Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எல்லோராலும் இந்த காரை வாங்க முடியும்... விலை அவ்ளோ கம்மி... உங்க வீட்டு சின்ன பசங்களுக்கு இது ரொம்ப பிடிக்கும்!
டேனிஷ் பொம்மை தயாரிப்பு நிறுவனமான லெகோ ஜீப் ரேங்லர் ரூபிகான் காரின் சிறிய மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

ஜீப் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த எஸ்யூவி ரக கார்களில் ரேங்கலர் மாடலும் ஒன்று. இது மிக சிறந்த ஆஃப்-ரோட் பயண வாகனம் ஆகும். அதேசமயம், இக்காரில் வழக்கமான சாலை பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. எனவேதான் உலக செல்வந்தர்களின் பிரியமான சொகுசு காராகும் இது இருக்கின்றது.

இந்த நிலையில், டென்மார்க்கை மையமாகக் கொண்டு பொம்மை மற்றும் விளையாட்டு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் லெகோ நிறுவனம், ஜீப் ரேங்லர் ரூபிகான் அடிப்படையிலான சிறிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஓர் சிறுவர்களுக்கான விளையாட்டு காராகும். இதனை தேவைப்பட்டால் லிவிங் ரூமை அலங்கரிக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

லெகோ நிறுவனம், ஜீப் ரேங்லர் ரூபிகான் காரை மட்டுமின்றி இன்னும் பல்வேறு நிறுவனங்களின் சிறப்புமிக்க கார்களை சிறுவர்களுக்கான பொம்மைக் காராக வழங்கி வருகின்றது. இவற்றின் விலை அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 49.99 ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3,684 ஆகும். இந்த விலை எல்லோராலும் வாங்கக்கூடிய விலையாக இருக்கின்றது. ஆனால், இது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்குமா என்பது பற்றி தகவல் தெரியவில்லை.

தற்போது விற்பனைக்கு அறிமுகமாகியிருக்கும் இந்த பொம்மை காரின் சிறப்பு என்னவென்றால், சிறுவர்கள் இக்காரை தனி தனியாக பிரித்து பின்னர் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம். இது குழைந்தைகளின் ஞாபக சக்தி மற்றும் சிறந்த சிந்தனைக்கு வழி வகுக்கும்.

சுமார் 665 துண்டுகளாக இது வழங்கப்படும். மேலும், எப்படி கட்டுமானம் செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறை புத்தகமும் இத்துடன் வழங்கப்பட இருக்கின்றது. இது காரை உருவாக்க உதவும். சிறுவர்களுக்கான இந்த காரை ஜிப் நிறுவனத்துடன் இணைந்து லெகோ தயாரித்திருக்கின்றது.

ஆகையால், ஜீப் ரேங்லர் ரூபிகான் காரில் காணப்படக்கூடிய சில தனித்துவமான அம்சங்களை இதில் காண முடியும். தொடர்ந்து, ஸ்டியரிங் வீ், மடக்கக்கூடிய இருக்கைகள், இயங்கக்கூடிய சஸ்பென்ஷன்கள், டயர், ஸ்பேர் டயர், மேற்கூரை மின் விளக்கு, கதவுகள் மற்றும் பேனட் (இவற்றை திறந்து மூட முடியும்) உள்ளிட்டவையும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இவை, நிஜ கார்களில் எப்படி இயங்குமோ அதேபோன்று இந்த சிறுவர்களின் காரிலும் இயங்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. 665 துண்டுகளையும் இணைக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கான ரேங்லர் ரூபிகான் 240 மிமீ நீளத்திலும், 130 மிமீ அகலத்திலும் இருக்கும். இதன் உயரம் 120 மிமீ ஆகும்.