இந்த கருப்பனை கண்டு மயங்காதவர்களே இருக்க முடியாது... அட்டகாசமான உருவத்தை பெற்ற மஹிந்திரா தார்...

மஹிந்திரா தார் காருக்கு அட்டகாசமான புதிய தோற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கருப்பனை கண்டு மயங்காதவர்களே இருக்க முடியாது... அட்டகாசமான உருவத்தை பெற்ற மஹிந்திரா தார்...

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் டிசி டிசைன் நிறுவனம், மஹிந்திரா நிறுவனத்தின் தார் காரை அட்டகாசமான தோற்றத்திற்கு மாற்றியமைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசி டிசைன் எனும் பெயரை டிசி2 என மாற்றி அண்மையில்தான் இந்த நிறுவனம் புதிய அறிமுகத்தை இந்தியாவில் மீண்டும் பதிவு செய்தது.

இந்த கருப்பனை கண்டு மயங்காதவர்களே இருக்க முடியாது... அட்டகாசமான உருவத்தை பெற்ற மஹிந்திரா தார்...

இதைத்தொடர்ந்து சில வாகனங்களை நவீன யுக கார்களுக்கே சவால் விடும் வகையில் அது மாற்றியமைத்தது. அந்தவகையில் தற்போது மஹிந்திரா தார் காரையும் நம்ப முடியாத புத்தம் புதிய தோற்றம் மற்றும் லக்சூரி வசதிக் கொண்ட காராக அந்நிறுவனம் மாற்றியமைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கருப்பனை கண்டு மயங்காதவர்களே இருக்க முடியாது... அட்டகாசமான உருவத்தை பெற்ற மஹிந்திரா தார்...

முன்பைக் காட்டிலும் மிகவும் அகலமான வெளிப்புறத் தோற்றம் இக்காருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி கட்டுமஸ்தான உருவ அமைப்பும் தாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உருவத்திற்கு ஏற்பவே ஹேம்மர் எனும் பெயரை டிசி2 காருக்கு வைத்துள்ளது. இந்த தோற்றம் மற்றும் லக்சூரி வசதியை வைத்து பார்க்கையில் இக்கார் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்களுக்கு இணையான பிம்பத்தை வழங்குகின்றது.

இந்த கருப்பனை கண்டு மயங்காதவர்களே இருக்க முடியாது... அட்டகாசமான உருவத்தை பெற்ற மஹிந்திரா தார்...

ஆனால், இந்த வசதிக்காக டிசி2 ஒரு சில லட்சங்களை மட்டுமே இரைத்துள்ளது. அதாவது, ஒட்டுமொத்த மாடிஃபிகேஷனுக்குமே ரூ. 6 லட்சம் வரை மட்டுமே அது செலவு செய்துள்ளது. ஆனால், இதில் காரில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்களோ பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களில் மட்டுமே காணப்படும் அம்சங்களைப் போன்று காட்சியளிக்கின்றது.

இந்த கருப்பனை கண்டு மயங்காதவர்களே இருக்க முடியாது... அட்டகாசமான உருவத்தை பெற்ற மஹிந்திரா தார்...

டிசி2, தார் ஹேம்மர் காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக குறிப்பிட்ட சில அம்சங்களை மாற்றியமைத்துள்ளது. அதில், காரின் முப்பு பகுதியும் ஒன்று. பழைய வழக்கமான பம்பர் நீக்கப்பட்டு புதிதாக கிளாஸ் ஃபினிஷ் பம்பர் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, புதிதாக புரஜெக்டர் முகப்பு மின் விளக்கு, பனி விளக்கு, ஃபென்டரில் மின் விளக்குகள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதனால், தார் ஹேம்மருக்கு அசுர தோற்றமும் கிடைத்துள்ளது.

இந்த கருப்பனை கண்டு மயங்காதவர்களே இருக்க முடியாது... அட்டகாசமான உருவத்தை பெற்ற மஹிந்திரா தார்...

தற்போது இடம்பெற்றிருக்கும் ஃபெண்டர்கள் சற்று அகலமானதாகவும், உறுதி தன்மைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது. இந்த ஃபெண்டரை இக்காருக்காகவே டிசி2 பிரத்யேகமாக கஸ்டம் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி மேலும் பல கூறுகள் இக்காருக்காக தனித்துவமாக கஸ்டம் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு முகப்பு காட்சியளிக்கும் கிரில் அமைப்பும் ஓர் சான்றாக இறுக்கின்றது. அது, மிகவும் துணிச்சலான நிலைப்பாட்டை உறுதியளிக்கிறது.

இந்த கருப்பனை கண்டு மயங்காதவர்களே இருக்க முடியாது... அட்டகாசமான உருவத்தை பெற்ற மஹிந்திரா தார்...

தொடர்ந்து காரின் சிறப்பு தோற்றத்திற்காக கண்ணாடியின் பார்வை பகுதி குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, காரின் கதவைத் தாங்கும் கீல் விஷயத்தில்கூட டிசி2 அதிக கவனத்தைச் செலுத்துயிருக்கின்றது. குரோம் பூச்சுக் கொண்ட மிகப்பெரிய கீல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதேபோன்று, காரின் பின்பக்கத்திலும் சில மாற்றங்களை டிசி2 செய்துள்ளது.

இந்த கருப்பனை கண்டு மயங்காதவர்களே இருக்க முடியாது... அட்டகாசமான உருவத்தை பெற்ற மஹிந்திரா தார்...

கூடுதல் டயர், எல்இடி மின் விளக்கு, பார்க்கிங் அசிஸ்டண்டிற்கான கண்ணாடி உள்ளிட்டவை பொருத்தப்பட்டிருக்கின்றன. இதனால், தார் ஹேம்மர் அட்டகாசமான லக்சூரி காரைப் போன்று காட்சியளிக்கின்றது. இதேபோன்று, காரின் உட்பகுதியிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமாக காரின் இருக்கை மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் வசீகரிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

இந்த கருப்பனை கண்டு மயங்காதவர்களே இருக்க முடியாது... அட்டகாசமான உருவத்தை பெற்ற மஹிந்திரா தார்...

மேலும், கூடுதல் கவர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் காரின் இருக்கை முதல் ஸ்டியரிங் வீல் வரை ஒரே நிறத்திலான லெதர் போர்வை வழங்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி கதவு மற்றும் காரின் மையப்பகுதியில் (டேஷ்போர்டு) மரத்தலான மினு மினுக்கும் பலகைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் சேர்ந்து தார் ஹேம்மர் காருக்கு படும் கவர்ச்சியான பிரிமியம் தோற்றத்தை வழங்குகின்றன.

இந்த கருப்பனை கண்டு மயங்காதவர்களே இருக்க முடியாது... அட்டகாசமான உருவத்தை பெற்ற மஹிந்திரா தார்...

டிசி2 நிறுவனம் இதுபோன்று குறைந்த செலவில் ஆச்சரியமளிக்கும் வகையில் காரை மாற்றியமைப்பது முதல் முறையல்ல. முன்னதாக மஹிந்திரா மராஸ்ஸோ போன்ற விலைக்குறைந்த கார்களை பல மதிப்புள்ள கார்களுக்கு இணையாக அது மாற்றியமைத்தது குறிப்பிடத்தகுந்தது. இதேபோன்று, பல நடிகர்களின் வாகனத்தையும் இந்நிறுவனம் மாடிஃபை செய்து வழங்கியிருக்கின்றது.

Most Read Articles

English summary
DC Design Converted Mahindra Thar Into Luxury SUV. Read In Tamil.
Story first published: Thursday, September 10, 2020, 7:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X