விநோதம்! ஸ்பீடு போஸ்ட் மூலம் வாகன ஓட்டிகளை மிரள வைக்கும் போலீஸார்... என்னனு தெரிஞ்சா அசந்துருவீங்க!
கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா கொஞ்சம் கொஞ்சம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. இத்துடன் சேர்ந்தே விதிமீறல்களும் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. இவற்றை களையெடுக்க தலைநகர் போலீசார் மிகவும் தனித்துவமான நடவடிக்கையைக் கையாளத் தொடங்கியிருக்கின்றனர். வாருங்கள் இதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நெடு நீண்ட காலமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்றது. தற்போது நான்காம் கட்டத்திற்கு இந்த தடையுத்தரவு உயர்த்தப்பட்டுள்ளது. முதல் மூன்று நிலைகளில் காணப்படாத அளவிலான தளர்வுகள் இந்த நான்காம் நிலை ஊரடங்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கியிருக்கின்றன.

அரசின் இந்த நிலையால் இந்தியா மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு இருந்ததைப் போன்று இது இல்லையென்றாலும், சாலைகளில் சற்றே வாகன நெரிசல் ஏற்படத் தொடங்கியிருக்கின்றது.

அதிலும், இந்தியாவின் முக்கிய நகரங்களில் டிராஃபிக் ஜாம் ஏற்படுமளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது.
இந்த வாகன நெரிசலுடன் சேர்ந்தே போக்குவரத்து விதிமீறல்களும் தலைதூக்க தொடங்கியிருக்கின்றன.

எனவே, வைரஸ் பரவலை தடுப்பது மட்டுமின்றி விதிமீறல்களை களையெடுப்பதிலும் போலீசார் தனிக் கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரசால் இக்கட்டான சூழல் நிலவுவதால் விதிமீறல் வாதிகளை கையாள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆகையால், அவர்களை கையாள தனித்துவமான யுக்தியை கையாள்வது அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.
இந்நிலையில், டெல்லி காவல்துறை விதிமீறும் வாகன ஓட்டிகளை களையெடுக்க தனித்துவமான நடவடிக்கைகளைக் கையாளத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, டெல்லி காவல்துறை, போக்குவரத்து விதிமீறல்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது தபால் மூலம் அபராத இ-செல்லாண் மற்றும் நோட்டீஸ்களை அனுப்பி வருவது தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கை, விதிமீறுபவர்களிடம் இருந்து போலீசார்களை சற்று விலகி வைக்க உதவும்.

இந்த புதுவிதமான நடவடிக்கையின்மூலம், டெல்லி காவல்துறை இதுவரை 1,00,436 நோட்டீஸ்களை குறுஞ்செய்தி வாயிலாகவும், ஸ்பீட் போஸ்ட் வாயிலாக 80 நோட்டீஸ்களையும் அனுப்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவையனைத்தையும், சாலையோர கேமிராக்களின்மூலம் கண்டறியப்பட்ட விதிமீறல் சம்பவங்கள் ஆகும்.

மார்ச் 25 முதல் மே 17 வரையிலான காலகட்டத்தில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலேயே இந்த அபராத செல்லாண்கள் விதிமீறல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, டெல்லி காவல்துறையினர் பிரத்யேக கேமிரா ஆப் மூலமும் அபராதங்களை விதிமீறல் வாதிகளுக்கு வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதன்மூலம், 7,998 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.
டெல்லி போலீசாரின் இந்த தனித்துவமான அதிரடி நடவடிக்கைகள், விதிமீறும் வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று, நாடு முழுவதும் போலீஸார் வாகன விதிமீறல்களைக் குறைப்பதற்கான பணியில் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றனர். குறிப்பாக, தேசியளவில் அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தும் விதமாக பல அதிரடி நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டனர். லத்தி சார்ஜ், வழக்கு பதிவு, விநோத தண்டனைகள் மற்றும் அபராதம் உள்ளிட்ட யுக்திகளை அவர்கள் கையாண்டனர்.

இந்த நிலையிலேயே விதிமீறல் வாகன ஓட்டிகளிடம் இருக்கும் நேரடி தொடர்பைத் தவிர்க்கும் விதமாக டெல்லி போலீஸார், குறுஞ்செய்தி மற்றும் தபால் மூலமாக அபராதங்களை விதிக்கும் பணியில் இறங்கியிருக்கின்றனர். இதனால், வாகன ஓட்டி மற்றும் போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்ற அபாயம் நீங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








