ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு.. அம்பாஸ்டர் காரின் புதிய அவதாரம்... இதை நம்மால் வாங்க முடியுமா..?

ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் கார் பிரபல ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் அழகிற்கே டஃப் கொடுக்கின்ற வகையில் மாறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு.. அம்பாஸ்டர் காரின் புதிய அவதாரம்... இதை நம்மால் வாங்க முடியுமா..?

மாடிஃபிகேஷன் உலகமே அசந்துபோகின்ற வகையில் டிசி2 நிறுவனம் பிரபல ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் காரை மாற்றியமைத்துள்ளது. இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மாடிஃபிகேஷன் நிறுவனங்களில் டிசி நிறவனமும் ஒன்று. இந்நிறுவனம், கார்களை மாற்றியமைப்பதைப்போல் அண்மையில் டிசி2 என தன்னை தானே மாற்றிக் கொண்டது.

ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு.. அம்பாஸ்டர் காரின் புதிய அவதாரம்... இதை நம்மால் வாங்க முடியுமா..?

இதைத்தொடர்ந்து, வாகனங்களையும் மிக ரம்மியமான தோற்றத்தில் அது மாடிஃபை செய்து வருகின்றது. மிக நீண்ட காலமாக இந்தியாவில் தன் சேவையைச் செய்து வரும் டிசி நிறுவனம் பழங்கால வாகனங்கள் முதல் சில இம்போர்டட் கார்கள் வரை மாடிஃபைச் செய்திருக்கின்றது. அந்தவகையில், சில பிரம்மிப்பூட்டும் வகையிலான மாடிஃபிகேஷன்களை அது செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு.. அம்பாஸ்டர் காரின் புதிய அவதாரம்... இதை நம்மால் வாங்க முடியுமா..?

இந்நிலையில், ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் காரை வாயைப் பிளக்கும் வகையில் மிகவும் ஸ்டைலிஷாக டிசி மாடிஃபை செய்துள்ளது. இந்த மாடிஃபிகேஷனால் பழங்கால அம்பாஸ்டர் கார், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு இணையாக மாறியிருக்கின்றது.

ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு.. அம்பாஸ்டர் காரின் புதிய அவதாரம்... இதை நம்மால் வாங்க முடியுமா..?

முக்கியமாக இந்த கார் மின்சார அவதாரத்திற்கு மாறியிருப்பது பார்வையாளர்கள் மற்றும் மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. அண்மைக் காலங்களாக மின்சார வாகனங்களுக்கான சந்தை விரிவடைந்து வருவதன் காரணத்தினாலயே டிசி நிறுவனம் அம்பாஸ்டர் காரை மின்சார ரகத்தில் மாடிஃபை செய்து, காட்சிப்படுத்தியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு.. அம்பாஸ்டர் காரின் புதிய அவதாரம்... இதை நம்மால் வாங்க முடியுமா..?

இதற்காக, புதிய உடை தோற்றம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்டவற்றை டிசி நிறுவனம் சேர்த்துள்ளது. ஆகையால், இது அம்பாஸ்டர் கார் தானா என்ற கேள்வியை நம் மத்தியில் கேட்க வைக்கின்ற அளவிற்கு மாறியிருக்கின்றது. குறிப்பாக, இதன் ரெட்ரோ ஸ்டைலிலான தோற்றம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்களின் பிரபல மாடல்களுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் உள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு.. அம்பாஸ்டர் காரின் புதிய அவதாரம்... இதை நம்மால் வாங்க முடியுமா..?

இந்த ஆர்பரிக்கும் ஸ்டைலுடன் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கின்ற வகையில் ஏராளமான சொகுசு வசதிகளையும் டிசி இந்த காரில் புகுத்தியுள்ளது. இதனாலயே இந்த கார் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் காட்சியளிக்கின்றது.

ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு.. அம்பாஸ்டர் காரின் புதிய அவதாரம்... இதை நம்மால் வாங்க முடியுமா..?

இதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் விற்பனைக்கு வரவிருக்கும் புத்தம் புதிய கான்செப்ட் மாடல் என்ற பிம்பத்தையும் நம் மத்தியில் தோன்ற வைத்துள்ளது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் காராக ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் இருக்கின்றது. இதுமட்டுமின்றி, பின் பக்க வீல் இயக்கம் கொண்ட முதல் காரும் இதுதான்.

ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு.. அம்பாஸ்டர் காரின் புதிய அவதாரம்... இதை நம்மால் வாங்க முடியுமா..?

மேலும், நீடித்து உழைக்கும் தன்மைக் கொண்டது. இதன் காரணத்தினாலயே தற்போதும் அம்பாஸ்டர் கார்கள் சிலவற்றை இந்தியச் சாலைகளில் நம்மால் காண முடிகின்றது. இது அறிமுகமான புதிதில் அரிசியல் பிரமுகர்களின் விருப்பத்தைப் பெற்ற காராக இருந்தது. இதற்கு இந்த காரின் அதிக பாதுகாப்பு திறனே முக்கிய காரணம்.

ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு.. அம்பாஸ்டர் காரின் புதிய அவதாரம்... இதை நம்மால் வாங்க முடியுமா..?

இத்தகைய புகழ் வாய்ந்த அம்பாஸ்டர் காரையே டிசி2 தற்போது மாடிஃபை செய்து புதிய அவதாரத்தை வழங்கியிருக்கின்றது. இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்தைக் கண்ட பலர் இந்த எப்போது விற்பனைக்கு வரும்..? ஆவலில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால், டிசி நிறுவனம் இதனை கான்செப்ட் மாடலாக மட்டுமே உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு.. அம்பாஸ்டர் காரின் புதிய அவதாரம்... இதை நம்மால் வாங்க முடியுமா..?

இது எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. அதேசமயம், இம்மாதிரியான கார்களை உற்பத்தி செய்யும் எண்ணமும் தற்போதைக்கு டிசி2-விடம் இல்லை என்று கூறப்படுகின்றது.

ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு.. அம்பாஸ்டர் காரின் புதிய அவதாரம்... இதை நம்மால் வாங்க முடியுமா..?

ஆனால், இந்த கார் விற்பனைக்கு வருமேயானால் மலிவு விலையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனென்றால், டிசி நிறுவனம் மாடிஃபை செய்த பல கார்கள் பார்ப்பதற்கு பல கோடி ரூபாய் மதிப்பிலானதாக காட்சியளித்தாலும், அது அவ்வாறு உருவாக்க மிகக் குறைந்த தொகையே செலவு செய்யப்படுகின்றது.

ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு.. அம்பாஸ்டர் காரின் புதிய அவதாரம்... இதை நம்மால் வாங்க முடியுமா..?

இதனடிப்படையிலேயே இந்த மின்சார காராக மாறியிருக்கும் அம்பாஸ்டர் கார் சற்று குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இப்போதைக்கு டிசி நிறுவனத்திடம் விற்பனைக்கான எண்ணம் இல்லை என்பதால் எதையும் உறுதியாக கூறிவிட முடியாது.

ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு.. அம்பாஸ்டர் காரின் புதிய அவதாரம்... இதை நம்மால் வாங்க முடியுமா..?

அதேசமயம், இந்த கார் பலர் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டியிருக்கின்றது. இந்த எதிர்பார்ப்பிற்கு இ ஆம்பி என பெயரிடப்பட்டிருக்கும் அம்பாஸ்டர் காரின் கொள்ளை அழகே மிக முக்கியமான காரணமாக உள்ளது. தொடர்ந்து, பலரின் எண்ணம் இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்பதாகவும் உள்ளது.

Most Read Articles
English summary
DC Design Rendered Hindustan Ambassador As Retro Styled EV. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X