இந்தியாவின் மலிவான ஹை-வோல்ட்டேஜ் எலக்ட்ரிக் கார்... மாருதி வேகன்ஆர் இவி மீண்டும் சோதனை ஓட்டம்...

இரு பெட்ரோல் என்ஜின் தேர்வுகளில் விற்பனையாகி வரும் மாருதியின் வேகன்ஆர் இவி மாடல் விரைவில் எலக்ட்ரிக் மோட்டார் உடன் அறிமுகமாகவுள்ளது. இதனால் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் இந்த இவி கார் தற்போது மீண்டும் குர்கான் பகுதியில் பொது சாலையில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவின் மலிவான ஹை-வோல்ட்டேஜ் எலக்ட்ரிக் கார்... மாருதி வேகன்ஆர் இவி மீண்டும் சோதனை ஓட்டம்...

மாருதி சுசுகி நிறுவனம் வேகன்ஆர் மாடலில் எலக்ட்ரிக் வெர்சனை கொண்டுவருவது குறித்து எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இதனால் ஆரம்பத்தில் இந்த இவி கார், கேப் பயன்பாட்டிற்கே வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவின் மலிவான ஹை-வோல்ட்டேஜ் எலக்ட்ரிக் கார்... மாருதி வேகன்ஆர் இவி மீண்டும் சோதனை ஓட்டம்...

தற்போது இந்தியன் ஆட்டோ செய்தி தளம் வெளியிட்டுள்ள இதன் ஸ்பை படங்களின் படி பார்க்கும்போது வழக்கமான பெட்ரோல் வெர்சனை காட்டிலும் வேகன்ஆர் இவி காரானது வெளிப்புறத்தில் சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை பெற்றிருக்கும்.

இந்தியாவின் மலிவான ஹை-வோல்ட்டேஜ் எலக்ட்ரிக் கார்... மாருதி வேகன்ஆர் இவி மீண்டும் சோதனை ஓட்டம்...

இதன்படி செங்குத்தான பிளவுப்பட்ட ஹெட்லேம்ப்கள் உடன் திருத்தியமைக்கப்பட்ட முன்பக்கம், பெரிய மற்றும் அகலமான க்ரில் மற்றும் வழக்கமான பம்பர் உள்ளிட்டவற்றை வேகன்ஆர் இவி கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மலிவான ஹை-வோல்ட்டேஜ் எலக்ட்ரிக் கார்... மாருதி வேகன்ஆர் இவி மீண்டும் சோதனை ஓட்டம்...

இவற்றுடன் இக்னிஸ் மாடலில் உள்ள 15-இன்ச் அலாய் சக்கரங்களையும் இந்த சோதனை காரில் பார்க்க முடிகிறது. உட்புறத்தில் இந்த இவி கார் தற்சமயம் விற்பனையில் வேகன்ஆர் மாடலை தான் பெரும்பான்மையாக ஒத்திருக்கும் என்பது உறுதி.

இந்தியாவின் மலிவான ஹை-வோல்ட்டேஜ் எலக்ட்ரிக் கார்... மாருதி வேகன்ஆர் இவி மீண்டும் சோதனை ஓட்டம்...

இருப்பினும் கியர் லிவர் மேனுவல் கைனெடிக் எனர்ஜி ரீஜெனரேஷன் சிஸ்டத்துடன் (கெர்ஸ்) மாற்றப்பட்டிருக்கலாம். பொதுவாக இவி கார்களில் ஆட்டோமேட்டிக் ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் சிஸ்டம் இருக்கும். ஆனால் அது வேகன்ஆர் இவி மாடலில் இல்லை.

இந்தியாவின் மலிவான ஹை-வோல்ட்டேஜ் எலக்ட்ரிக் கார்... மாருதி வேகன்ஆர் இவி மீண்டும் சோதனை ஓட்டம்...

இதனால் ஓட்டுனர் இந்த இவி காரில் கெர்ஸ் லிவரை பயன்படுத்துவதற்கு லிவரை மேனுவலாக நகர்த்த வேண்டியிருக்கும். ஆற்றலை சேமிக்க வேகன்ஆர் இவி மாடலில் எல்இடி லைட்டிங் பாகங்கள் சுற்றிலும் கொடுக்கப்படவுள்ளன.

இந்தியாவின் மலிவான ஹை-வோல்ட்டேஜ் எலக்ட்ரிக் கார்... மாருதி வேகன்ஆர் இவி மீண்டும் சோதனை ஓட்டம்...

சிறிய அளவிலான பேட்டரி தொகுப்பு உடன் வரும் இந்த எலக்ட்ரிக் காரின் ட்ரைவிங் ரேஞ்ச் 200கிமீ என்ற அளவில் இருக்கும். இதனால் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ள மலிவான ஹை-வோல்டேஜ் இவி மாடலாக மாருதி வேகன்ஆர் இவி கார் விளங்கவுள்ளது.

Most Read Articles

English summary
Maruti WagonR EV Spotted On Test Again
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X