கூகுள்ளயே இல்லையாம்..! வாயில் மட்டுமில்லைங்க தலைகீழாக நின்றாலும் அர்த்தம் புரியாது...
வாயில் மட்டுமில்லைங்க கூகுளில் தேடினாலும் அர்த்தம் தெரியாத வகையிலான பெயரை பிரபல நிறுவனத்தின் சிஇஓ அவரது குழந்தைக்கு வைத்துள்ளார். அந்த பெயருக்கு அவர்களே அர்தத்தையும் கூறியிருக்கின்றனர். வாருங்கள் இதுகுறித்த தகவலை காணலாம்.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களில் டெஸ்லா-வும் ஒன்று. இந்நிறுவனம், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில் உலக புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கி வருகின்றது. இதை மட்டுமே அந்நிறுவனம் முக்கிய உற்பத்தி செய்து வருகின்றது. எனவே, எரிபொருள் வாகன உற்பத்தி மீது டெஸ்லாவிற்கு துளியளவும் ஈடுபாடு இல்லாத நிலையே இருக்கின்றது.

இந்நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருப்பவர் எலன் மஸ்க். டெஸ்லா மட்டுமின்றி ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாகும் இருந்து வரும் எலன்ஸ் மஸ்க், உலக கோடீசுவரர்களில் ஒருவராக இருக்கின்றார். இவர், அண்மையில் பிரபல கனடா பாடகியான கிரைம்ஸ் (Grimes) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த 5ம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு அவர்கள் மிகவும் வித்தியாசமான பெயரை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியது. அதாவது, அக்குழந்தைக்கு X Æ A-12 பெயர் வைக்க திட்டமிட்டிருப்பதாக எலன் மஸ்க் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். எலன் மஸ்க் சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டிவாக காணப்படும் ஓர் நபர். அந்தவகையில், பல்வேறு விமர்சனங்களையும், சர்ச்சையான கருத்துகளையும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கு அவ்வப்போது நெட்டிசன்களிடத்தில் வாங்கியும் கட்டிக் கொள்வார். இதனடிப்படையில், அவரது முதல் ஆண் குழந்தையின் பெயர் பற்றிய தகவலையும் அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். பொதுவாக எலன் மஸ்க் சற்று நக்கல், நையாண்டி கலந்த டுவிட்களையே அதிகம் பதிவிடுவார். இதற்கு, எலன் மஸ்க்கின் முந்தைய டுவீட்களே சான்று.

அந்தவகையிலேயே அவருடைய குழந்தையின் பெயரையும் நகைச்சுவைக்காக பதிவிட்டிருப்பாத பலர் எண்ணினார். ஆனால், இது விளையாட்டு அல்ல உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், எலன் மஸ்க்கின் மனைவி கிரைம்ஸும், அவரது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை செய்திருந்தார்.

அதில், குழந்தையின் பெயருக்கு விளக்கும் அளிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். இருப்பினும், பலர் குழந்தையின் பெயரை எப்படி உச்சரிப்பது என்று திகைத்து போயுள்ளனர். மேலும், எலன் மஸ்க்-கின் வழக்கமான ட்வீட்டுகளுக்கு அவரது ஃபாலோவர்கள் போர்க் கொடியை தூக்குவதுபோன்றே, குழந்தையின் பெயர் டுவீட்டிற்கும் மீம்ஸ் மழையைப் பொழிந்து வருகின்றனர்.

X - அறியப்படாத ஓர் நபரை குறிப்பதாகும்.
Æ - ஏ மற்றும் இ-யின் கலவையே Æ. இதனை லத்தீன் மொழியில் ஆஷ் 'ash' என்றும் கூறுவர். ஆனால், இது டென்மார்க், நார்வே மற்றும் ஐஸ்லாந்தில் தமிழில் இருக்கும் அ,ஆ,இ,ஈ போன்ற ஓர் எழுத்தாகும்.
A-12 - என்பது போர் விமானத்தின் பெயர் ஆகும்.

இவற்றைக் கொண்டே டெஸ்லா சிஇஓ அவரின் குழந்தைக்கு பெயரை வைத்திருக்கின்றார். இந்த விளக்கத்திற்கு நெட்டிசன்கள் குழந்தையின் பெயரை எப்படி உச்சரிப்பது என தெரியாமல் திணறி வருகின்றனர்.
அதேசமயம், இந்த விநோதமானந பெயரை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய முடியுமா., என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழும்பியுள்ளது.

தற்போது, எலன்மஸ்க் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசித்து வருகின்றார். இங்கு வழக்கமான எழுத்துக்களைக் கொண்டு வைக்கப்படும் பெயர்களை மட்டுமே பதிந்த முடியும். எனவே, எலன் மஸ்க்கின் குழந்தை பெயரை பதிவு செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தற்போது உலகம் முழுவதிலும் அமோகமான வரவேற்பு நிலவி வருகின்றது. அதிலும், அமெரிக்காவில் சற்று கூடுதலாகவே இருக்கின்றது. குறிப்பாக, அந்நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தயாரிப்புகளையே டெஸ்லா மின்சார கார் பீட் செய்துள்ளது. இதுமட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் அதிக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக டெஸ்லா வாகனங்கள் மாறிவருவது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








