வைரஸ்களை அழிக்கும் சானிட்டைசர்கள் மிகவும் ஆபத்தானவை... ஏன் இப்படி கூறுகிறீர்கள்? இதோ வீடியோ ஆதாரம்!

வைரஸ்களை அழிக்கப் பயன்படுத்தும் கிருமி நாசினிகள் மிகவும் ஆபத்தானவை என்பது உறுதி செய்யும் வகையில் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வைரஸ்களை அழிக்கும் இந்த சானிட்டைசர்கள் மிகவும் ஆபத்தானவை... ஏன் இப்படி கூறுகிறீர்கள்? இதோ வீடியோ ஆதாரம்!

உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வரும் ஒற்றை உயிர் கொல்லி கொரோனா வைரஸ், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்டு இருக்கிறது என்றே கூறிவிடலாம். இந்த வைரஸ் பரவ ஆரம்பித்த முதல் நாளிலிருந்து தற்போது வரை புதிய புதிய பாடங்களை மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்து வருவதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

வைரஸ்களை அழிக்கும் இந்த சானிட்டைசர்கள் மிகவும் ஆபத்தானவை... ஏன் இப்படி கூறுகிறீர்கள்? இதோ வீடியோ ஆதாரம்!

அதில் முதலாவது இடத்தில் இருப்பது தூய்மை. இந்த வைரஸ் காற்றின் மூலமே பரவும் தன்மையைக் கொண்டிருப்பதால், மக்கள் பலர் கட்டாய மாஸ்க் அணியும் பழக்கத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். பாதிப்புடையவர் பயன்படுத்திய பொருள்களின் மூலமும் வைரஸ் பரவும் என்பதால், வெளியே சென்று வந்த பின்னர் கிருமி நாசினிகளைப் பயன்படுத்து அல்லது கைகளை சோப்பு போட்டு கழுவுவது என புதிய பழக்கங்களுக்கு மாறியிருக்கின்றனர்.

வைரஸ்களை அழிக்கும் இந்த சானிட்டைசர்கள் மிகவும் ஆபத்தானவை... ஏன் இப்படி கூறுகிறீர்கள்? இதோ வீடியோ ஆதாரம்!

இதனால், மாஸ்க், சானிட்டைசர் போன்ற கிருமி நாசினிகள் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறியிருக்கின்றன. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், மக்கள் அரிசு, பருப்புகளை வாங்குவதுபோல் தற்போது கிருமி நாசினி, கையுறை மற்றும் முக மூடிகள் உள்ளிட்டவற்றை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

வைரஸ்களை அழிக்கும் இந்த சானிட்டைசர்கள் மிகவும் ஆபத்தானவை... ஏன் இப்படி கூறுகிறீர்கள்? இதோ வீடியோ ஆதாரம்!

தற்போது வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத காரணத்தால், தற்காலிகமாக தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவதற்கு இவையே பேருதவியாக இருக்கின்றன.

அதேசமயம், வைரசிடம் இருந்து பாதுகாப்பதற்காக நாம் பயன்படுத்தும் ஒரு சில கிருமி நாசினிகள் நம் உயிருக்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் இருக்கின்றன. இதனை விளக்கும் வகையில் ஓர் சம்பவம் இங்கிலாந்தில் தற்போது அரங்கேறியிருக்கின்றது.

வைரஸ்களை அழிக்கும் இந்த சானிட்டைசர்கள் மிகவும் ஆபத்தானவை... ஏன் இப்படி கூறுகிறீர்கள்? இதோ வீடியோ ஆதாரம்!

உலக நாடுகளைப் போலவே இங்கிலாந்திலும் கொரோனா அச்சம் காரணமாக நீண்ட காலமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்றது. இந்த நிலையில்தான், நான்கு வாரங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த மெர்சிடிஸ் பென்ஸ் செடான் ரக காரில் ஒலிவியா-லேலா எனும் 11 வயது சிறுமி, அவரது தாயாருடன் சேர்ந்து குறிப்பிட்ட மருந்துகளை வாங்குவதற்காக புறப்பட்டார்.

வைரஸ்களை அழிக்கும் இந்த சானிட்டைசர்கள் மிகவும் ஆபத்தானவை... ஏன் இப்படி கூறுகிறீர்கள்? இதோ வீடியோ ஆதாரம்!

அப்போது, காருக்குள் ஏறிய சிறுமி தன் கைகளை சுத்திகரிக்கும் விதமாக சானிட்டைசரை ஸ்பிரே செய்ய தொடங்கினார். அதற்காக சானிட்டைசரின் மூடியை திறந்தபோது, அந்த சானிட்டைசர் திடீரென வெடித்து சிதறியது. இதனால், காரின் குறிப்பிட்ட பகுதிகளில் பரவிய சானிட்டைசர் துளிகள் சில ஒலிவியாவின் வலப்பக்க முகம் மற்றும் கண்களைத் தாக்கியது.

வைரஸ்களை அழிக்கும் இந்த சானிட்டைசர்கள் மிகவும் ஆபத்தானவை... ஏன் இப்படி கூறுகிறீர்கள்? இதோ வீடியோ ஆதாரம்!

இதனால், முகம் மற்றும் கண்களில் அதிக எரிச்சலுடன் ஒலிவியாக துடிக்க ஆரம்பித்தார். ஒலியாவின் தாயார் முதலுதவி வழங்குவதில் கைதேர்ந்தவர் என கூறப்படுகின்றது. எனவே, காரை விட்டு உடனடியாக சிறுமியை வெளியேற்றிய அவர், கை வசம் இருந்த முதலுதவி மருந்துகளை வைத்து தற்காலிக சிகிச்சையை வீட்டிலேயே வழங்கினார். பின்னர், மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார்.

வைரஸ்களை அழிக்கும் இந்த சானிட்டைசர்கள் மிகவும் ஆபத்தானவை... ஏன் இப்படி கூறுகிறீர்கள்? இதோ வீடியோ ஆதாரம்!

இருப்பினும், கண் பார்வையில் லேசான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். கண்களுக்குள் புகுந்த சானிட்டைசரின் துளிகளாலே இந்த விபரீதம் ஏற்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த திடீர் விபத்திற்கான உரிய காரணம் தற்போதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

வைரஸ்களை அழிக்கும் இந்த சானிட்டைசர்கள் மிகவும் ஆபத்தானவை... ஏன் இப்படி கூறுகிறீர்கள்? இதோ வீடியோ ஆதாரம்!

இருப்பினும், நீண்ட நாட்களாக கார் வெயிலில் நிறுத்தியிருந்ததால் ஏற்பட்ட வேதிவினை மாற்றம் அல்லது ஏசி வெண்ட் வழியாக வந்த வேகமான காற்று உள்ளிட்டவற்றால் இந்த விபத்து அரங்கேறியிருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, சானிட்டைசர்களில் அதிக உயர்திறன் கொண்ட ஆல்கஹால் பயன்படுத்தப்படுகின்றது. நுண்ணியிரிகளைக் கொல்லும் நோக்கிலேயே உயர் ரக ஆல்கஹால்கள் சானிட்டைசரில் பயன்படுத்தப்படுகிறது. இவை, எளிதில் தீ பிடிக்கும் தன்மைக் கொண்டவை ஆகும். எனவே, சானிட்டைசர்களைப் பயன்படுத்திய பின் நெருப்பு மற்றும் தீப்பொறி வெளியாகும் பகுதிகளில் செல்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.

வைரஸ்களை அழிக்கும் இந்த சானிட்டைசர்கள் மிகவும் ஆபத்தானவை... ஏன் இப்படி கூறுகிறீர்கள்? இதோ வீடியோ ஆதாரம்!

ஆனால், ஒரு சிலர் கவனக்குறைவின் காரணமாக அஜாக்ரதையாக செயல்பட்டு பின்விளைவுகளில் சிக்குகின்றனர். இந்த சானிட்டைசர்களை நெருப்பிற்கு அருகில் இருக்கும் பயன்படுத்துவது எப்படி ஆபத்தை விளைவிக்குமோ, அதேபோல் அனைத்து ஜன்னல்களும் அடைக்கப்பட்ட காரில் அதிகளவு பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இதை உறுதி செய்யும் வகையிலேயே 11 வயது சிறுமி ஒலியாவியாவின் விபத்து சம்பவம் அமைந்திருக்கின்றது.

வைரஸ்களை அழிக்கும் இந்த சானிட்டைசர்கள் மிகவும் ஆபத்தானவை... ஏன் இப்படி கூறுகிறீர்கள்? இதோ வீடியோ ஆதாரம்!

இதுபோன்ற காரணத்தினாலயே சானிட்டைசர்களை 40 டிகிரிக்கு அதிகமான வெப்பநிலையில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். மேலும், இதனை குளிர்ந்த அல்லது நேரடி சூரிய ஒளி புகாத இடங்களில் வைத்தே பயன்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கான விழிப்புணர்வு வீடியோக்கள் சிலவும் இணையத்தில் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது.

வைரஸ்களை அழிக்கும் இந்த சானிட்டைசர்கள் மிகவும் ஆபத்தானவை... ஏன் இப்படி கூறுகிறீர்கள்? இதோ வீடியோ ஆதாரம்!

இருப்பினும், ஒரு சிலர் அறிவுரைகளைப் பெரிதாக கண்டுகொள்வதில்லை. தற்போது நிகழ்ந்திருக்கும் இந்த விபத்து சம்பவத்தில் முழுமையான காரணம் தெரியாதநிலையில், பசுமை வீடு விளைவின் காரணத்தினாலும் இது நிகழ்ந்திருக்கலாம் என்ற கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.

பசுமை வீடு விளைவு, என்பது வெளிப்புறத்தில் இருக்கும் வெப்பத்தைக் காட்டிலும் 10 முதல் 20 மடங்கு வரை அதிக வெப்பத்தை ஏற்படுத்தும் திறனைக் கொண்டது ஆகும். இதுதான் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. இதுமாதிரியான சூழ்நிலையில் ஹேண்ட் சானிட்டைசர் மட்டுமின்றி வாசனை திரவியங்களையும் கார்களுக்குள் வைத்து பயன்படுத்துவது மிகப்பெரிய ஆபத்திற்கு வழி வகுக்கும்.

மேலும், இம்மாதிரியான ஆபத்தை தவிர்க்க சானிட்டைசர் மற்றும் அதிக எரியும் திறனுடைய கெமிக்கல்களை காருக்குள் பயன்படுத்துவதைக் கை விட வேண்டும். மேலும், பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை நிழலான அல்லது கார் கூடாரங்களில் வைத்து பராமரிக்க வேண்டும். இதுபோன்ற முயற்சிகளால் மட்டுமே இயற்கையாக உருவாகும் வேதிவினை மாற்றங்களில் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 14, 2020, 12:26 [IST]
English summary
Do Not Use Hand Sanitizer In Car: Here Is Why. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+