கொரோனா வைரசை ஒழிக்க புது யுக்தி... செம்ம ட்ரிக்கை கையாளும் காவல்துறை... பொதுமக்கள் வியப்பு!

கொரோனா வைரசை நெருங்குவதை ஒழிப்பதற்காக காவல்துறையினர் புதுயுக்தியைக் கையாளத் தொடங்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா வைரசை ஒழிக்க புது யுக்தி... செம்ம ட்ரிக்கை கையாளும் காவல்துறை... பொதுமக்கள் வியப்பு!

கோவிட்-19 வைரசின் பரவும் வேகம் முந்தையக் காலங்களைக் காட்டிலும் தற்போது அதி-தீவிர வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், இந்தியாவில் டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்வு மூலம் நாடு முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து, தற்போது கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் தமிழ்நாடு முழுவதும் பரவி வருகின்றது.

கொரோனா வைரசை ஒழிக்க புது யுக்தி... செம்ம ட்ரிக்கை கையாளும் காவல்துறை... பொதுமக்கள் வியப்பு!

இந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசியளவிலான ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டது. இந்த தடையுத்தரவு தற்போது மூன்றாம் கட்டத்தை எட்டி, 50 நாட்களுக்கும் அதிகமாக அமலில் இருக்கின்றது.

கொரோனா வைரசை ஒழிக்க புது யுக்தி... செம்ம ட்ரிக்கை கையாளும் காவல்துறை... பொதுமக்கள் வியப்பு!

மூன்றாம் கட்ட நீட்டிப்பின்போது, ஒரு சில நிறுவனங்கள் மற்றும் மீண்டும் இயங்கும் வகையில் லேசான தளர்வு வழங்கப்பட்டது. இதனால், இந்தியா லேசான இயக்கத்தைப் பெற தொடங்கியிருக்கின்றது. இருப்பினும், மக்களின் இயல்பு வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்பாத சூழலே தற்போது வரை நீடித்த வண்ணம் இருக்கின்றது.

கொரோனா வைரசை ஒழிக்க புது யுக்தி... செம்ம ட்ரிக்கை கையாளும் காவல்துறை... பொதுமக்கள் வியப்பு!

இதற்கு மிகக் கடுமையாக உயர்ந்து கொரோனா வைரசின் தொற்று எண்ணிக்கையே மிக முக்கிய காரணமாக இருக்கின்றது. எனவே, மக்களின் வீண் நடமாட்டத்தைத் தவிர்க்கும் பணியில் ஒவ்வொரு மாநில போலீசாரும் புதிய உத்வேகத்துடன் களமிறங்கியிருக்கின்றனர்.

கொரோனா வைரசை ஒழிக்க புது யுக்தி... செம்ம ட்ரிக்கை கையாளும் காவல்துறை... பொதுமக்கள் வியப்பு!

அதேசமயம், தங்களை இந்த கொடிய வைரஸ் தொற்றிக்கொள்ளக் கூடாது என்பதில் அதிக கவனத்தையும் அவர்கள் செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், வைரசை தங்களிடம் நெருங்கவே முடியாத வகையிலான ஓர் தனித்துவமான முயற்சியில் மத்திய பிரதேச மாநில போலீசார் களமிறங்கியிருக்கின்றனர்.

கொரோனா வைரசை ஒழிக்க புது யுக்தி... செம்ம ட்ரிக்கை கையாளும் காவல்துறை... பொதுமக்கள் வியப்பு!

அதேசமயம், விதிமீறி வெளியே வரும் வாகன ஓட்டிகளை தண்டிக்கும் பணியையும் எந்தவொரு குறையும் இன்றி செய்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோவை ஏஎன்ஐ தளம் வெளியிட்டுள்ளது.

அந்தவீடியோவில், போலீசார் விதிமீறி வெளியே வரும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதத்தைப் பெறுவதற்கு முன்பு, அந்த ரூபாய் நோட்டுக்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றது.

கொரோனா வைரசிடம் இருந்து தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் விதமாக போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையைக் கண்டு பொதுமக்கள் சிலர் வியந்து நிற்கின்றனர். மேலும், இதற்காக போலீசாருக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

கொரோனா வைரசை ஒழிக்க புது யுக்தி... செம்ம ட்ரிக்கை கையாளும் காவல்துறை... பொதுமக்கள் வியப்பு!

தற்போது பொதுமக்களுக்கு இணையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீஸார் மற்றும் மருத்துவர்களும் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே மத்திய பிரதேச மாநில போலீசார், நாட்டில் மற்ற மாநில போலீசார் மேற்கொள்ள புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர்.

கொரோனா வைரசை ஒழிக்க புது யுக்தி... செம்ம ட்ரிக்கை கையாளும் காவல்துறை... பொதுமக்கள் வியப்பு!

இந்த மாதிரியான ஓர் முயற்சியை கடந்த சில வாரங்களுக்கு முன்பு காய்கறி விற்கும் ஓர் வியாபாரி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்து.

அவர், தனது கடைக்கு முன்பாக மஞ்சள் கலந்த தண்ணீரை வாடிக்கையாளர்களுக்காகவும், டெட்டால் கலந்த நீரை ரூபாய் நோட்டை சுத்தம் செய்யவும் பயன்படுத்தியிருந்தார்.

கொரோனா வைரசை ஒழிக்க புது யுக்தி... செம்ம ட்ரிக்கை கையாளும் காவல்துறை... பொதுமக்கள் வியப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக இதுபோன்று தனித்துவமான நடவடிக்கைகள் சிலவற்றை பொதுமக்கள் மற்றும் போலீஸார் மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.

இருப்பினும், கடந்த காலங்களைக் காட்டிலும் வைரஸ் மிக அதிக வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது.

கொரோனா வைரசை ஒழிக்க புது யுக்தி... செம்ம ட்ரிக்கை கையாளும் காவல்துறை... பொதுமக்கள் வியப்பு!

எனவே, தற்போது அமலில் இருக்கும் மூன்றாம் கட்ட தடையுத்தரவு எப்போது வேண்டுமானாலும் நான்காம் கட்ட நிலைக்கு நீட்டிக்கப்படலாம் என்ற நிலை உருவாகியிருக்கின்றது.

அதசமயம், கொரோனா பாதிப்பில் பச்சை மண்டலமாக உருவெடுத்திருக்கும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் விலக்களிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனா வைரசை ஒழிக்க புது யுக்தி... செம்ம ட்ரிக்கை கையாளும் காவல்துறை... பொதுமக்கள் வியப்பு!

இதற்காக புதிய பாதுகாப்பு வழிமுறைகளை அரசு வகுத்து வருகின்றது. இது முன்பெப்போதும் இல்லாத வகையிலான அதிக கட்டுப்பாட்டைக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகின்றது. அதாவது, பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது உள்ளிட்ட பல கட்ட பாதுகாப்பு திட்டங்களை அரசு அறிவிக்க இருக்கின்றது. இதனடிப்படையிலேயே பொது போக்குவரத்தும் இயக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

Article Published On: Monday, May 11, 2020, 15:30 [IST]
English summary
Corona Fear Cop's Sanitising Currency Notes After Fining. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+