டட்சன் கார்களுக்கு ஆண்டு இறுதி தள்ளுபடி சலுகைகள்... ரூ.51,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!
டட்சன் கார்களுக்கு ஆண்டு இறுதி சிறப்பு தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

பட்ஜெட் கார் மாடல்கள்
இந்தியாவின் பட்ஜெட் கார் மார்க்கெட்டில் அதிக சிறப்பம்சங்களை கொண்ட மாடல்களாக டட்சன் கார்கள் விற்பனையில் உள்ளன. அதிக இடவசதி, தொழில்நுட்ப அம்சங்களுடன் டட்சன் கார்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

சிறப்பு தள்ளுபடி
இந்த நிலையில், ஆண்டு இறுதி நெருங்கி உள்ள நிலையில், இருப்பு உள்ள கார்களை விற்பனை செய்வதற்காக சிறப்பு தள்ளுபடி சலுகைகளை டட்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.

டட்சன் ரெடிகோ
டட்சன் ரெடிகோ ஹேட்ச்பேக் காருக்கு ரூ.45,000 வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது. ஆண்டு இறுதி தள்ளுபடியாக ரூ.11,000, விலையில் நேரடி தள்ளுபடியாக ரூ.9,000, பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000 கூடுதல் மதிப்பு மற்றும் கார்ப்பரேட் போனஸாக ரூ.5,000 பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த கார் ரூ.2.87 லட்சம் முதல் ரூ.4.88 லட்சம் வரையிலான விற்பனை

டட்சன் கோ
டட்சன் ரெடிகோ காருக்கு ரூ.51,000 வரை சிறப்பு சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ஆண்டு இறுதி சிறப்புத் தள்ளுபடியாக ரூ.11,000, நேரடி தள்ளுபடியாக ரூ.20,000 மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.20,000 வரை பெறும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

டட்சன் கோ ப்ளஸ்
டட்சன் கோ ப்ளஸ் காருக்கு ரூ.46,000 வரை ஆண்டு இறுதி சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதன்படி, ரூ.11,000 வரை ஆண்டு இறுதி தள்ளுபடியாகவும், ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் பெற முடியும்.

சலுகை விபரம்
வரும் டிசம்பர் 31ந் தேதி வரை இந்த சேமிப்புச் சலுகைகளை பெற முடியும் என்று டட்சன் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், டீலர் மற்றும் நகரத்தை பொறுத்து இந்த சேமிப்புச் சலுகைகளில் வேறுபாடு இருக்கலாம் என்றும், அருகாமையிலுள்ள டீலரை தொடர்பு கொண்டு சேமிப்புச் சலுகைகள் தொடர்பான விபரங்களை கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் டட்சன் நிறுவனம் கூறி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








