பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

எஃப்-35 என்னும் போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் ஹெல்மெட் புல்லட் ப்ரூஃப் மற்றும் பனி அடர்வதைத் தாங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதனாலயே இதன் மதிப்பு சூப்பர் விலையுயர்ந்த கார்களைக் காட்டிலும் அதிகமானதாக காட்சியளிக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக பார்க்கலாம்.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

இருசக்கர வகான ஓட்டிகளின் உயிரை காப்பதில் தலைக்கவசங்களின் பங்கு அளப்பறியாதது. இதன்காரணமாகவே, உலக நாடுகள் பல இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக் கவசங்களை அணிய வேண்டும் என வலியுறுத்துகின்றன. இந்திய மோட்டார் வாகன சட்டமும் இதே மாதிரியான அணுகலைதான் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் முன் வைக்கின்றது.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

இந்த தலைக் கவசங்கள், இரு சக்கர வாகனங்களை இயக்கும்போது மட்டுமல்லாமல் கட்டுமானம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட வேலைகளின்போதும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேபோன்று, ஜெட் ஃபைட்டர் போன்ற போர் விமானங்களை இயக்கும் விமானிகளின் பாதுகாப்பிற்காகவும் ஹெல்மட்டுகள் பயன்படுகின்றன.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

ஆனால், இந்த ஹெல்மெட்டுகள் வழக்கமான ஹெல்மெட்டுகளைப் போன்று அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட திறனைக் கொண்டவையாக இருக்கின்றன. அதாவது, எந்த மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும் விமானியின் உயிருக்கு பாதுகாப்பை வழங்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, போர் காலங்களில் அதிக பலனை அளிக்கும் வகையில் அவை இருக்கின்றன.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

Image Courtesy: F-35 Lightning II Joint Program Office And Lockheed Martin

அதிலும், லாக் ஹீட் மார்ட்டின் எஃப்35 போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் ஹெல்மெட்டுகள் நம்மை ஆச்சரியத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்லும் வகையிலான தொழில்நுட்பங்களைப் பெற்றிருக்கின்றது.

அதாவது, இந்த ஹெல்மெட் புல்லட் ப்ரூஃப், விஷுவல், நைட் விஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

இதனாலயே எஃப்35 போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் ஹெல்மெட்டின் விலை கோடி ரூபாய்க்கு இணையான மதிப்புடைய சூப்பர் கார்களின் விலைக்கு ஈடானதாக இருக்கின்றது.

அப்படி என்ன வசதிகள் இந்த ஹெல்மட்டில் இருக்கின்றன என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதுகுறித்த விரிவான தகவலைதான் கீழே தொடர்ச்சியாக நாம் பார்க்கவிருக்கின்றோம்.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

காட்சி ஊட்டம் (Visual Feed)

எஃப்35 போர் விமானத்தின் ஹெல்மட்டில் காணப்படும் பல்வேறு சிறப்பம்சங்களில் காட்சி வழங்கும் வசதியும் ஒன்று. இதற்காக, இந்த ஹெல்மெட்டின் உட்பகுதியில் திரை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இது, வெளிப்புறத்தில் இருக்கும் ஆறு கேமிராக்களின்ஊடாக மனிதர்களின் கண்களைக் காட்டிலும் அதிக தெளிவான மற்றும் கூர்மையான காட்சிகளை வழங்கும். இத்துடன், எக்ஸ்-ரே காட்சி அம்சமும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றது.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

இந்த ஹெல்மெட் போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் ஹெல்மட் என்பதால் இந்த அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது, விமானியன் பார்வைக்கு அனைத்தையும் புலப்படச் செய்ய உதவும்.

அதாவது, விமானி இந்த ஹெல்மெட்டை அணிந்து போர் விமானத்தில் பறக்கும்போது, அவருக்கு முன்பிருக்கும் விஷயங்களை மட்டுமின்றி பின்புறத்தில் நடைபெறும் சம்பவங்களையும் காட்சியாக வழங்கும்.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

அதுமட்டுமின்றி, விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சில கேமிராக்களின்மூலம் சில காட்சிள் ஹெல்மெட்டில் தோன்றும் என்று கூறப்படுகின்றது. அது, விமானத்தின் மேற் மற்றும் கீழ் என நான்கு பக்க காட்சியையும் காண்பதற்கு உதவும்.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

மேலும், இந்த ஹெல்மெட்டில் உள்ள தொழில்நுட்ப அம்சம் விமானியின் அசைவைக் கொண்டே காட்சியை மாற்றி மாற்றி வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, தரையில் இருக்கும் எதிரிகளைக் கூட துள்ளியமாக காட்டிக் கொடுப்பதற்கான அதீத திறனை அது பெற்றுள்ளது.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

இதில், இதன் முந்தைய தொழில்நுட்பம் சில கோளாறுகளையும், தகவலை உடனுக்குடன் வழங்குவதில் சிக்கலையும் சந்தித்து வந்துள்ளது. ஆனால், புதிதாக அப்டேட் செய்யப்பட்ட ஹெல்மட் அவ்வாறு இல்லாமல் அனைத்தையும் உடனுக்குடன் வழங்கும் வகையில் மாறியிருக்கின்றது.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

தரவுகள் வழங்குவதில் தந்திரம் (Tactical data)

லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35 விமானத்தின் முந்தைய தலைமுறை விமானத்தில், தலைக்கு மேலே ஓர் திரை வழங்கப்பட்டிருக்கும் அதில்தான் விமானிக்கு தேவையான அனைத்து தரவுகளும் வழங்கப்படும். ஆனால், இப்போது அவ்வாறு இல்லாமல் ஹெல்மெட்டிலேயே அனைத்து தரவுகளும் வழங்கப்படும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றது.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

அதாவது இலக்கை குறி வைப்பது முதல் இலக்கை இன்ஃபிராரெட் செய்து காண்பிப்பது வரையிலான பல்வேறு வசதிகள் அதில் அடங்கும்.

மேலும், இன்ஃபிராரெட் மூலம் தேடல் மற்றும் ரேடாரின் உதவியுடன் டார்கெட்டை கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு தந்திரமான தரவுகளையும் இந்த ஹெல்மட் வழங்குகின்றது.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

இரவிலும் பார்வை (Night Vision)

எக்ஸ்-ரே பார்வையை அடுத்து இந்த ஹெல்மெட்டில் மற்றுமொரு பிரம்மிப்பான விஷயமாக நைட் விஷன் இருக்கின்றது. இந்த அம்சம் இரவு நேரத்திலும் எதிரிகளை கண்டுபிடித்து, பந்தாடுவதற்கு உதவும். அதாவது, இரவு நேரங்களில் மறைந்திருக்கும் தாக்கும் தீவிரவாதிகளைக் கண்டறிந்து தாக்குவதற்கு இந்த நைட் மோட் உதவுகின்றது.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

இதுமட்டுமின்றி, இந்த ஹெல்மெட்டில் வழக்கான ஃபைட்டர் ஜெட் விமானங்களின் ஹெல்மெட்டில் இருப்பதைப் போன்று பிக்சர் அண்ட் பிக்சர் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது, தோழமை விமானத்தின் வீடியோவை பகிர்ந்து பார்ப்பதற்கு உதவும்.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

புல்லட் ப்ரூஃப் (Bulletproof)

எஃப்35 ஹெல்மட்டில் காணப்படும் மிக முக்கிய அம்சங்களில் புல்லட் ஃப்ரூப்பும் ஒன்று. இது போர் காலங்களில் எதிரி நாட்டின் துப்பாக்கி குண்டுகளில் இருந்து விமானியின் பாதுகாப்பதற்காகவும், அவசர வெளியேற்றத்தின் (emergency ejection)போது அவருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கவும் உதவும்.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

இதுமட்டுமின்றி விலையுயர்ந்த கார்களில் பயணிக்கும்போது எப்படி வெளியில் காணப்படும் சத்தங்கள் கேபினுக்குள்ளே கேட்காதோ, அதேபோன்று இந்த ஹெல்மட்டை அணியும் விமானிக்கும் வெளிப்புற சப்தம் துளியளவும் கேட்காது.

எனவே, அவர் சொந்த நாட்டின் அனைத்து கட்டளைகளையும் எளிதில் கேட்டறிந்து அதனை உடனே செயல்படுத்த முடியும். இதற்காக அதிக தொழில்நுட்ப வசதியுடைய ஆடியோ சிஸ்டம் அந்த ஹெல்மெட்டில் வழங்கப்பட்டிருக்கின்றது.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

பிரத்யேகமாக தயாரிப்பு

எஃப்35 விமானத்திற்கான அனைத்து ஹெல்மெட்டுகளும் அதன் விமானிக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்படுகின்றது. எனவே, இந்த ஹெல்மெட்டை வேறு விமானி பயன்படுத்துவது சற்றே சிரமமான ஒன்று. அந்தளவிற்கு கூடுதல் ஃபிட்டாக தயாரிப்பதற்காக முதலில் விமானியின் 3டி பிரிண்ட் தயாரிக்கப்படுகின்றது. அதாவது, விமானி தலை பாகத்தின் நகல் பொம்மை தயாரிக்கப்பட்டு ஹெல்மட் வடிவமைக்கப்படுகின்றது.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

ஆகையால், இதனைப் பயன்படுத்தும் விமானி சிறு துளியளவும் அசௌகரியமான அனுபவத்தைப் பெற மாட்டர் என உறுதியாக தெரிகின்றது. மேலும், விமானிகள் அதிக உயரத்தில் பறக்கும்போது பனி போன்றவற்றில் இருந்தும் காக்கின்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

இதுபோன்ற பல்வேறு காரணங்களினாலயே இந்த ஹெல்மெட் சூப்பர் கார்களுக்கு இணையான மதிப்பில் இருக்கின்றது. ஆனால், இதனை யாருக்காக தயாரிக்கப்படுகின்றதோ அவரால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது சற்றே வேதனையளிக்கும் தகவலாக உள்ளது.

பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

இந்த லாக்ஹீட் மார்ட்டின் போர் விமானானது அமெரிக்க வான் படையில் பயன்படுத்தப்படும் மிகவும் சக்தி வாய்ந்த ஏர் கிராஃப்ட் ஆகும். இது சக்தி வாய்ந்த விமானம் என்று கூறுவதற்கு பதிலாக அதிக அட்வான்ஸ்ட் தொழில்நுட்பம் பொருந்திய மிகவும் காஸ்ட்லியான விமானம் என்றே கூறலாம். இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த மேலை நாம் பார்த்த ஹெல்மெட் இருக்கின்றது. இது ஒன்றை மட்டுமே தயாரிக்க இந்திய மதிப்பில் ரூ. 2.8 கோடியை அமெரிக்க அரசு செலவிடுகின்றது.

குறிப்பு: ஒரு சில புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை...

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
F-35 Fighter Jet Helmet. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X