கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்றும்... இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பான கார்கள் இவைதான்...

கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாக்கும் வகையில், ஹெப்பா ஏர் ஃபில்டர்களுடன் வரும் கார்களின் பட்டியலை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்றும்... இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பான கார்கள் இவைதான்...

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுப்பதற்காக, இந்தியாவில் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் மிகவும் அபாயகரமான தொற்று நோயாக உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதோ அல்லது தும்மும்போதோ வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம், அவருடன் தொடர்புடைய நபர்களுக்கு கோவிட்-19 வைரஸ் மிக எளிதாக பரவி விடுகிறது.

கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்றும்... இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பான கார்கள் இவைதான்...

ஆனால் காற்றின் மூலம் கோவிட்-19 வைரஸ் பரவுமா? அல்லது பரவாதா? என்பது தொடர்பாக ஆரம்பத்தில் பல்வேறு குழப்பங்கள் இருந்தன. காற்றின் மூலம் பரவும் என ஒரு தரப்பினரும், பரவாது என மற்றொரு தரப்பினரும் தெரிவித்து வந்தனர். ஆனால் ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய ஆய்வுகளில் அதிர வைக்கும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்றும்... இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பான கார்கள் இவைதான்...

இதன்படி சூழ்நிலைகளை பொறுத்து 45 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை கோவிட்-19 வைரஸ் காற்றில் இருக்கும் என்பது தெரியவருகிறது. எனவேதான் மாஸ்க் அணியும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதன் மூலம் ஆரோக்கியமான ஒருவரின் உடலில், ஆட்கொல்லி வைரஸான கோவிட்-19 நுழைவது தடுக்கப்படும்.

கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்றும்... இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பான கார்கள் இவைதான்...

தற்போதைய ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக, நீங்கள் மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது. அதே சமயம் நீங்கள் காரில் பயணம் செய்யும்போது, காற்றில் உள்ள கோவிட்-19 வைரஸ், காரின் கேபினுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஹெப்பா ஏர் ஃபில்டர் (HEPA Air Filter) இருக்கும்பட்சத்தில், அதற்கான வாய்ப்புகளை தடுக்கலாம்.

கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்றும்... இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பான கார்கள் இவைதான்...

மாசுபடுத்திகள் மூலம் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், இந்திய சந்தையில் சில கார்கள் ஃபேக்ட்ரி ஃபிட்டட் ஹெப்பா ஏர் ஃபில்டருடன் வருகின்றன. 0.01 மைக்ரான் அல்லது 10 நானோமீட்டர்கள் அளவுடைய துகள்களை கூட தடுக்கும் சிறப்பான திறன் ஹெப்பா ஏர் ப்யூரிஃபையர்களுக்கு இருக்கிறது. அதேசமயம் கொரோனா வைரஸின் அளவு 125 நானோமீட்டர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்றும்... இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பான கார்கள் இவைதான்...

எனவே இந்திய மார்க்கெட்டில், ஹெப்பா ஏர் ப்யூரிஃபையர்களுடன் விற்பனைக்கு கிடைக்கும் சில கார்களின் பட்டியலை இங்கே வழங்கியுள்ளோம். இந்த தகவல்கள் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். நீங்கள் புதிய கார் வாங்குவதாக இருந்தால், கூடுதல் பாதுகாப்பிற்கு இந்த கார்களை பரிசீலனை செய்யலாம்.

கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்றும்... இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பான கார்கள் இவைதான்...

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta)

புத்தம் புதிய ஹூண்டாய் கிரெட்டா கார் இந்திய மார்க்கெட்டில் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஹை-எண்ட் வேரியண்ட்களில், ஒருங்கிணைந்த ஹெப்பா ஏர் ப்யூரிஃபையர் வழங்கப்படுகிறது. கிரெட்டா காரின் ஆர்ம்ரெஸ்ட் மீது பெரிய டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. மாசுபடுத்திகளின் ரியல் டைம் ரீடிங்கை அது காட்டும்.

கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்றும்... இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பான கார்கள் இவைதான்...

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் (MG ZS EV)

இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரை எம்ஜி நிறுவனம் நடப்பாண்டின் தொடக்கத்தில் இந்திய மார்க்கெட்டில் லான்ச் செய்தது. இந்திய மார்க்கெட்டில் ஹெப்பா ஏர் ப்யூரிஃபையரை வழங்கும் ஒரே எலெக்ட்ரிக் கார் இதுதான். காரின் டிஸ்ப்ளேவில் அனைத்து ரீடிங்குகளையும் இந்த ஏர் ப்யூரிஃபையர் காட்டும். அத்துடன் காற்றில் இருக்கும் மாசுபடுத்திகளை வடிகட்டுவதன் மூலம் பயணிகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்றும்... இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பான கார்கள் இவைதான்...

கியா செல்டோஸ் (Kia Seltos)

ஒருங்கிணைந்த ஏர் ப்யூரிஃபையரை வழங்கிய இந்த செக்மெண்ட்டின் முதல் கார் என்ற பெருமையை கியா செல்டோஸ் பெறுகிறது. செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்களில் ஏர் ப்யூரிஃபையர் வழங்கப்படுகிறது. பல்வேறு மோடுகளுடன் இந்த ப்யூரிஃபையர் வருகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப அது வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்றும்... இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பான கார்கள் இவைதான்...

கேபினில் இருக்கும் மாசுபடுத்திகளின் அளவை காட்டுவதற்காக, கியா செல்டோஸ் காரிலும், பிரத்யேகமான எல்சிடி ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது. இதுதவிர பெர்ப்ஃயூம் டிஸ்பென்ஸரையும் (Perfume Dispenser) இந்த கார் பெற்றுள்ளது. இது கேபினை ப்ரெஷ்-ஆகவும், எந்தவித துர்நாற்றமும் இல்லாமல் வைத்திருக்கும் திறன் வாய்ந்தது.

கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்றும்... இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பான கார்கள் இவைதான்...

ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue)

இந்திய மார்க்கெட்டில், ஃபேக்டரி ஃபிட்டட் ஏர் ப்யூரிஃபையருடன் கிடைக்கும் விலை மலிவான கார்களில் ஒன்றாக ஹூண்டாய் வெனியூ திகழ்கிறது. மிகவும் பாதுகாப்பான மற்றும் மாசுபாடு இல்லாத கேபினை ஹூண்டாய் வெனியூ கார் பயணிகளுக்கு வழங்குகிறது. ஹூண்டாய் வெனியூ காரில், முன் பகுதியில் இருக்கும் 2 இருக்கைகளுக்கு இடையே ஏர் ப்யூரிஃபையர் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்றும்... இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பான கார்கள் இவைதான்...

இதனை கழற்றி மாட்ட முடியும். ஆனால் ஹூண்டாய் வெனியூ காரின் ஏர் ப்யூரிஃபையர் ரீடிங்குகள் எதையும் காட்டாது. எனினும் அதற்கு பதிலாக கலர் கோடுடன் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மாசுபாடு அளவு குறையும்பட்சத்தில், அது நமக்கு சுட்டிக்காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் மாடல்கள் தற்போதைய நிலையில் உங்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்றும்... இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பான கார்கள் இவைதான்...

ஆனால் உலோகம் மற்றும் பிளாஸ்டிக் மேற்பரப்புகளின் மீது கொரோனா வைரஸ் உயிர் வாழும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பெரும்பாலும் உலோகம் மற்றும் பிளாஸ்டிக் மூலம்தான் கார்கள் தயார் செய்யப்படுகின்றன. இதனால் நீங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஏர் ப்யூரிஃபையர் என்பது கூடுதல் பாதுகாப்பிற்காக மட்டுமே.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 28, 2020, 18:13 [IST]
English summary
Covid-19: 4 Cars That Have HEPA Air Purifiers - Hyundai Creta, MG ZS EV, Kia Seltos, Hyundai Venue. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+