நல்ல காலம் பொறந்தாச்சு... டாப் கியரில் கார், பைக் சேல்ஸ்... உற்சாக கொண்டாட்டத்தில் வாகன நிறுவனங்கள்

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பிற்கு பின், வாகனங்களின் விற்பனை உயர தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நல்ல காலம் பொறந்தாச்சு... டாப் கியரில் கார், பைக் சேல்ஸ்... உற்சாக கொண்டாட்டத்தில் வாகன நிறுவனங்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்று. ஊரடங்கு, வேலையிழப்பு, சம்பளம் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால், புதிய வாகனங்களை வாங்குவதை தவிர்க்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். எனவே முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

நல்ல காலம் பொறந்தாச்சு... டாப் கியரில் கார், பைக் சேல்ஸ்... உற்சாக கொண்டாட்டத்தில் வாகன நிறுவனங்கள்

ஆனால் கடந்த ஒரு சில மாதங்களாக வாகன விற்பனை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் பொது போக்குவரத்தை தவிர்ப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ஆட்டோ, டாக்ஸி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் சென்றால், கொரோனா தொற்று ஏற்படலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

நல்ல காலம் பொறந்தாச்சு... டாப் கியரில் கார், பைக் சேல்ஸ்... உற்சாக கொண்டாட்டத்தில் வாகன நிறுவனங்கள்

அதற்கு பதிலாக சொந்த கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வதையே பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் காரணமாக சமீப காலமாக வாகனங்களின் விற்பனை உயர்ந்து வருகிறது. இதுதவிர பொது போக்குவரத்து வாகனங்களுக்கு நிலவும் தட்டுப்பாடும் கூட ஒரு சிலர் புதிய வாகனங்களை வாங்குவதற்கு காரணமாக உள்ளது.

நல்ல காலம் பொறந்தாச்சு... டாப் கியரில் கார், பைக் சேல்ஸ்... உற்சாக கொண்டாட்டத்தில் வாகன நிறுவனங்கள்

அதாவது இந்தியாவில் இன்னும் பொது போக்குவரத்து முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பேருந்துகளை பொறுத்தவரை குறைவான எண்ணிக்கையில்தான் இயங்குகின்றன. எனவே அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டியவர்கள், சொந்தமாக ஒரு வாகனம் வைத்திருப்பதை சௌகரியமாக கருதுகின்றனர்.

நல்ல காலம் பொறந்தாச்சு... டாப் கியரில் கார், பைக் சேல்ஸ்... உற்சாக கொண்டாட்டத்தில் வாகன நிறுவனங்கள்

இவற்றுடன் தற்போது பண்டிகை காலமும் வந்து விட்டதால், வாகன விற்பனை உயர தொடங்கியுள்ளது. பொதுவாக அட்சய திருதியை, தீபாவளி மற்றும் தசரா ஆகிய நாட்களை சுப தினங்களாக கருதுவதால், அன்றைய தினத்தில் புதிய வாகனங்களை வாங்குவதை மக்கள் மங்களகரமான நிகழ்வாக கருதுகின்றனர். இதன்படி நடப்பாண்டு தசரா பண்டிகை தினத்தில் பலர் புதிய வாகனங்களை வாங்கினர்.

நல்ல காலம் பொறந்தாச்சு... டாப் கியரில் கார், பைக் சேல்ஸ்... உற்சாக கொண்டாட்டத்தில் வாகன நிறுவனங்கள்

இதன் காரணமாக மும்பையில் புதிய வாகனங்களின் பதிவு அதிகரித்துள்ளது. டார்டோ, வடாலா, அந்தேரி மற்றும் போரிவ்லி என மும்பையில் உள்ள 4 ஆர்டிஓ அலுவலகங்களில் நடப்பாண்டு தசராவை முன்னிட்டு 609 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு தசராவையொட்டி பதிவு செய்யப்பட்ட புதிய வாகனங்களின் எண்ணிக்கை 469 மட்டுமே.

நல்ல காலம் பொறந்தாச்சு... டாப் கியரில் கார், பைக் சேல்ஸ்... உற்சாக கொண்டாட்டத்தில் வாகன நிறுவனங்கள்

நடப்பாண்டு தசராவை முன்னிட்டு மும்பையில் பதிவு செய்யப்பட்ட புதிய இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 404 ஆகும். ஆனால் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை வெறும் 308 ஆக மட்டுமே இருந்தது. இது 31 சதவீதம் அதிகம் ஆகும். அதேபோல் பதிவு செய்யப்பட்ட புதிய கார்களின் எண்ணிக்கையும் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

நல்ல காலம் பொறந்தாச்சு... டாப் கியரில் கார், பைக் சேல்ஸ்... உற்சாக கொண்டாட்டத்தில் வாகன நிறுவனங்கள்

கடந்த ஆண்டு தசராவை முன்னிட்டு 161 கார்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டு 205 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மும்பையில் தினமும் சராசரியாக 400 இரு சக்கர வாகனங்கள், 125 கார்கள் என 525 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், வரும் நாட்களில் வாகனங்களின் விற்பனை நன்றாக உயரலாம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
Dussehra: Vehicle Registrations Rise In Mumbai. Read in Tamil
Story first published: Monday, October 26, 2020, 23:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X