காரால் உல்லாச கப்பலை வீழ்த்த முடியுமா? இதோ சான்று! சாலையில் மிதக்கும் கப்பலாக உருமாறிய ஃபார்ச்சூனர்!

சாலையில் மிதக்கும் உல்லாச கப்பலாக டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் மாறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

காரால் உல்லாச கப்பலை வீழ்த்த முடியுமா... முடியும்! இதோ சான்று... சாலையில் மிதக்கும் கப்பலாக உருமாறிய ஃபார்ச்சூனர்!

இந்தியாவில் ஆடம்பர கார்களுக்கான் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சொகுசு கார்களின் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை வளர்ச்சியடைவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆனால் அதிக வசதிகளைக் கொண்ட கார்கள் அதன் அம்சங்களைப் போலவே உயர்ந்த விலையைக் கொண்டதாக இருக்கின்றன.

காரால் உல்லாச கப்பலை வீழ்த்த முடியுமா... முடியும்! இதோ சான்று... சாலையில் மிதக்கும் கப்பலாக உருமாறிய ஃபார்ச்சூனர்!

எனவேதான், ஒரு சிலருக்கு இது எட்டாக் கனியாக இருக்கின்றது. இருப்பினும், ஒரு சாரார் அதிக லக்சூரி வசதியை தங்களது பட்ஜெட் கார்களிலேயே பயன்பாட்டுக்குக் கொண்டு வருகின்றனர். அது எப்படி முடியும்?, 'மாடிஃபிகேஷன்' மூலம் அனைத்தும் சாத்தியமே.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் சம்பவம் தற்போது அரங்கேறியிருக்கின்றது. அதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

காரால் உல்லாச கப்பலை வீழ்த்த முடியுமா... முடியும்! இதோ சான்று... சாலையில் மிதக்கும் கப்பலாக உருமாறிய ஃபார்ச்சூனர்!

இந்தியாவின் பாரம்பரியமிக்க வாகன மாடிஃபிகேஷன் நிறுவனங்களில் ஒன்றான டிசி2தான் இந்த சம்பவத்தை அரங்கேற்றியிருக்கின்றது. அதாவது, வழக்கமான நடுத்தர சொகுசு காரான டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை இந்நிறுவனம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள காராக தனது கை வண்ணத்தினால் மாற்றியிருக்கின்றது.

காரால் உல்லாச கப்பலை வீழ்த்த முடியுமா... முடியும்! இதோ சான்று... சாலையில் மிதக்கும் கப்பலாக உருமாறிய ஃபார்ச்சூனர்!

இதற்கு முன்னதாக இதே நிறுவனம், மஹிந்திரா மராஸ்ஸோ மாடலை உல்லாச கப்பலுக்கு இணையாக மாற்றியிருந்தது. இதுமட்டுமின்றி, பல்வேறு கார்களை இதுபோன்று பல நட்சத்திர சொகுசு விடுதிகளுக்கு டஃப் கொடுக்கின்ற வகையில் அந்நிறுவனம் மாற்றியிருக்கின்றது. இந்த வரிசையிலேயே டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் தற்போது இணைந்திருக்கின்றது.

காரால் உல்லாச கப்பலை வீழ்த்த முடியுமா... முடியும்! இதோ சான்று... சாலையில் மிதக்கும் கப்பலாக உருமாறிய ஃபார்ச்சூனர்!

டிசி2 தற்போது மாடிஃபை செய்திருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் உட்பக்கத்தைப் பார்க்கும்போது, இது நிச்சயம் ஃபார்ச்சூனர் கார்தானா என்ற கேள்வியை நம்மிடம் எழுப்புகின்றது. ஏனெனில் அந்தளவிற்கு பேரகுமிக்க இன்டீரியரையும், அதிக சொகுசு வசதிகளையும் டிசி நிறுவனம் டொயோட்டா ஃபார்ச்சூனரில் சேர்த்திருக்கின்றது.

காரால் உல்லாச கப்பலை வீழ்த்த முடியுமா... முடியும்! இதோ சான்று... சாலையில் மிதக்கும் கப்பலாக உருமாறிய ஃபார்ச்சூனர்!

இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. அதில் டிசி நிறுவனம், காரின் வெளிப்புறத்தில் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதேசமயம், காரின் உட்பகுதியில் எந்தவொரு அம்சத்தையும் மாற்றாமல் இருக்கவில்லை என்பதும் தெரிய வருகின்றது. இதில், ஸ்டியரிங் வீல் முதல் இருக்கை வரை அனைத்தும் அடங்கும்.

காரால் உல்லாச கப்பலை வீழ்த்த முடியுமா... முடியும்! இதோ சான்று... சாலையில் மிதக்கும் கப்பலாக உருமாறிய ஃபார்ச்சூனர்!

ஆம், காரை சொகுசு கப்பலுக்கு இணையானதாக மாற்றும் விதமாக பெரும்பாலான பாகங்களை டிசி2 நீக்கியிருக்கின்றது. மேலும், அந்த இடத்தை நிரப்பும் விதமாக அதி நவீன மற்றும் அதிக சொகுசு சொகுசு நிறைந்த கூறுகளைச் சேர்த்திருக்கின்றது. இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாக எலக்ட்ரானிக் மூலம் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளகூடிய இருக்கைகள் இருக்கின்றன.

காரால் உல்லாச கப்பலை வீழ்த்த முடியுமா... முடியும்! இதோ சான்று... சாலையில் மிதக்கும் கப்பலாக உருமாறிய ஃபார்ச்சூனர்!

இந்த இருக்கையில் அமரும்போது கூடுதல் லக்சூரி அனுபவத்தை உணர வேண்டும் என்பதற்காக இரு இருக்கைகள் மட்டுமே பின் பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, மூன்று வரிசை அமைப்பாக இருந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடிஃபிகேஷனுக்கு பின்னர் இரு வரிசை இருக்கைகளைக் கொண்ட காராக மாறியிருக்கின்றது. இதனால், பின் புறத்தில் அமர்பவர்களுக்கு கூடுதல் இடவசதி மற்றும் அதிக சொகுசான அனுபவம் கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

காரால் உல்லாச கப்பலை வீழ்த்த முடியுமா... முடியும்! இதோ சான்று... சாலையில் மிதக்கும் கப்பலாக உருமாறிய ஃபார்ச்சூனர்!

இந்த இருக்கை படுக்கையைபோல் மிக அதிகளவில் சாய்த்து வைத்துக் கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இதனை, டச் வசதி கொண்ட ரிமோட்டை லேசாக தொடுவன் மூலமே கட்டுப்படுத்த முடியும்.

இந்த ரிமோட் மூலமாகவே காரின் கேபினுக்குள் வழங்கப்பட்டிருக்கும் ஆம்பிசியன்ட் மின் விளக்குகளை நம்முடையே மூடிற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும்.

காரால் உல்லாச கப்பலை வீழ்த்த முடியுமா... முடியும்! இதோ சான்று... சாலையில் மிதக்கும் கப்பலாக உருமாறிய ஃபார்ச்சூனர்!

இத்துடன், ஒவ்வொரு இருக்கைக்கும் தனிப்பட்ட வண்ணத்திரை (டிவி) கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் இசை, படம் உள்ளிட்ட பொழுதுபோக்குகளை கண்டுகளிக்க முடியும். இது ஒவ்வொன்றும் 10 இன்சிலானது ஆகும்.

எனவே, இந்த காரின் பின் பக்க இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்கள் நிச்சயம் புதுவிதமான பயண அனுபவத்தை உணர்வார்கள் என உறுதியாக நாங்கள் கூறுகின்றோம்.

காரால் உல்லாச கப்பலை வீழ்த்த முடியுமா... முடியும்! இதோ சான்று... சாலையில் மிதக்கும் கப்பலாக உருமாறிய ஃபார்ச்சூனர்!

அதுமட்டுமின்றி, மாடிஃபிகேஷனுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் இந்த காரில் பயணிக்கும்போது உல்லாச கப்பலில் மிதப்பதைப் போன்று உணர்வை ஏற்படுத்தும் என டொயோட்டாவை மாற்றியமைத்த குழு தெரிவிக்கின்றது. அவர்களின் இந்த கூற்றிற்கு ஏற்பவே பிரம்மிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு சிறப்பு அம்சங்கள் அக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மேலும், காரின் இன்டீயருக்கு ராயல் லுக் வழங்கும் விதமாக உட் (மரம்) பேனல்கள் மற்றும் சந்தன நிற போர்வை, இருக்கை முதல் கதவுகள் வரை போர்த்தப்பட்டிருக்கின்றன. இத்துடன் மேற்கூரைக்கு அடர் பழுப்பு நிறம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதுபோன்று அனைத்து மாடிஃபிகேஷனும் சொகுசு அம்சத்தை மையமாகக் கொண்டே செய்யப்பட்டுள்ளன. ஆகையால், எஞ்ஜின் திறன் மற்றும் வெளிப்புறத் தோற்றத்தில் எந்த விதமான மாற்றத்தையும் நம்மால் காண முடியவில்லை.

காரால் உல்லாச கப்பலை வீழ்த்த முடியுமா... முடியும்! இதோ சான்று... சாலையில் மிதக்கும் கப்பலாக உருமாறிய ஃபார்ச்சூனர்!

அதேசமயம், கூடுதல் அம்சங்களாக ரீடிங் மின் விளக்கு மற்றும் டைனிங் டேபிள் உள்ளிட்டவற்றை டிசி சேர்த்துள்ளது. இவற்றை ஒன் டச் பட்டன்கள் மூலம் கன்ட்ரோல் செய்ய முடியும்.

இத்துடன், சிறிய குளிர்விப்பானும் வழங்கப்பட்டுள்ளது. இது ட்ரிங்க்ஸ்களை குளிர்விக்க உதவும். இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்கும் ஒரு சில லட்சங்கள் மட்டுமே செலவாகியிருப்பதாக கூறப்படுகின்றது. துள்ளியமாக எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

Most Read Articles
English summary
DC Design Converted Toyota Fortuner Into Luxurious Car - Video. Read In Tamil.
Story first published: Thursday, July 23, 2020, 14:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X