ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்... உலக ஜாம்பவானுக்கு இந்தியாவில் ஏற்பட்ட சோகம்... என்னனு தெரியுமா?
கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருவதால், உலக ஜாம்பவானுக்கு இந்தியாவில் சோகமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19, ஒட்டுமொத்த உலகத்தையே ஆட்டி படைத்து வருகிறது. பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை பறித்துள்ள கோவிட்-19 வைரஸ், சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக பிரதமர் மோடி இந்தியாவில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம்தான் கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்றாலும், இதன் காரணமாக பொருளாதாரம் மிக கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது.

குறிப்பாக இந்தியாவில் கார் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. இதனால் பல முன்னணி கார் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் ஒன்று. ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் 95 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனமானது கடந்த மார்ச் மாதம் வெறும் 131 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு இதே மாதம், அதாவது கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2,751 யூனிட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் 95 சதவீத சரிவை ஃபோக்ஸ்வேகன் பதிவு செய்துள்ளது. ஆனால் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மட்டும் சரிவை சந்திக்கவில்லை. மாருதி சுஸுகி, டாடா போன்ற பல முன்னணி நிறுவனங்களும் வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளன.

இதில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி 47 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது. அதாவது மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விற்பனை கிட்டத்தட்ட சரிபாதியாக குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம், மாருதி சுஸுகி நிறுவனம் 76,240 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 1,45,031 ஆக இருந்தது.

இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் சமீப காலமாக இதே நிலைதான் காணப்படுகிறது. கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கமே இதற்கு காரணமாக இருக்கிறது. இந்தியாவை போன்று இன்னும் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே கார் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் பலவும் மூடப்பட்டுள்ளன.

கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டாலும், வென்டிலேட்டர்கள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்களை தயாரித்து வழங்க, உலகின் முன்னணி கார் நிறுவனங்கள் பலவும் முன்வந்துள்ளன.

வென்டிலேட்டர்கள் மிக அதிகமாக தேவைப்படும் இந்த இக்கட்டான சூழலில், டெஸ்லா, ஜென்ரல் மோட்டார்ஸ், ஃபோர்டு மற்றும் இந்தியாவின் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளன. வென்டிலேட்டர்களை தயாரித்து உதவும்படி, உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும், ஆட்டோமொபைல் நிறுவனங்களை வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








