், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் கால் பகுதி முடியும் வரை நிலவும் என அது தெரிவித்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் இந்த முடிவால் அதன் பணியாளர்கள் பலர் சோகத்தில் உறைந்திருக்கின்றனர்.

ஒரு பக்கம் உதவி - மறுபக்கம் ஆப்பு... கொரோனா போதாதென்று கூடுதல் துயரத்தை ஏற்படுத்திய டெஸ்லா..!

சம்பளத்தை பிடித்தம் செய்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் கூடுதல் அதிர்ச்சி வைத்தியத்தையும் அந்நிறுவனம் அதன் பணியாளர்களுக்கு வழங்கியுள்ளது. அதாவது, அதே மின்னஞ்சலின் மூலமாகவே, கடந்த காலங்களில் யாரெல்லாம் பணி நேரத்தில் சரியாக பணியாற்றாமல், பிளாக் மார்க்கிற்கு ஆளாகினார்களோ அவர்களை வேலையை விட்டு தூக்கவும் முடிவு செய்திருப்பதாக அது தெரிவித்துள்ளது.

ஒரு பக்கம் உதவி - மறுபக்கம் ஆப்பு... கொரோனா போதாதென்று கூடுதல் துயரத்தை ஏற்படுத்திய டெஸ்லா..!

ஏற்கனவே பெரும்பாலான மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், வேலையை விட்டு தூக்கப்பட்டால், அந்நபரின் நிலை எண்ணவாகும் என்பது கேள்விக் குறியாக மாறியுள்ளது. டெஸ்லாவின் இந்த மனப்பான்மை வேதனையளிக்கும் விதமாக இருப்பதகாவும், வேலையை தூக்குவதற்கு இது சரியான நேரம் அல்ல என்றும் பலர் தங்களது கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

ஒரு பக்கம் உதவி - மறுபக்கம் ஆப்பு... கொரோனா போதாதென்று கூடுதல் துயரத்தை ஏற்படுத்திய டெஸ்லா..!

அதேசமயம், கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அந்நிறுவனம் கடுமையான நிதியிழப்பைச் சந்தித்து சந்தித்துள்ளது. முக்கியமாக, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஃபிரெமென்ட் உற்பத்தியாலையின் மூலமாகவே இந்நிறுவனத்திற்கு பெருத்த இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனாலயே டெஸ்லா நிறுவனத்தின் வட அமெரிக்காவிற்கான எச்ஆர், வேலெரி ஒர்க்மேன், இந்த மின்னஞ்சலை அதன் ஊழியர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஒரு பக்கம் உதவி - மறுபக்கம் ஆப்பு... கொரோனா போதாதென்று கூடுதல் துயரத்தை ஏற்படுத்திய டெஸ்லா..!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக டெஸ்லா நிறுவனம் மட்டுமே பாதிப்பை சந்திக்கவில்லை. மேலும், பல நிறுவனங்கள் இவ்வாறாக பின் விளைவுகளைச் சந்தித்து வருகின்றன. ஆனால், சம்பளம் பிடித்தல் மற்றும் ஆட்களை வேலையைவிட்டு தூக்குவது போன்ற நடவடிக்கையை டெஸ்லா நிறுவனம் மட்டுமே தொடங்கியிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, மேலும் சில நிறுவனங்கள் இதுபோன்ற அதிரடி நடவடிக்கையில் களமிறங்கலாம் என அஞ்சப்படுகின்றது.

ஒரு பக்கம் உதவி - மறுபக்கம் ஆப்பு... கொரோனா போதாதென்று கூடுதல் துயரத்தை ஏற்படுத்திய டெஸ்லா..!

அதேசமயம், டெஸ்லா நிறுவனம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடி ஓடி உதவும் வகையில், அவர்களால் முடிந்த உதவிகளை அண்மைக் காலங்களாக செய்த வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில், உயிர்காக்கும் கருவிகள் முதல் பாதுகாப்பு அம்சங்கள் வரை அந்நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளுக்கு வழங்கியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Corona Effect: Tesla Cuts Pay & Employees. Read In Tamil.
Story first published: Thursday, April 9, 2020, 14:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X