செலவை குறைக்க இப்படித்தான் யோசிக்கணும்... தூள் கிளப்பும் முடிவை எடுத்த ஹரியானா... என்னனு தெரியுமா?

கொரோனாவால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, செலவை குறைப்பதற்காக தூள் கிளப்பும் முடிவு ஒன்றை ஹரியானா எடுத்துள்ளது.

செலவை குறைக்க இப்படித்தான் யோசிக்கணும்... தூள் கிளப்பும் முடிவை எடுத்த ஹரியானா... என்னனு தெரியுமா?

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, ஈரான் மற்றும் பிரேசில் என பல்வேறு நாடுகளை நிலைகுலைய வைத்துள்ள கொரோனா வைரஸ் (கோவிட்-19), தற்போது இந்தியாவிலும் உக்கிரம் காட்ட தொடங்கியுள்ளது. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால், அதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

செலவை குறைக்க இப்படித்தான் யோசிக்கணும்... தூள் கிளப்பும் முடிவை எடுத்த ஹரியானா... என்னனு தெரியுமா?

இந்தியாவில் முதலில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்பும் கூட கோவிட்-19 வைரஸ் கட்டுக்குள் வராததால், மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு நாளை மறு நாளுடன் முடிவடையவுள்ள நிலையில், இன்று (மே 1) அதிரடியான அறிவிப்புகள் சிலவற்றை மத்திய அரசு வெளியிட்டது.

செலவை குறைக்க இப்படித்தான் யோசிக்கணும்... தூள் கிளப்பும் முடிவை எடுத்த ஹரியானா... என்னனு தெரியுமா?

இதன்படி ஊரடங்கு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும். இருந்தாலும் பச்சை மண்டலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி ஒரு சில நிபந்தனைகளுடன் பஸ்கள் இயக்கம் போன்ற ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு இன்னும் சில நாட்கள் நீட்டிக்கப்படலாம் என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான்.

செலவை குறைக்க இப்படித்தான் யோசிக்கணும்... தூள் கிளப்பும் முடிவை எடுத்த ஹரியானா... என்னனு தெரியுமா?

எனினும் மார்ச் 24ம் தேதி முதல் இந்தியா தழுவிய ஊரடங்கு அமலில் இருந்து வருவதால், தொழில்கள் முடங்கி பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் வருவாய் இழந்து தவிப்பதை போல், மத்திய, மாநில அரசுகளுக்கான வருவாயும் ஊரடங்கால் குறைந்து வருகிறது. எனவே நிதி நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், சிக்கன நடவடிக்கைகளில் மாநில அரசுகள் இறங்கியுள்ளன.

செலவை குறைக்க இப்படித்தான் யோசிக்கணும்... தூள் கிளப்பும் முடிவை எடுத்த ஹரியானா... என்னனு தெரியுமா?

அரசின் செலவுகளை கூடுமான வரைக்கும் குறைப்பது, சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உள்ளது. எந்தெந்த வழிகளில் எல்லாம் செலவுகளை குறைக்கலாம்? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசித்து கொண்டுள்ளன. இந்த சூழலில், சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஹரியானா மாநில அரசு தற்போது சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

செலவை குறைக்க இப்படித்தான் யோசிக்கணும்... தூள் கிளப்பும் முடிவை எடுத்த ஹரியானா... என்னனு தெரியுமா?

ஹரியானா மாநில அரசின் அமைச்சரவை கூட்டம், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் நடந்தது. இதில், அரசின் செலவுகளை குறைப்பதற்காக சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில், கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு, அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை வாங்க கூடாது என்பது முக்கியமான முடிவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

செலவை குறைக்க இப்படித்தான் யோசிக்கணும்... தூள் கிளப்பும் முடிவை எடுத்த ஹரியானா... என்னனு தெரியுமா?

அதாவது கார்கள் மற்றும் ஜீப்கள் உள்பட புதிய வாகனங்களை வாங்குவதற்கு முற்றிலுமாக தடை விதிப்பது என ஹரியானா அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது. ஆனால் பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

செலவை குறைக்க இப்படித்தான் யோசிக்கணும்... தூள் கிளப்பும் முடிவை எடுத்த ஹரியானா... என்னனு தெரியுமா?

அதாவது பஸ்கள், அவசர கால வாகனங்கள் ஆகியவற்றை வாங்கலாம். நடப்பு நிதியாண்டு முழுமைக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் புதிய கார் அல்லது ஜீப் அவசரமாக தேவைப்பட்டால், அவற்றை வாடகைக்கு மட்டுமே எடுக்க வேண்டும் எனவும் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.

செலவை குறைக்க இப்படித்தான் யோசிக்கணும்... தூள் கிளப்பும் முடிவை எடுத்த ஹரியானா... என்னனு தெரியுமா?

ஹரியானா மாநில அரசை பின்பற்றி மற்ற மாநில அரசுகளும் இத்தகைய முடிவுகளை எடுத்தால், அது கார் நிறுவனங்களை பாதிக்ககூடும். ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது கார் விற்பனை மிக கடுமையாக சரிந்துள்ளது. எனினும் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்ட பிறகு, இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கையில் கார் நிறுவனங்கள் உள்ளன.

செலவை குறைக்க இப்படித்தான் யோசிக்கணும்... தூள் கிளப்பும் முடிவை எடுத்த ஹரியானா... என்னனு தெரியுமா?

கார் விற்பனையை பொறுத்தவரை அரசாங்கும் வாங்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. எனவே புதிய கார் வாங்குவதை மாநில அரசுகள் நிறுத்தினால், அது கார் நிறுவனங்களை பாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதே கொரோனா வைரஸ் காரணமாக கார் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் மறுக்க முடியாது.

செலவை குறைக்க இப்படித்தான் யோசிக்கணும்... தூள் கிளப்பும் முடிவை எடுத்த ஹரியானா... என்னனு தெரியுமா?

அதாவது ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பஸ், ரயில், டாக்ஸி, ஆட்டோ போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதை மக்கள் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு பதிலாக சொந்த கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்வதை மக்கள் மிகவும் பாதுகாப்பானதாக கருதலாம்.

செலவை குறைக்க இப்படித்தான் யோசிக்கணும்... தூள் கிளப்பும் முடிவை எடுத்த ஹரியானா... என்னனு தெரியுமா?

எனவே வாகனங்களின் விற்பனை அதிகரிக்க கூடும் என்ற நம்பிக்கையில் கார் நிறுவனங்கள் இருக்கின்றன. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்தில் நாம் மிகப்பெரிய மாற்றத்தை காண்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக பாதுகாப்பை மனதில் வைத்து பஸ்களில் பயணிப்பதை மக்கள் தவிர்க்கலாம்.

செலவை குறைக்க இப்படித்தான் யோசிக்கணும்... தூள் கிளப்பும் முடிவை எடுத்த ஹரியானா... என்னனு தெரியுமா?

எனவே பஸ்கள் லாபத்தை ஈட்டி தருமா? என்பது கொஞ்சம் சந்தேகம்தான். கேரள மாநிலத்தில் இதனை நன்கு புரிந்து வைத்துள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், பஸ்களை இயக்க மாட்டோம் என கேரள மாநில அரசிடம் தெரிவிக்க முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Friday, May 1, 2020, 21:35 [IST]
English summary
Covid-19 Impact: Haryana Bans Purchase Of New Vehicles For Government Officials. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+