பாடாய்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை... கேரள மக்கள் எடுத்த அதிரடி முடிவு... என்னனு தெரியுமா?

பெட்ரோல், டீசலின் அதிகப்படியான விலை காரணமாக, சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாடாய்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை... கேரள மக்கள் எடுத்த அதிரடி முடிவு... என்னனு தெரியுமா?

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. அதே சமயம் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளால், பலரும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தவித்து வருகின்றனர். எனவே தங்களின் வாழ்வாதாரத்திற்காக வாகனங்களை நம்பியுள்ளவர்கள் செலவு குறைந்த வேறு வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.

பாடாய்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை... கேரள மக்கள் எடுத்த அதிரடி முடிவு... என்னனு தெரியுமா?

அவர்களுக்கு சிஎன்ஜி வாகனங்கள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. பெட்ரோல், டீசலின் அதிகப்படியான விலையால் தற்போது பலரும் சிஎன்ஜி வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். குறிப்பாக கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக சிஎன்ஜி வாகனங்களின் பதிவு அதிகரித்து கொண்டு வருகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

பாடாய்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை... கேரள மக்கள் எடுத்த அதிரடி முடிவு... என்னனு தெரியுமா?

அதிலும் நகர பகுதிகளில்தான் சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மோட்டார் வாகன துறையிடம் இருந்து கிடைத்துள்ள தரவுகள் இதனை உறுதி செய்கின்றன. எர்ணாகுளம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடப்பாண்டு நவம்பர் மாதத்தின் முதல் வாரம் வரை 30 சிஎன்ஜி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாடாய்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை... கேரள மக்கள் எடுத்த அதிரடி முடிவு... என்னனு தெரியுமா?

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு இது வெறும் 5ஆக இருந்தது. இந்த 30 வாகனங்களில், 27 வாகனங்கள் கடந்த ஒரு சில மாதங்களில் பதிவு செய்யப்பட்டவை ஆகும். ஆலுவா, மட்டஞ்சேரி மற்றும் திரிபுனிதுரா ஆகிய பகுதிகளிலும் இதேபோல் சிஎன்ஜி வாகனங்களின் பதிவு அதிகரித்து கொண்டு வருகிறது. இதில், மட்டஞ்சேரி மற்றும் திரிபுனிதுரா ஆகிய பகுதிகளில் கடந்த 2019ம் ஆண்டு ஒரு சிஎன்ஜி வாகனம் கூட பதிவாகவில்லை.

பாடாய்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை... கேரள மக்கள் எடுத்த அதிரடி முடிவு... என்னனு தெரியுமா?

ஆனால் நடப்பாண்டில், ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பிறகு இந்த பகுதிகளில் 21 சிஎன்ஜி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலானவை ஆட்டோக்கள் ஆகும். பெட்ரோல், டீசலை விட சிஎன்ஜி விலை குறைவு என்பதுதான், இதற்கு முக்கியமான காரணமாக இருக்கும். நேற்றைய நிலவரப்படி (நவம்பர் 10) ஒரு கிலோ சிஎன்ஜியின் விலை வெறும் 56.50 ரூபாய் மட்டும்தான்.

பாடாய்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை... கேரள மக்கள் எடுத்த அதிரடி முடிவு... என்னனு தெரியுமா?

அதே சமயம் ஒரு லிட்டர் டீசலின் விலை 74.28 ரூபாய் ஆகவும், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 81.16 ரூபாய் ஆகவும் இருந்தன. விலை குறைவு என்பதுடன், தற்போது முன்னணி நிறுவனங்கள் பலவும் சிஎன்ஜி வாகனங்களை அதிகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தொடங்கியிருப்பதும் அவற்றின் பயன்பாடு அதிகரிக்க முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

பாடாய்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை... கேரள மக்கள் எடுத்த அதிரடி முடிவு... என்னனு தெரியுமா?

சிஎன்ஜி பயன்பாட்டால் காற்று மாசுபாடு குறையும் என்பதும் சிறப்பான விஷயம். பெட்ரோல், டீசலுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி சுற்றுச்சூழலுக்கு உகந்தது. எனவே சுற்றுச்சூழலில் ஆர்வம் உடையவர்களின் கவனத்தையும் சிஎன்ஜி வாகனங்கள் ஈர்த்து வருகின்றன. ஆனால் சிஎன்ஜி ஸ்டேஷன்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் இன்னும் பலர் சிஎன்ஜி வாகனங்களுக்கு மாற தயங்குகின்றனர்.

பாடாய்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை... கேரள மக்கள் எடுத்த அதிரடி முடிவு... என்னனு தெரியுமா?

எர்ணாகுளம் மாவட்டத்தை எடுத்து கொண்டால், தற்போதைய நிலையில் வெறும் 7 சிஎன்ஜி ஸ்டேஷன்கள் மட்டுமே உள்ளன. எனவே சிஎன்ஜி ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரித்தால், இன்னும் பலர் சிஎன்ஜி வாகனங்களுக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் காற்று மாசுபாடு குறைந்து, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Demand For CNG Vehicles Up In Ernakulam District. Read in Tamil
Story first published: Wednesday, November 11, 2020, 11:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X