விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

எதிர்கால விமான பயணத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் அனைத்து விதமான போக்குவரத்திற்கும் கடந்த ஐம்பது நாட்களுக்கும் அதிகமாக தடை நீடித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையை மாற்றும் விதமான முயற்சிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

எனவே விரைவில் பொது போக்குவரத்து வாகனங்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிச் செய்யும் வகையில் அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

இந்நிலையில், எதிர்கால விமான போக்குவரத்தில் கடைபிடிக்க வேண்டிய தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு மூன்றாம் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நாளையுடன் முடிவடைய இருக்கிறது. ஆனால், ஒரு சில மாநிலங்கள் கொரோனா தீவிரம் காரணமாக தடையுத்தரவை நீட்டித்து வருகின்றன.

விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

இருப்பினம், பொருளாதார வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு லேசான தளர்வுகளையும் அவை வழங்கி வருகின்றன. இதனடிப்படையிலேயே விரைவில் விமானம், ரயில் மற்றும் பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றது.

விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

ஏற்கனவே, இந்திய ரயில்வே வருகின்ற 30ம் தேதி வரை தனது ரத்து செய்யப்படுவதாக அறிவித்து விட்டது. இதேபோன்று, பேருந்து போக்குவரத்து சேவையும் இன்னும் பயன்பாட்டிற்கு வராத நிலையே நீடித்து வருகின்றது. ஆனால், விமான சேவை மட்டும் விரைவில் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

ஏனெனில் இதற்கான பேச்சுவார்த்தையில்தான் தற்போது அரசும், விமான போக்குவரத்து நிறுவனங்களும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. எனவே, விரைவில் கமர்சியல் விமான போக்குவரத்து பயன்பாட்டிற்கு வரவிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையிலேயே விமான பயணத்தின்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

அவை:

சமூக இடைவெளி கடைபிடிக்கும் விதமாக போர்டிங் பாஸ்-இல் முத்திரை போடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

பயணிகள் கட்டாயம் 350எம்எல் கை கிருமி நாசினி (hand sanitizer) வைத்திருக்க வேண்டும்.

2 மணி நேரத்திற்கும் குறைவான விமான பயணங்களில் உணவு விநியோகம் தடை.

உணவிற்கு பதிலாக சிற்றுண்டடி மட்டுமே வழங்கப்படும்.

விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

நோய் வாய்படாத ஆரோக்கியமானவர்களால் மட்டுமே பயணிக்க முடியும் (சிறு காய்ச்சல் அறிகுறி இரும்பல், தும்பல் காணப்பட்டாலும் கூட அனுமதி கிடையாது).

மிகக் குறிப்பாக விமானத்தின் கேபினுக்குள் லக்கேஜ் அனுமதி கிடையாது.

வலை வழியான (web-checkin) சரிபார்ப்பு மட்டுமே செய்யப்படும்.

புகைப்பிடித்தல் மற்றும் பிரார்த்தனை பகுதிகளைப் பயன்படுத்தத் தடை.

கட்டாயம் செல்போனில் ஆரோக்யா சேது மென்பொருள் தரவிறக்கம் செய்திருக்கி வேண்டும்.

விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

மாஸ்க் மற்றும் கையுறைகளை வைரசிடம் இருந்து பாதுகாக்கும் விதமாக கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலோ அதை கட்டாயம் படிவத்தில் தெரிவிக்க வேண்டும்.

ஆய்வின்போது சந்தேகப்படும்படி யாரேனும் இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

80 வயதுக்கு அதிகமான மூத்த குடிமக்களுக்கு கட்டாயம் பயணத்திற்கான அனுமதி கிடையாது.

விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

இதுபோன்ற உச்சபட்ச விதிகளே தற்போது வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இதனை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் இதைதான் அரசு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்த புதிய விதிகள், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும், கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுடன் இணைந்தே செயல்பாட்டிற்கு வரவிருக்கின்றது.

விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

அதாவது, தற்போது நாட்டின் பிற பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த புதிய பாதுகாப்பு விதிகள் கொரோனா வைரஸ் அச்சம் ஓயும் வரை பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

அதேசமயம், பல நாடுகள் விமான போக்குவரத்தை தொடங்காத காரணத்தால் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைக்காகவே இந்த புதிய விதி வகுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அரசின் இந்த வழிகாட்டுதலைத் தொடர்ந்து, பிசிஏஎஸ் (BCAS) மற்றும் ஏஏஐ (AAI) ஆகிய அமைப்புகளும், அதன் சார்பில் தனித்துவமான வழிக்காட்டுதல்களை விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றன.

விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

எனவே, விமானங்கள் பயன்பாட்டிற்கு வரும்போது கட்டாயம் குறைந்தளவு பயணிகளை மட்டுமே அனுமதிக்க இருக்கின்றன. ஏனென்றால், சமூக இடைவெளி கட்டாயப்படுத்தியதன் காரணமாக ஒருவருக்கொருவர் இடையே இடவெளி விடப்பட உள்ளது. இதனால், சில இருக்கைகள் வெற்றாக காணப்படலாம். பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இதனைக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

இதுதவிர, முன்பிருந்ததைக் காட்டிலும் விமான நிறுவனங்கள் சார்பிலும் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இதுவரை நாம் கண்டிராத உச்சபட்சளவில் அதிக கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளுடன் உள்ளூர் விமான போக்குவரத்து எதிர்பார்க்கப்படுகின்றது. இது முந்தைய விமான பயணங்களைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமான அனுபவத்தை பயணிகளுக்கு வழங்க இருக்கின்றது.

விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

தற்போது அமலில் இருக்கும் தேசியளவிலான ஊரடங்கு உத்தரவில், லேசான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, சிறு மற்றும் பெரு நிறுவனங்கள் இயங்கும் வகையில் அந்த தளர்வு காணப்படுகின்றது. இருப்பினும், மக்களின் வழக்கமான நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

ஆனால், பல புலம்பெயர்ந்த பணியாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் அயல் மாநிலங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்கள், அவரவர் மாநிலங்களுக்கு திரும்பும் வகையிலேயே இந்த விமானப் போக்குவரத்து கடுமையான விதிகளுடன் மீண்டும் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றது.

விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

ஏற்கனவே, வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை 'வந்தே பாரத் மிஷன்' திட்டத்தின்கீழ் மத்திய அரசு நாட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், புலம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள் பலர் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் கொடி நடையாக நடந்த பிறந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்பது வேதனையளிக்கும் தகவலாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Do's & Don't Do's For Future Flying. Read In Tamil.
Story first published: Saturday, May 16, 2020, 15:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X