உல்லாச கப்பலுக்கு இணையான சொகுசு காரை வாங்கிய முன்னாள் கிரிக்கட் வீரர்! மோடிஜி சொன்னது கேக்கலையா சார்

உல்லாச கப்பல் என்று போற்றப்படும் கியா நிறுவனத்தின் கார்னிவல் எம்பிவி லக்சூரி காரை பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் புதிதாக வாங்கியுள்ளார். அவர் யார், அதன் விலை எவ்வளவு என்பது பற்றிய தகவலை தொடர்ச்சியாக காணலாம். 

உல்லாச கப்பலுக்கு இணையான ஆடம்பர காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நம்ம பிரதமர் சொன்னது கேக்கலையா சார்!

கொரோனா வைரஸ் பிரச்னையால் இந்தியா பொருளாதாரம் அதளபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது. எனவே, அதனை தூக்கி நிறுத்தும் விதமாக 'வோகல் ஃபார் லோகல்' (vocal for local) என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இறக்குமதி பொருட்கள் அல்லாத உள்நாட்டு தயாரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதற்கான திட்டம்தான் அது.

இதன்மூலம், தத்தளித்து வரும் இந்திய பொருளாதாரத்தை கரை சேர்க்க முடியும் என மத்திய அரசு நம்புகின்றது.

உல்லாச கப்பலுக்கு இணையான ஆடம்பர காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நம்ம பிரதமர் சொன்னது கேக்கலையா சார்!

இந்த நிலையில், பிரதமர் முதல் அரசியல் முக்கிய பிரமுகர்கள் யாரெல்லாம் உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது. அதில், பெரும்பாலானோர் வெளிநாட்டு தயாரிப்புகளையே அதிகம் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அதேசமயம், உள்நாட்டு தயாரிப்புகள் சிலவற்றையும் அவர்கள் இரண்டாம் நிலை பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்துவதும் தெரியவந்தது.

உல்லாச கப்பலுக்கு இணையான ஆடம்பர காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நம்ம பிரதமர் சொன்னது கேக்கலையா சார்!

அதிக பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் காரணமாக அவர்கள் வெளிநாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதேநிலையைதான், பொதுமக்களில் சிலரும் கடைபிடித்து வருகின்றனர். வெளிநாட்டு தயாரிப்புகளில் அதிக சொகுசு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற்றிருப்பதால் மக்கள் ஈசல் போல் அவற்றின்மீது அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவிலும் அவற்றிற்கு இணையான வாகனங்கள் இருந்தாலும் அதன்மீதான மோகம் குறைவதில்லை.

உல்லாச கப்பலுக்கு இணையான ஆடம்பர காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நம்ம பிரதமர் சொன்னது கேக்கலையா சார்!

இந்தநிலையில்தான் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான அஜய் ஜடேஜா தென் கொரிய நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கியா நிறுவனத்தின் லக்சூரி காரான கார்னிவல் எம்பிவி மாடலை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காரை அவர் தேர்வு செய்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முக்கியமானது, இந்தியாவில் விற்பனையாகும் அதிக விலைக் கொண்ட கார்களின் சொகுசுக்கே இது டஃப் கொடுக்கின்ற வகையில் இருப்பது.

உல்லாச கப்பலுக்கு இணையான ஆடம்பர காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நம்ம பிரதமர் சொன்னது கேக்கலையா சார்!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால், கியா கார்னிவல் எம்பிவி காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் "இது கார்தானா அல்லது உல்லாச கப்பலா" என்று கேள்வியெழுப்பும் அளவிற்கு இருக்கின்றது. இதுபோன்ற பல்வேறு காரணங்களினாலேயே இந்த கார் சற்று விலையுயர்ந்ததாக இருந்தாலும் மக்கள் அதிக வரவேற்பை வழங்கி வருகின்றனர். அந்தவகையில்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, இக்காரை புதிதாக வாங்கியிருக்கின்றார்.

உல்லாச கப்பலுக்கு இணையான ஆடம்பர காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நம்ம பிரதமர் சொன்னது கேக்கலையா சார்!

அஜய் ஜடேஜா, புதிய காரை வாங்கியதை உறுதி செய்யும் விதமாக புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அதனை அனுராக் ஷர்மா (Anurag Sharma) என்பவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம், அஜய் ஜடேஜா கார்னிவல் மாடலின் உயர்நிலை வேரியண்டான லிமோசைனை வாங்கியிருப்பது உறுதியாகியுள்ளது. இது இந்தியாவில் ரூ. 34 லட்சம் விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது, எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

உல்லாச கப்பலுக்கு இணையான ஆடம்பர காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நம்ம பிரதமர் சொன்னது கேக்கலையா சார்!

ஆனால், ஆன்-ரோடுக்கு வரும்போது அதன் விலை ரூ. 36 லட்சமாக உயருகின்றது. இது பட்ஜெட் வாகன விரும்பிகளால் எட்ட முடியாத விலையாகும். இருப்பினும், இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெறும் எம்பிவி கார்களில் ஒன்றாக இது மாறியிருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், கியா நிறுவனம் இந்த காரை அறிமுகம் செய்வதற்கு முன்னரே 3,500-க்கும் அதிகமான புக்கிங்குகளைப் பெற்றது.

உல்லாச கப்பலுக்கு இணையான ஆடம்பர காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நம்ம பிரதமர் சொன்னது கேக்கலையா சார்!

அந்த நேரத்தில் கியா நிறுவனம் அக்காரின் விலையைக் கூட அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், அதிக லக்சூரி வசதி, பிரம்மிக்க வைக்கும் தொழில்நுட்பம் என அனைத்தும் இந்திய சொகுசு வாகன விரும்பிகளை கவரும் அமைந்திருந்தன. இதன் விளைவாக இந்தியாவின் முக்கிய பிரபலங்களில் ஒருவராக இருக்கும் அஜய் ஜடேஜாவையும் அக்கார் கவர்ந்து இழுத்துள்ளது.

உல்லாச கப்பலுக்கு இணையான ஆடம்பர காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நம்ம பிரதமர் சொன்னது கேக்கலையா சார்!

இதனால், இந்தியாவில் இக்காரை வாங்கிய முதல் செலிபிரிட்டியாக அஜய் ஜடேஜா மாறியிருக்கின்றார். தற்போது, ஜடேஜா அனைத்து பணிகளில் இருந்து ஓய்வு பெற்றிருப்பதால், அவரது சொந்த ஊரான ராஜஸ்தான், உதய்பூரில் வசித்து வருகின்றார். இவர், வெகு நீண்ட காலமாக இந்திய அணிக்காக விளையாடியவர் ஆவார்.

உல்லாச கப்பலுக்கு இணையான ஆடம்பர காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நம்ம பிரதமர் சொன்னது கேக்கலையா சார்!

கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் கால் தடம் சில மாதங்களே ஆகின்றன. இது, முதல் மாடலாக எஸ்யூவி ரக செல்டோஸ் காரையை களமிறக்கியது. இதைத்தொடர்ந்தே, முற்றிலும் மாறுபட்ட விலை மற்றும் அம்சங்களைக் கொண்ட கார்னிவல் எம்பிவி லக்சூரி களமிறக்கியது. இந்த கார் மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

உல்லாச கப்பலுக்கு இணையான ஆடம்பர காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நம்ம பிரதமர் சொன்னது கேக்கலையா சார்!

அவை, பிரிமியம், பிரெஸ்டீஜ் மற்றும் லிமோசைன் ஆகும். ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்கள் மற்றும் இருக்கை எண்ணிக்கைகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும். அதாவது, ஏழு, எட்டு மற்றும் ஒன்பது ஆகிய இருக்கை எண்ணிக்கைகளின் அடிப்படையில் அது கிடைக்கிறது. இதில், அஜய் ஜடேஜா வாங்கியிருக்கும் உயர்நிலை வேரியண்டான லிமோசைன் 7 இருக்கைகள் கொண்டதாக உள்ளது.

உல்லாச கப்பலுக்கு இணையான ஆடம்பர காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நம்ம பிரதமர் சொன்னது கேக்கலையா சார்!

இது உயர்நிலை தயாரிப்பு என்பதால் பிரிமியம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் ஏராளமாக காட்சியளிக்கின்றன. அந்தவகையில், ஐஸ் கியூப் வடவிலான எல்இடி மூடுபனி விளக்குகள், எல்இடி டெயில் விளக்குகள், எலக்ட்ரானிக் டெயில்கேட், டூயல் பேனல் பனோரமிக் சன்ரூஃப், எலக்ட்ரானிக் கன்ட்ரோல் மூலம் மடிக்கக்கூடிய விங் கண்ணாடிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கின்றது.

உல்லாச கப்பலுக்கு இணையான ஆடம்பர காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நம்ம பிரதமர் சொன்னது கேக்கலையா சார்!

இதேபோன்று, பாதுகாப்பு அம்சங்களாக முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் ஏர்பேக்குகள், பார்க்கிங் சென்சார், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ரோல் ஓவர் மிடிகேஷன் மற்றும் கார்னரிங் பிரேக் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு உயர்நிலை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, ஒரே பட்டனில் காரின் கதவுகளை திறத்தல், மூடுதல் போன்ற செயலையும் செய்ய முடியும்.

உல்லாச கப்பலுக்கு இணையான ஆடம்பர காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நம்ம பிரதமர் சொன்னது கேக்கலையா சார்!

இதுபோன்று பல்வேறு அம்சங்கள் கார்னிவலின் புகழைப் பாடுகின்ற வகையில் பல வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அனைத்து வேரியண்டுகளிலும் 2.2 லிட்டர் பிஎஸ்-6 தரம் கொண்ட டீசல் எஞ்ஜினே காணப்படுகின்றது. இது அதிகபட்சமாக 200 பிஎச்பி மற்றும் 440 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இது, 8 ஸ்பீடு ஸ்போர்ட்ஸ்மேட்டிக் டிரான்ஸ்மிஷனில் இயங்குகின்றது.

உல்லாச கப்பலுக்கு இணையான ஆடம்பர காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நம்ம பிரதமர் சொன்னது கேக்கலையா சார்!

இத்தகைய சிறப்பு வாய்ந்த காரைதான் அஜய் ஜடேஜா தற்போது தனக்குரியதாக்கி உள்ளார். இதுதவிரே வேறு என்ன கார்களை எல்லாம் அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பதுகுறித்த தகவல் தெரியவில்லை. அதேசமயம், அவரது கராஜில் இணைந்திருக்கும் புத்தம் புதிய காராக கியா கார்னிவல் இருக்கும் என்பதை நாங்கள் உறுதியுடன் தெரிவிக்கின்றோம்.

உல்லாச கப்பலுக்கு இணையான ஆடம்பர காரை வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நம்ம பிரதமர் சொன்னது கேக்கலையா சார்!

இந்த காரில் சொகுசு வாகன விரும்பிகளை குஷிப்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகள் களமிறக்கப்பட்டுள்ளன.

இந்த மாடலுக்கு இந்தியாவில் நேரடி போட்டியாளன் இல்லையென்றாலும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸ் கார்கள் மறைமுக போட்டியை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், கார்னிவல் காருக்கான புகழ் சந்தையில் நாளுக்கு அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ex Indian Cricket Player Ajay Jadeja Buys Kia Carnival. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X