கைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா அரிய வகை ஆம்புலன்ஸ்..! அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்..!

மெர்சிடிஸ்-டாடா இணைந்து தயாரித்த அரிய வகை ஆம்புலன்சிற்கு புத்துயிர் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

கைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா தயாரித்த அரிய வகை ஆம்புலன்ஸ்! அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்...

இந்தியாவில் பல ஆயிரக் கணக்கான வாகன மாடிஃபிகேஷன் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், இதுவரை இந்திய சாலைக் கண்டிராத வகையிலான ஓர் மாடிஃபிகேஷன் சம்பவம் தற்போது அரங்கேறி கொண்டிருக்கின்றது.

கைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா தயாரித்த அரிய வகை ஆம்புலன்ஸ்! அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்...

அதாவது, இதுவரை எந்தவொரு நபரும் செய்திராத வகையில், பழைய கால ஆம்புலன்ஸ் ஒன்றை மாடிஃபிகேஷன் மூலம் புத்துயிர் வழங்கும் முயற்சியை கேரளத்து சேட்டன்மார்கள் சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.

கைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா தயாரித்த அரிய வகை ஆம்புலன்ஸ்! அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்...

இதுகுறித்த புகைப்படம்தான் தற்போது வாகன துறையின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. அந்த ஆம்புலன்ஸ் ஓர் 1988ம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ124 மாடலாகும்.

இது ஓர் அரிய வகை ஆம்புலன்ஸ் ஆகும். குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், அப்போதைய விவிஐபி-க்களின் பயன்பாட்டிற்காக பிரத்யேக அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட ஆம்புலன்ஸ்தான் இது.

கைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா தயாரித்த அரிய வகை ஆம்புலன்ஸ்! அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்...

உயிர் காக்கும் உண்ணதமான அம்சங்களில் ஆம்புலன்சும் ஒன்றாகும். விபத்தில் சிக்கி நலமுடன் வாழும் பலர் இதனை தெய்வமாகவே பார்த்து வருகின்றனர்.

இக்கட்டான நிலையில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு உரிய மருத்துவ முதலுதவியை வழங்கவும், தக்க நேரத்தில் மருத்துவமனை கொண்டு சேர்க்கவும் இந்த வாகனங்கள் உதவி வருகின்றன.

கைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா தயாரித்த அரிய வகை ஆம்புலன்ஸ்! அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்...

எனவேதான் ஆம்புலன்ஸ்களை அக்காலத்து விவிஐபி-க்களின் கான்வாயிலும் அப்போதைய அரசுகள் பயன்படுத்தி வந்தன. அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காகவும், அவர்களது அவசர உதவிக்காகவும் பயன்படும் வகையில் இயங்கி வந்த ஆம்புலன்ஸ்தான் மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ124.

கைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா தயாரித்த அரிய வகை ஆம்புலன்ஸ்! அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்...

இதற்கு புத்துயிர் வழங்கும் முயற்சியில்தான் கேரளத்து சேட்டன்மார்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெகு நீண்ட காலமாக சாலையோரத்தில் இந்த ஆம்புலன்ஸ் கைவிடப்பட்டிருந்ததைக் கண்ட பின்னரே இந்த முயற்சியில் அவர்கள் களமிறங்கியிருக்கின்றனர்.

கைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா தயாரித்த அரிய வகை ஆம்புலன்ஸ்! அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்...

எனவே, கூடிய விரைவில் இந்த ஆம்புலன்ஸ் புத்தம் புது தோற்றம் மற்றும் அம்சங்களுடன் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அது எப்போது வரும் என்ற தகவலை கஸ்டமைஸ் செய்து வரும் குழு தெரிவிக்கவில்லை. அதேசமயம், நீண்ட நாள் கைவிடப்பட்டிருந்தததால் அந்த ஆம்புலன்ஸ் கிட்டத்தட்ட முழுமையாக சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

கைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா தயாரித்த அரிய வகை ஆம்புலன்ஸ்! அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்...

ஆகையால், சற்று கூடுல் நாட்கள் எடுத்துக் கொள்ளப்படலாம் என யூகிக்கப்படுகின்றது. இந்த ஆம்புலன்ஸ் இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமாக ராஷ்டிராபதிக்கு சொந்தமாக இருந்திருக்கின்றது. குறிப்பாக, 1990-களில் குடியரசு தலைவரின் கான்வாயில் மருத்துவ வாகனமாக பயன்பட்டு வந்தது. குறிப்பாக, முன்னால் குடியரசு தலைவர் பிவி நரசிம்ம ராவ் அவர்களின் கான்வாயில் இந்த ஆம்புலன்ஸ் பல முறை இடம்பெற்றிருக்கின்றது.

கைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா தயாரித்த அரிய வகை ஆம்புலன்ஸ்! அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்...

இந்த ஆம்புலன்ஸை மெர்சிடிஸ் நிறுவனம் முதல் முறையாக 1985ம் ஆண்டே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதுதான் அந்த நிறுவனம் கடைசியாக தயாரித்த ஆம்புலன்ஸ் ரக வாகனம் ஆகும். இதனை மெர்சிடிஸ் மட்டுமின்றி டாடா ஜேவி நிறுவனமும் இணைந்து தயாரித்தது குறிப்பிடத்தகுந்தது. எனவே, நாடு முழுவதும் இந்த மருத்துவ வாகனத்திற்கு நல்ல டிமாண்ட் நிலவியது.

கைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா தயாரித்த அரிய வகை ஆம்புலன்ஸ்! அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்...

இந்த சிறப்புமிக்க வாகனத்தைதான் சேட்டன்மார்கள் புதுப்பித்து வருகின்றனர். இது எப்படி கேரளாவிற்கு வந்தது என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால், புகைப்படம் மற்றும் புத்துயிர் வழங்குவது பற்றிய தகவல் மட்டுமே தற்போது வெளியாகவில்லை. இதன் புகைப்படங்கள் சிலவற்றை டீம் - பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Ex-Presidential Mercedes Ambulance Being Restored. Read in Tamil.
Story first published: Wednesday, July 1, 2020, 20:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X