இந்தியாவில் எதிரொலிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்... அச்சத்தில் எம்ஜி நிறுவனம்..!

சீனாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அதன் தாக்கத்தை இந்தியாவிலும் ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் எதிரொளிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்... அச்சத்தில் எம்ஜி நிறுவனம்..!

உலகமே கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கண்டு பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சீனாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ், அந்நாட்டு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், தற்போதே பேரழிவை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

இருப்பினும், இது அதிகளவில் தொற்றை ஏற்படுத்தவில்லை என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.

இந்தியாவில் எதிரொளிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்... அச்சத்தில் எம்ஜி நிறுவனம்..!

இந்த தாக்கம் மக்களை மட்டுமின்றி அந்நாட்டைச் சார்ந்து இயங்கும் பெருநிறுவனங்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் புதிதாக கால் தடம் பதித்துள்ள எம்ஜி மோட்டார்ஸை அது கடுமையாக தாக்கலாம் என்ற அச்சம் அந்நிறுவனத்திடையே ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜி நிறுவனம், இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் என்றாலும் அது சீனாவின் செயிக் குழுமத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றது.

இந்தியாவில் எதிரொளிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்... அச்சத்தில் எம்ஜி நிறுவனம்..!

மேலும், தற்போது எம்ஜி பிராண்டில் களமிறக்கப்பட்டுள்ள ஹெக்டர் எஸ்யூவி முதல் இரண்டாம் மாடாலன எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் வரை இந்நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. உதாரணமாக, செயிக் பவ்ஜூன் 530 என்ற பெயரில் சீனாவில் விற்பனைச் செய்யப்பட்டு வரும் மாடலைதான் ரீபேட்ஜ் செய்து எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்கின்றது.

இந்தியாவில் எதிரொளிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்... அச்சத்தில் எம்ஜி நிறுவனம்..!

இதேபோன்று, எம்ஜி இசட்எஸ் காரிலும் அதிகளவில் செயிக் நிறுவனத்தின் உதிரி பாகங்களாகவே காட்சியளிக்கின்றது.

தற்போது, இந்த பாகங்களின் இறக்குமதி கேள்விக்குறியாகியுள்ளது. ஏனென்றால், கொரோனா வைரஸின் தாக்கத்தால் சீனாவின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியுள்ளது. ஆகையால், அந்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளன.

இந்தியாவில் எதிரொளிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்... அச்சத்தில் எம்ஜி நிறுவனம்..!

இதனாலயே எம்ஜி நிறுவனத்தின் உற்பத்தியும் பாதிப்படையும் என்ற அச்சம் நிலவி வருகின்றது. இருப்பினும், உள்நாட்டு உற்பத்தியை வைத்து சமாளிக்கும் முயற்சியில் எம்ஜி களமிறங்கியுள்ளது.

இந்தியாவில் எதிரொளிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்... அச்சத்தில் எம்ஜி நிறுவனம்..!

ஆனால், அதிகளவில் சீனாவிலிருந்தே இரு கார்களுக்குமான பாகங்கள் இறக்குமதிச் செய்யப்படுவதால் நிச்சயம் இதன் உற்பத்தி பாதிப்படையலாம் என்ற கருத்துகள் எழும்பிய வண்ணமே இருக்கின்றது. ஆகையால், கொரோனா வைரஸின் தாக்கத்தால் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திப்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் எதிரொளிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்... அச்சத்தில் எம்ஜி நிறுவனம்..!

இந்நிறுவனத்தின், ஹெக்டர் எஸ்யூவி காருக்கு சுமார் 16 ஆயிரம் யூனிட்டிற்கும், இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு 2,409 யூனிட்டுகளுக்குமான ஆர்டர்களும் நிலுவையில் உள்ளன.

இவற்றிற்கு தேவையான பல்வேறு முக்கிய உதிரிபாகங்கள் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரத்தில் இருந்துதான் வரவேண்டியிருக்கு. ஆனால், இந்நகரமே கொரோனா பாதிப்பால் படுமோசமாக பாதிப்படைந்துள்ளது.

இந்தியாவில் எதிரொளிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்... அச்சத்தில் எம்ஜி நிறுவனம்..!

இந்த உற்பத்தி பாதிப்பால் இந்தியா மட்டுமின்றி ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதியும் வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் பாதிப்படையும் என அந்நிறுவனத்தின் அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இதனை உறுதி செய்கின்ற வகையில் தற்போது அவர்களிடத்தில் ஹெக்டர் மற்றும் இசட்எஸ் கார்களுக்கான இருப்பு மிக குறைவாகவே இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்தியாவில் எதிரொளிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்... அச்சத்தில் எம்ஜி நிறுவனம்..!

எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் மற்றும் இசட்எஸ் ஆகிய இரு மின்சார கார்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதன்விளைவாகவே, தற்போது ஆயிரம் கணக்கான யூனிட்டுகளுக்கான ஆர்டர் நிலுவையில் உள்ளன.

இதில், ஹெக்டர் எஸ்யூவி காரை அந்நிறுவனம் இந்தியாவிற்கான முதல் மாடலாகவும், இரண்டாம் மாடலாக இசட்எஸ் மின்சார காரையும் களமிறக்கியது நாம் அறிந்த ஒன்றே.

இந்தியாவில் எதிரொளிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்... அச்சத்தில் எம்ஜி நிறுவனம்..!

இதில், இசட்எஸ் மின்சார கார் தற்போது சந்தையில் இருக்கும் மற்ற மின்சார வாகனங்களைக் காட்டிலும் சற்று குறைவான விலையில், அதிக பயனளிக்கின்ற வகையில் கிடைக்கின்றது. இதன் டிமாண்டிற்கான முக்கிய காரணமாக உள்ளது.

குறிப்பாக, ரேஞ்ச் மற்றும் தொழில்நுட்ப வசதியில் பிரம்மிக்க வைக்கின்ற காட்சியளிக்கின்றது.

இந்தியாவில் எதிரொளிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்... அச்சத்தில் எம்ஜி நிறுவனம்..!

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 44.5kWh கொண்ட திரவ குளிரூட்டப்பட்ட லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான சுமார் 340 கி.மீ. வரை ரேஞ்ச் வழங்கும். அதுமட்டுமின்றி, 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 8.5 செகண்டுகளிலேயே தொட்டுவிடும்.

இந்தியாவில் எதிரொளிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்... அச்சத்தில் எம்ஜி நிறுவனம்..!

அந்த அளவிற்கு இசட்எஸ் மின்சார காரின் மின் மோட்டார் அதீத திறன் வாய்ந்ததாக இருக்கின்றது. இந்த பேட்டரியை 0-த்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்ய வெறும் 50 நிமிடங்களே போதும். ஆனால், இதற்கு 50 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட் தேவைப்படும்.

இந்த கார் பயணிகளின் பாதுகாப்பிற்கு மிகுந்த திறன் கொண்டது.

இந்தியாவில் எதிரொளிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்... அச்சத்தில் எம்ஜி நிறுவனம்..!

இதனை உறுதி செய்கின்ற வகையில் யூரோ என்சிஏபி அமைப்பு அண்மையில் மேற்கொண்ட க்ராஷ் டெஸ்டில் இந்த கார் ஐந்திற்கு ஐந்து நட்சத்திரங்களைப் பெற்று சாதித்தது. என்பது மிகச்சிறந்த ஓர் விஷயம். இந்த காரை அண்மையில் க்ராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்திய இதனை உறுதி செய்துள்ளது.

இந்தியாவில் எதிரொளிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்... அச்சத்தில் எம்ஜி நிறுவனம்..!

இந்த எலெக்ட்ரிக் காரில் பாதுகாப்பு வசதிக்காக 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், ஹில் டெசண்ட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, January 31, 2020, 14:04 [IST]
English summary
Corona Virus Affect MG Motor In India. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+