டீசலா?.. சிஎன்ஜியா?.. எது நம்ம பாக்கெட்டிற்கு உகந்தது... ஓர் சிறப்பு அலசல்...

டீசல் vs சிஎன்ஜி இதில் எது பெஸ்ட் என்பதை இந்த பதிவில் காணலாம்.

டீசலா?.. சிஎன்ஜியா?.. எது நம்ம பாக்கெட்டிற்கு உகந்தது... ஓர் சிறப்பு அலசல்...

நாளுக்கு நாள் புதிய உச்சத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வாகன உரிமைதாரர்களுக்கு மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஒட்டுமொத்த அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்குமே எரிபொருள் விலையுயர்வும் மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.

டீசலா?.. சிஎன்ஜியா?.. எது நம்ம பாக்கெட்டிற்கு உகந்தது... ஓர் சிறப்பு அலசல்...

எனவேதான் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையுயர்வைப் பற்றிய தகவல் வெளிவரும் போதெல்லாம் மக்கள் மத்தியில் அத்தகவல் புளியை கரைக்க ஆரம்பித்துவிடுகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை மட்டுமில்லைங்க இவற்றால் ஏற்படும் பின் விளைவுகளும் அதிகமே.

டீசலா?.. சிஎன்ஜியா?.. எது நம்ம பாக்கெட்டிற்கு உகந்தது... ஓர் சிறப்பு அலசல்...

ஆகையால்தான் தற்போது எரிபொருள் வாகனங்களுக்கான மாற்று வாகனங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணியில் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், மின்சாரம் மற்றும் சிஎன்ஜி வாகன பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

டீசலா?.. சிஎன்ஜியா?.. எது நம்ம பாக்கெட்டிற்கு உகந்தது... ஓர் சிறப்பு அலசல்...

ஏற்கனவே மின்சார வாகனங்கள் பற்றி நாம் பல முறை பார்த்துவிட்டதால் தற்போது சிஎன்ஜியால் ஏற்படும் பயன் மற்றும் நன்மைகளைப் பற்றியே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். விரைவில் நாட்டின் முக்கிய சாலைகள் அனைத்தையும் சிஎன்ஜி வாகனங்கள் ஆளவிருப்பதால் அவற்றைப் பற்றி அறிவது முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. எனவேதான், அதிக லாபத்தை ஈட்டக்கூடிய எரிபொருள் என நாம் நம்பிக்கொண்டிருக்கும் டீசலுடன், சிஎன்ஜியை ஒப்பிட்டு இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

டீசலா?.. சிஎன்ஜியா?.. எது நம்ம பாக்கெட்டிற்கு உகந்தது... ஓர் சிறப்பு அலசல்...

சேவை மற்றும் பராமரிப்பு:

குறைந்த செலவு மற்றும் சிறந்த மைலேஜ் என வரும்போது டீசல் கார் மிகப்பெரிய நன்மையைக் கொண்டிருந்தாலும், சேவை மற்றும் பராமரிப்பு அடிப்படையில் சிஎன்ஜியை விட அது விலை உயர்வானதாகவே காட்சியளிக்கின்றது.

டீசலா?.. சிஎன்ஜியா?.. எது நம்ம பாக்கெட்டிற்கு உகந்தது... ஓர் சிறப்பு அலசல்...

சுற்றுச்சூழலுக்கு நண்பன்:

டீசலில் இயங்கும் வாகனங்களை விட சிஎன்ஜி கார்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை ஆகும். சி.என்.ஜி கார்கள் குறைந்த மாசு வெளியேற்ற உமிழ்வைக் கொண்டுள்ளன. எனவேதான் அதிக மாசுபட்டைக் கொண்டிருக்கும் நகரப்புறங்களில் சிஎன்ஜி வாகனங்கள் அதிகளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. இவை காற்றில் கலக்கும் கார்பன் அளவை குறைக்க உதவும்.

டீசலா?.. சிஎன்ஜியா?.. எது நம்ம பாக்கெட்டிற்கு உகந்தது... ஓர் சிறப்பு அலசல்...

எனவே சற்றுச்சூழலை காக்க விரும்புபவர்கள் சிஎன்ஜி வாகனத்தைப் பயன்படுத்துவதே சரியான செயலாகும். அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு பதிலாக இந்த வாகனத்தைப் பயன்படுத்துவது மிகச்சிறந்தது ஆகும்.

டீசலா?.. சிஎன்ஜியா?.. எது நம்ம பாக்கெட்டிற்கு உகந்தது... ஓர் சிறப்பு அலசல்...

செலவு மீட்பு:

டீசலை விட சிஎன்ஜி எஞ்ஜின் கொண்ட வாகனங்களின் விலை உயர்ந்தவை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிறைய பேருக்கு இருக்கின்றது. உண்மையில், டீசல் எஞ்ஜினுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி இயந்திரத்திற்கு ஆக கூடிய செலவு மிக குறைவாக உள்ளது. ஆகையால், நாம் கொடுக்கக்கூடிய தொகையை மிக விரைவில் மீட்டெடுக்க முடியும்.

டீசலா?.. சிஎன்ஜியா?.. எது நம்ம பாக்கெட்டிற்கு உகந்தது... ஓர் சிறப்பு அலசல்...

விலை எவ்வளவு?

டீசல் ஒரு லிட்டரின் விலையை விட சிஎன்ஜி மதிப்பு 30 முதல் 50 சதவீதம் வரை மலிவானது ஆகும். எனவேதான், சிஎன்ஜி வாகனத்திற்கு கொடுக்கக்கூடிய தொகையை விரைவில் நம்மால் மீட்டெடுக்கும் என கூறுகின்றோம். மேலும், எரிபொருள் நுகர்வும் (பயன்பாடு) மிக குறைவு. இதன் மூலமும் நம்மால் கணிசமான லாபத்தை ஈட்ட முடியும். ஆகையால்தான் சி.என்.ஜி செலவு குறைந்த வாகனமாக பார்க்கப்படுகின்றது. மேலும், இது நம்முடை பாக்கெட்டை பாதுகாக்க உதவும்.

டீசலா?.. சிஎன்ஜியா?.. எது நம்ம பாக்கெட்டிற்கு உகந்தது... ஓர் சிறப்பு அலசல்...

இதன் ஆயுட்காலம் எப்படி?

டீசல் வாகனங்களைக் காட்டிலும் சிஎன்ஜி வாகனங்களின் ஆயுட்காலம் சற்று கூடுதலாகவே உள்ளது. ஓர் டீசல் தேர்வைக் கொண்டிருக்கும் வாகனம் அதிகபட்சமாக 6 முதல் 8 வருட ஆயுட்காலத்தை மட்டுமே கொண்டிருக்கின்றது. இதனுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி எஞ்ஜின் கொண்ட வாகனம் அதிகபட்சமாக 10 முதல் 12 ஆண்டுகள் வரையிலான ஆயுட்காலத்தைக் கொண்டிருக்கின்றது. ஆகையால், அனைத்து வகையிலும் லாபத்தை ஈட்டக்கூடிய வாகனமாக இது உள்ளது.

டீசலா?.. சிஎன்ஜியா?.. எது நம்ம பாக்கெட்டிற்கு உகந்தது... ஓர் சிறப்பு அலசல்...

குறைந்த CO2 உமிழ்வு:

சிஎன்ஜி-யில் இயங்கும் வாகனங்கள் டீசல் அல்லது பெட்ரோலால் இயங்கும் வாகனங்களைக் காட்டிலும் 30 சதவீதம் குறைவான கார்பன் டை ஆக்சைடையே வெளியேற்றுகின்றது.

டீசலா?.. சிஎன்ஜியா?.. எது நம்ம பாக்கெட்டிற்கு உகந்தது... ஓர் சிறப்பு அலசல்...

சிஎன்ஜி எதிர்காலம் எப்படி:

சிஎன்ஜி வாகனங்களின் விலையைப் போலவே இந்த எரிபொருளின் விநியோகம் எப்படி இருக்கும் என்ற விஷயத்திலும் மக்களுக்கு அதிகளவில் குழுப்பம் ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் வளம் ஏற்கனவே குறைந்துவிட்டதால் இந்த குழப்பம் மக்கள் மத்தியில் நீடித்து வருகின்றது. ஆனால், கச்சா எண்ணெயுடன் ஒப்பிடும்போது இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) இருப்பு மிக தாராளமாகவே உள்ளது.

டீசலா?.. சிஎன்ஜியா?.. எது நம்ம பாக்கெட்டிற்கு உகந்தது... ஓர் சிறப்பு அலசல்...

சிஎன்ஜியின் நிலை தன்மை:

சிஎன்ஜி தயாரிப்பில் முக்கிய அங்கமாக இருக்கும் மீத்தேன், உயிரிகளின் கழிவு மற்றும் கசடுகளிலிருந்து உருவாக்கக் கூடியதாகும். எனவேதான் சிஎன்ஜி நிலைத் தன்மைக் கொண்ட எரிபொருள் என கூறப்படுகின்றது. மேலும், இதன் இருப்பும் தற்போது தாரளமாகக் காணப்படுகின்றது.

டீசலா?.. சிஎன்ஜியா?.. எது நம்ம பாக்கெட்டிற்கு உகந்தது... ஓர் சிறப்பு அலசல்...

சிஎன்ஜி பாதுகாப்பானது:

சிஎன்ஜி சிலிண்டர்கள் மிகவும் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டவை ஆகும். மேலும், கூடுதல் பாதுகாப்பிற்காக கார்பன் ஃபைபரால் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் (சிஆர்எஃப்பி) இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சிஎன்ஜி உருளைகள் வாகனத்தில் இருப்பதால் ஆபத்து அதிகம் என நினைப்பைத் தவிர்த்துவிடலாம். அவை, அதிக வலுவான பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.

டீசலா?.. சிஎன்ஜியா?.. எது நம்ம பாக்கெட்டிற்கு உகந்தது... ஓர் சிறப்பு அலசல்...

நாம் மேலே பார்த்த ஒட்டுமொத்த தகவலையும் வைத்து பார்க்கையில் அனைத்து வகையிலும் சிஎன்ஜி வாகனங்கள் லாபத்தை ஈட்டித் தரக்கூடியவையாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி, இதற்கான எதிர்காலமும் ஏகபோகமாக இருக்கின்றது. எனவேதான், மாருதி முதல் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் சிஎன்ஜி தேர்வை வழங்க ஆரம்பித்துள்ளன.

Most Read Articles
English summary
Diesel vs CNG Cars Comparative Analysis. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X