டட்சன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் இதுதான்?

டட்சன் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் விபரம் குறித்த தகவல் கசிந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டட்சன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் இதுதான்?

நிஸான் கார் நிறுவனத்தின் கீழ் செயல்படும் டட்சன் நிறுவனம் பட்ஜெட் கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு ரகத்திலும் விலை குறைவான, அதிக மதிப்பை தரும் கார்களை விற்பனை செய்வதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

டட்சன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் இதுதான்?

டட்சன் பிராண்டில் ரெடிகோ, கோ மற்றும் கோ ப்ளஸ் ஆகிய கார் மாடல்கள் விற்பனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், புத்தம் புதிய மினி எஸ்யூவியையும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டட்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டட்சன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் இதுதான்?

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மேக்னைட் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, புதிய காருக்கான மேக்னைட் என்ற பெயரை டட்சன் நிறுவனம் பதிவு செய்துள்ளது. புதிய மினி எஸ்யூவிக்குத்தான் இந்த பெயரை டட்சன் பதிவு செய்துள்ளதாக நம்பப்படுகிறது.

டட்சன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் இதுதான்?

கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் எஸ்யூவியின் அடிப்படையில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டட்சன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் இதுதான்?

நிஸான்- ரெனோ கூட்டணியின் CMF-A+ பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலானது 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இதே பிளாட்ஃபார்மில் புதிய எஸ்யூவி மாடலை ரெனோ கார் நிறுவனமும் எச்பிசி என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

டட்சன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் இதுதான்?

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த எஸ்யூவியில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். இதே எஞ்சின் ரெனோ ட்ரைபர் மற்றும் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

டட்சன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் இதுதான்?

புதிய டட்சன் மேக்னைட் எஸ்யூவி இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம். போட்டியாளர்களைவிட விலை குறைவான தேர்வாக நிலைநிறுத்தப்படும் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்லேன் தளம் இந்த செய்தியை பகிரந்து கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 1, 2020, 13:36 [IST]
English summary
According to reports, Datsun has filed a trademark application for ‘Magnite’, which will be used for new compact suv for India.
மேலும்... #டட்சன் #datsun
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+