வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..? யாருமே எதிர்பார்க்கல!

டாடா நிறுவனம் அதன் நெக்ஸான் கார்களுக்கு கூடுதல் வாரண்டி காலத்தை இலவசமாக வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் மற்றும் இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..? இத யாருமே எதிர்பார்க்கல!

பல மாதங்களைக் கடந்து தற்போதும் உலக நாடுகளை தனது கோர பிடியால் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது இந்த கொரோனா வைரஸ். இதன் பரவலால் அனைத்து துறையுமே மிகக் கடுமையாக பாதிப்படைந்திருக்கின்றன. குறிப்பாக, வாகனத்துறை சந்தித்த மற்றும் சந்தித்து வரும் பாதிப்புகள் சற்று கூடுதல் என்றே கூறலாம். கொரோனா வைரஸ் பாதிப்பால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில தற்போதும் விற்பனையில் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன.

வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..? இத யாருமே எதிர்பார்க்கல!

தொடர்ந்து, ஒரு சில நிறுவனங்கள் வாகன உற்பத்தியை முன்பைப் போல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றன. அந்தவகையில், கடந்த காலங்களில் வாகன உற்பத்தியை முழுமையாக செய்ய முடியாமல் தவித்த நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸும் ஒன்று. எனவே, நெக்ஸான் காரை புக் செய்தவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி கொடுக்க முடியாமல் டாடா தவிக்க ஆரம்பித்துள்ளது.

வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..? இத யாருமே எதிர்பார்க்கல!

இதனால், வாடிக்கையாளர்கள் சிலர் (நெக்ஸான் காரை புக் செய்தவர்கள்) தங்களின் புக்கிங்கை கேன்சல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையை நாட்டின் பிற வாகன உற்பத்தி நிறுவனங்களும் சந்தித்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த சூழ்நிலையில், டாடா மோட்டார்ஸ் அதன் வாடிக்கையாளர்களை சமாதானம் செய்யும் வகையிலும், புக்கிங்கை தக்கவைத்துக்கொள்ளும் விதமாகவும் ஓர் தரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..? இத யாருமே எதிர்பார்க்கல!

அதாவது, அதிக நாட்கள் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வாரண்டி மற்றும் இலவச ரோட் சைட் அசிஸ்டண்டை குறிப்பிட்ட காலங்களுக்கு வழங்க இருப்பதாக அது தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவல் மற்றும் புகைப்படத்தை டாடா நெக்ஸான் காரை புக் செய்த வாடிக்கையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..? இத யாருமே எதிர்பார்க்கல!

ஒரு மாதத்திற்கும் மேல் காத்திருக்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகைப் பொருந்தும் என டாடா அறிவித்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் விளம்பரம் எதையும் டாடா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், வாடிக்கையாளர்கள் ஒருவருக்கு கிடைத்த குறுஞ்செய்தியின் அடிப்படையில் இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..? இத யாருமே எதிர்பார்க்கல!

டாடா நிறுவனத்தின் அதிக பாதுகாப்பு வசதிக் கொண்ட கார்களில் நெக்ஸான் மாடலும் ஒன்று. இந்த கார் பாதுகாப்பு ரேட்டிங்கில் ஐந்து நட்சத்திரங்களைப் பெற்ற மாடல் ஆகும். ஆகையால், இக்காருக்கு இந்தியாவில் தனித்துவமான டிமாண்ட் நிலவி வருகின்றது. இக்காரைப் புக் செய்துவிட்டு ஒரு மாதங்களுக்கும் அதிகமாக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கே இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை டாடா வெளியிட்டு வருகின்றது.

வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..? இத யாருமே எதிர்பார்க்கல!

அதேசமயம், ஒரு சில வாடிக்கையாளர்கள் 70 நாட்களுக்கும் அதிகமாக தாங்கள் காத்திருப்பதாகவும், தங்களுக்கு டீலர்களிடம் இருந்து இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் புகார்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இதுபோன்று புகார்களின் அடிப்படையிலேயே இந்த கூடுதல் வாரண்டி காலம் மற்றும் சிறப்பு ரோட்சைட் அசிஸ்டண்ட் சேவை உள்ளிட்டவற்றை டாடா வழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
Due To Over Delay Tata Offers Extended Warranty For Nexon Customers. Read In Tamil.
Story first published: Monday, November 23, 2020, 20:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X