வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால்! மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால்! மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்

இந்தியாவிலேயே காற்று மாசுபாட்டால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நகரம் டெல்லி. அங்கு காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதற்கு, பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. எனவே தலைநகர் டெல்லியில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால்! மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்

இதன் ஒரு பகுதியாக டெல்லி மாநில அரசின் மின்சார வாகன கொள்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானிய தொகை வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதன்படி மின்சார கார்களை வாங்குபவர்களுக்கு 1.50 லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கவுள்ளது.

வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால்! மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்

இதன்மூலம் மின்சார வாகனங்களை வாங்குவதற்கான செலவு குறையும் என்பதால், அவற்றை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் டெல்லியில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக மின்சார வாகனங்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால்! மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்

எனவே சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான முயற்சிகளை டெல்லி மாநில அரசு தற்போது முடுக்கி விட்டுள்ளது. இதன்படி டெல்லியில் 200 சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைப்பதற்கான பணிகளை டெல்லி அரசு தற்போது தொடங்கியுள்ளது. அரசின் பல்வேறு துறைகள் இணைந்து இந்த பணிகளை மேற்கொள்கின்றன.

வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால்! மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்

டெல்லியில் சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைப்பதற்காக அம்மாநில அரசு ஒரு குழுவை உருவாக்கியுள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், டெல்லி மாநில அரசு, டெல்லி மேம்பாட்டு ஆணையம், டெல்லி போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால்! மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்

இதில், பொது சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கான இடங்களை கண்டறிய அடுத்த இரு வாரங்களில், விரிவான திட்டமிடலை அரசு நிறுவனங்கள் மேற்கொள்ளும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கு அதிகப்படியான பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் உதவி செய்யும் என்பதால், அவற்றை வேகமாக கட்டமைப்பதில் டெல்லி அரசு தீவிரமாக உள்ளது.

வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால்! மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''இந்தியாவில் டெல்லியை மின்சார வாகனங்களின் தலை நகரமாக மாற்றுவதற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புகிறார். உலக அளவில் பார்த்தாலும் கூட, டெல்லியில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கிறது'' என்றனர்.

வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால்! மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்

டெல்லி மாநில அரசை பொறுத்த வரையில், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன செக்மெண்ட்டில்தான், மின்சார வாகனங்களுக்கான மாற்றம் மிகப்பெரிய அளவில் நடக்க வேண்டும் என விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இதற்கு சிறப்பு கவனம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால்! மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்

இதன்படி ஸ்லோ சார்ஜிங் ஸ்டேஷன்களை (ஒவ்வொன்றும் 3.3 kW) அதிக அளவில் கட்டமைப்பதில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிகிறது. அதே சமயம் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை (ஒவ்வொன்றும் 15 kW) குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால்! மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்க அதிக செலவு ஆகும். மிக விலை உயர்ந்த இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்கள் பிரீமியம் நான்கு சக்கர வாகனங்களுக்குதான் அதிகம் பயன்படும். எனவே அவற்றை குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமைத்து விட்டு, அதற்கு பதிலாக ஸ்லோ சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிக அளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்றனர்.

வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால்! மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்

டெல்லி அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக, அங்கு வரும் காலங்களில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை பெரும் அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு உதவி செய்யும். டெல்லியை போன்று இன்னும் பல்வேறு மாநிலங்களும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றன.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Sunday, September 27, 2020, 5:30 [IST]
English summary
Delhi Government To Install 200 EV Charging Stations - Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+