ஆட்டி படைக்கும் கொரோனா... நம்பர்-1 கம்பெனி மாருதிக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க...

கொரோனா வைரஸ் எதிரொலியால் மாருதி சுஸுகி நிறுவனம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆட்டி படைக்கும் கொரோனா... நம்பர்-1 கம்பெனி மாருதிக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க...

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டின் தொடக்கம் முதலே ஆட்டோமொபைல் துறை மிக கடுமையாக திணறி வருகிறது. பொருளாதார மந்தநிலை, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் என பல்வேறு காரணங்களால், கடந்த ஆண்டில் வாகனங்கள் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்தது. இதனால் 2020ம் ஆண்டிலாவது விடிவு காலம் பிறக்கும் என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நம்பியிருந்தன.

ஆட்டி படைக்கும் கொரோனா... நம்பர்-1 கம்பெனி மாருதிக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க...

ஆனால் நடப்பாண்டிலும் வாகனங்களின் விற்பனை மிகவும் கடுமையாக சரிவடைந்து வருகிறது. தற்போது உலகையே அச்சுறுத்தி கொண்டுள்ள கொரோனா வைரஸ் (கோவிட்-19) காரணமாக தற்போது வாகன உற்பத்தி நிறுவனங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆட்டி படைக்கும் கொரோனா... நம்பர்-1 கம்பெனி மாருதிக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க...

இதன் எதிரொலியாக கடந்த மார்ச் மாதம் வாகனங்களின் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்தது. மேலும் வாகனங்களின் உற்பத்தியும் சரிவடைந்துள்ளது. குறிப்பாக நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி வாகன உற்பத்தியை பெருமளவில் குறைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மாருதி சுஸுகி வாகனங்களின் உற்பத்தி 32.05 சதவீதம் குறைந்துள்ளது.

ஆட்டி படைக்கும் கொரோனா... நம்பர்-1 கம்பெனி மாருதிக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க...

கடந்த மார்ச் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 92,540 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே மாதத்தில், அதாவது கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம், 1,36,201 வாகனங்களை மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்திருந்தது. கொரோனா வைரஸ் எதிரொலியால், உற்பத்தி மிக கடுமையாக குறைந்துள்ளது.

ஆட்டி படைக்கும் கொரோனா... நம்பர்-1 கம்பெனி மாருதிக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க...

மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்களின் உற்பத்தி குறைந்திருப்பதை போல, பயணிகள் வாகன (Passenger Vehicle) உற்பத்தியும் குறைந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டு மார்ச் மாதம் 91,602 பயணிகள் வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 1,35,236 ஆக இருந்தது. இது 32.26 சதவீத சரிவாகும்.

ஆட்டி படைக்கும் கொரோனா... நம்பர்-1 கம்பெனி மாருதிக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க...

ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ, வேகன் ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விப்ட், பலேனோ மற்றும் டிசையர் ஆகிய மாடல்களை உள்ளடக்கிய மினி மற்றும் காம்பேக்ட் செக்மெண்ட் கார்களின் உற்பத்தி, 31.33 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் மினி மற்றும் காம்பேக்ட் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி உற்பத்தி செய்த யூனிட்களின் எண்ணிக்கை 67,708 மட்டுமே.

ஆட்டி படைக்கும் கொரோனா... நம்பர்-1 கம்பெனி மாருதிக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க...

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 98,602 ஆக இருந்தது. இதேபோல் விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் எஸ்-க்ராஸ் போன்ற மாடல்களை உள்ளடக்கிய யுடிலிட்டி வாகனங்களின் உற்பத்தி 14.19 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 17,719 ஆக இருந்த யுடிலிட்டி வாகனங்களின் உற்பத்தி நடப்பாண்டு மார்ச் மாதம் 15,203 யூனிட்களாக குறைந்துள்ளது.

ஆட்டி படைக்கும் கொரோனா... நம்பர்-1 கம்பெனி மாருதிக்கே இந்த நிலைமையா? என்னனு நீங்களே பாருங்க...

அதேபோல் மிட்-சைஸ் செடான் காரான சியாஸின் உற்பத்தியும் குறைந்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் 3,205 யூனிட்களாக இருந்த சியாஸ் காரின் உற்பத்தி நடப்பாண்டு மார்ச் மாதம் 2,146 யூனிட்களாக சரிவை சந்தித்துள்ளது. இந்த வரிசையில் இலகுரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரி வாகனத்தின் உற்பத்தியும் குறைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 965 யூனிட்களாக இருந்த சூப்பர் கேரி வாகனத்தின் உற்பத்தி நடப்பாண்டு மார்ச் மாதம் 938 யூனிட்களாக குறைந்துள்ளது.

Article Published On: Thursday, April 9, 2020, 12:57 [IST]
English summary
Covid-19 Effect: Maruti Suzuki Cuts Production By 32 Per cent In March 2020. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+