கொரோனா வைரஸ் எதிரொலி: ஏர் பேக் - ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சங்களை போல் இனி இதுவும் கார்களில் இடம்பெறலாம்?

கொரோனா வைரஸ் எதிரொலி, ஏர் பேக் மற்றும் ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சங்களைப் போல் மற்றுமொரு புதிய பாதுகாப்பு அம்சம் இனி புதுமுக கார்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா வைரஸ் எதிரொலி: ஏர் பேக் - ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சங்களை போல் இனி இதுவும் கார்களில் இடம்பெறலாம்..?

உலக நாடுகள் அனைத்தையும் கண்ணுக்கே தெரியாத ஒற்றை வைரஸ் அச்சுறுத்து வருகின்றது. தொடர்ந்து, தனது கோர பிடியால் மக்களை வாட்டி வதைத்தும் கொண்டிருக்கின்றது. மேலும், முடிந்தால் என்மீது கை வைத்து பாருங்கள் என உலக சுகாதாரத்துறைகளுக்கே பெரும் சவாலை அது விடுத்து வருகின்றது.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

கொரோனா வைரஸ் எதிரொலி: ஏர் பேக் - ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சங்களை போல் இனி இதுவும் கார்களில் இடம்பெறலாம்..?

ஆகையால், உலக நாடுகள் அனைத்தும் தனது ஒற்றை வில்லனாக கொரோனா வைரஸை கருதி, தீவிர போராட்டத்தில் களமிறங்கியிருக்கின்றன.

இந்த போரில் முக்கிய பங்கினை வகிக்கும் விதமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும் உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

கொரோனா வைரஸ் எதிரொலி: ஏர் பேக் - ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சங்களை போல் இனி இதுவும் கார்களில் இடம்பெறலாம்..?

குறிப்பாக, நிதியுதவி வழங்குதல், பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரித்தல் உள்ளிட்டவற்றை அவை செய்து வருகின்றன.

இந்நிலையில், மக்களை எப்போதும் கிருமி தொற்றில் இருந்து காக்கும் நடவடிக்கையாக டிசி2 நிறுவனம் புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலி: ஏர் பேக் - ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சங்களை போல் இனி இதுவும் கார்களில் இடம்பெறலாம்..?

வாகனங்களை மாடிஃபை செய்வதில் பெயர்போன நிறுவனமான டிசி2 இருக்கின்றது. இது இந்தியாவில் மிகவும் பழமையான வாகன மாடிஃபிகேஷன் நிறுவனம் ஆகும். முன்பு டிசி டிசைன்ஸ் என்ற பெயரில் செயலாற்றி வந்த இந்நிறுவனம் சமீபத்திலேயே டிசி2 என மாற்றிக் கொண்டது.

இந்த பெயர் மாற்றத்துடன் வாகன மாடிஃபிகேஷனில் சில புதிய யுக்தியையும் கையாளத் தொடங்கியிருக்கின்றது.

கொரோனா வைரஸ் எதிரொலி: ஏர் பேக் - ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சங்களை போல் இனி இதுவும் கார்களில் இடம்பெறலாம்..?

அதன்படி, இதுவரை வாகன உலகமே கண்டிராத வகையிலான டிசைன்கள் மற்றும் மாடிஃபிகேஷன்களை அது வழங்க ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில், அறிமுகம் செய்யப்பட்டதுதான் இ-ஆம்பி என்ற மாடிஃபை செய்யப்பட்ட அம்பாஸிடர் கார் மற்றும் சியான் விக்ரமின் மினி கேரவன் உள்ளிட்ட வாகனங்கள் ஆகும்.

கொரோனா வைரஸ் எதிரொலி: ஏர் பேக் - ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சங்களை போல் இனி இதுவும் கார்களில் இடம்பெறலாம்..?

இதைத்தொடர்ந்து, தற்போது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை ஒழிக்கும் விதமாக சானிடைசர் அம்சத்தை மாடிஃபிகேஷன் கிட் வாயிலாக வழங்க டிசி2 நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலி: ஏர் பேக் - ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சங்களை போல் இனி இதுவும் கார்களில் இடம்பெறலாம்..?

அண்மையில் டிசி2 நிறுவனம் க்ளப் இன்டீரியர் கிட் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சத்தில் சுகாதாரத்தூய்மையை உறுதி செய்யும் அம்சமும் ஒன்று. இந்த அம்சம் காரின் பாசஞ்ஜர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரின் பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும்.

அதாவது, காற்றைத் தூய்மைப் படுத்துதல் மற்றும் கிருமி நாசினிகளைத் தெளித்தல் உள்ளிட்டவற்றை இந்த அம்சம் செய்யும்.

கொரோனா வைரஸ் எதிரொலி: ஏர் பேக் - ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சங்களை போல் இனி இதுவும் கார்களில் இடம்பெறலாம்..?

இதற்காக, பிரத்யேக எலக்ட்ரானிக் சானிட்டைசர் ஸ்பிரேக்கள் காரின் டூர் மற்றும் ரூஃப் பகுதியில் நிறுவப்படும். அவை, ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு முறை தூய்மையை உறுதிச் செய்யும் விதமாக கிருமி நாசினி தெளித்துவிடும். இதை நமது தேவைக்கேற்ப ஆன் மற்றும் ஆஃப் செய்து கொள்ளவும் முடியும். இதனால், காரில் பயணிப்போருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறப்படுகின்றது.

கொரோனா வைரஸ் எதிரொலி: ஏர் பேக் - ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சங்களை போல் இனி இதுவும் கார்களில் இடம்பெறலாம்..?

ஆனால், இந்த பாதுகாப்பு கிட் தற்போது அனைத்து கார்களுக்கும் தயாராக இல்லை. எனவே, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, டொயோட்டா பார்ச்சூனர், மஹிந்திரா மராஸ்ஸோ, கியா கார்னிவல் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸ் உள்ளிட்ட கார்களுக்கு மட்டுமே தற்போது தயார் நிலையில் இருக்கின்றது.

கொரோனா வைரஸ் எதிரொலி: ஏர் பேக் - ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சங்களை போல் இனி இதுவும் கார்களில் இடம்பெறலாம்..?

இது தவிர, ஆடி ஏ 8, ஆடி கியூ 7, மெர்சிடிஸ் ஜிஎல்எஸ், மேபேக், பிஎம்டபிள்யூ எக்ஸ் 7, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (விரிவாக்கப்பட்ட வீல்பேஸ்), வோல்வோ எக்ஸ்சி 90, ஜாகுவார் எக்ஸ்ஜேஎல், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (வோக் மற்றும் ஸ்போர்ட் ), மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் (விரிவாக்கப்பட்ட வீல்பேஸ்) உள்ளிட்ட கார்களுக்கும் ஆர்டரின் பேரில் இந்த கிட்டை தயார் செய்ய இருப்பதாக டிசி2 தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலி: ஏர் பேக் - ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சங்களை போல் இனி இதுவும் கார்களில் இடம்பெறலாம்..?

இதுதவிர, சில மாடிஃபிகேஷன் பேக்குடன் இந்த பாதுகாப்பு அம்சத்தை இலவசமாகவும் வழங்க டிசி2 முடிவு செய்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியிருக்கின்றது. எனவே, வரும் காலங்களில் இதுபோன்ற அம்சத்தை பாதுகாப்பு அம்சமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் புதிய வாகனங்களில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் எதிரொலி: ஏர் பேக் - ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சங்களை போல் இனி இதுவும் கார்களில் இடம்பெறலாம்..?

தற்போதைய நவீன காலத்தைக் கருத்தில் கொண்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள், நேரடி இணையதள வசதியைக் காரில் வழங்கி வருகின்றன. இதுதவிர நேரடி டிவி, லைவ் டிராக்கிங் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதியையும் வாரி வழங்கி வருகின்றன. அந்தவகையில், அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கும் கிருமி நாசினி அம்சத்தையும் விரைவில் அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதேசமயம், இந்த அம்சம் சில விலையுயர்ந்த கார்களில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
DC2 Reveals Sanitizer Kits For Cars. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X