டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியத்தில் மூழ்கிடுவீங்க

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியத்தில் மூழ்கிடுவீங்க

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி (Tata Nexon Electric SUV) கார், வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மீதான ஆவல் அதிகரித்துள்ளது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியத்தில் மூழ்கிடுவீங்க

நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் டாடா நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், சரியான விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் குறித்து நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதில், சில விஷயங்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கலாம்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியத்தில் மூழ்கிடுவீங்க

ரெகுலர் நெக்ஸானை விட க்ரவுண்ட் க்ளியரன்ஸ் குறைவு!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரி ஃப்ளோரில் இருப்பதால், ரெகுலர் நெக்ஸானுடன் ஒப்பிடும்போது இதன் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் குறைவாக இருக்கிறது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 205 மிமீ. அதே சமயம் ரெகுலர் நெக்ஸானின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 209 மிமீ. எனினும் இந்த 4 மிமீ வித்தியாசம் சிறியதுதான்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியத்தில் மூழ்கிடுவீங்க

ரெகுலர் நெக்ஸானை விட பவர்ஃபுல்!

ரெகுலர் நெக்ஸானை விட குறைவான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டிருந்தாலும், அதை விட அதிக பவர்ஃபுல்-ஆக இருப்பது நெக்ஸான் எலெக்ட்ரிக் வெர்ஷனின் சிறப்பு. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் ரெகுலர் நெக்ஸான் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரை மட்டுமே வழங்குகிறது. ஆனால் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அதிகபட்சமாக 129 பிஎஸ் பவரை வழங்க கூடியது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியத்தில் மூழ்கிடுவீங்க

இது ரெகுலர் நெக்ஸானை விட அதிகமானது. அதே சமயம் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அதிகபட்சமாக 245 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இது பெட்ரோல் மாடலை விட அதிகமாகும். ஏனெனில் பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக 170 என்எம் டார்க் திறனை மட்டுமே வழங்கும். ஆனால் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் டார்க் டீசல் மாடலை விட குறைவு. ஏனெனில் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 260 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியத்தில் மூழ்கிடுவீங்க

விரைவாக செயல்படக்கூடிய டாடா கார்!

எலெக்ட்ரிக் வாகனமாக இருப்பதால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் ஒரு சில சாதகங்கள் உள்ளன. இன்ஸ்டன்ட் டார்க்கை வழங்குவதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பெயர் பெற்றவை. அதிகாரப்பூர்வ டேட்டாவின்படி, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 10 வினாடிகளுக்கு உள்ளாகவே எட்டி விடும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியத்தில் மூழ்கிடுவீங்க

இதன்படி பார்த்தால், தற்போது மார்க்கெட்டில் கிடைக்க கூடிய வேறு எந்த டாடா காரையும் விட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான் விரைவாக செயல்பட கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் வெறும் 9.46 வினாடிகளில் எட்டி விடக்கூடி திறன் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியத்தில் மூழ்கிடுவீங்க

60 நிமிடங்களில் க்யிக் சார்ஜிங்!

நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் டாடா நிறுவனம் க்யிக் சார்ஜிங் (Quick Charging) ஆப்ஷனை வழங்கவுள்ளது. இதன்படி டிசி க்யிக் சார்ஜிங் ஆப்ஷனை பயன்படுத்தினால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் 60 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். ஆனால் வீட்டில் ஏசி சார்ஜரை பயன்படுத்தினால், முழுமையாக சார்ஜ் ஏற சுமார் 8 மணி நேரம் வரை ஆகும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியத்தில் மூழ்கிடுவீங்க

312 கிலோ மீட்டர் ரேஞ்ச்!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 312 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும். இது அராய் சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். ஆனால் நடைமுறை பயன்பாட்டில் இதன் ரேஞ்ச் 250 கிலோ மீட்டர்களாக இருக்கலாம். இதுவும் ஒன்றும் மோசமான ரேஞ்ச் எல்லாம் கிடையாது. எவ்வித பிரச்னையும் இன்றி நகர பயன்பாட்டிற்கு தாராளமாக பயன்படுத்தலாம்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியத்தில் மூழ்கிடுவீங்க

லிமிடெட் டாப் ஸ்பீடு!

பயணிகளின் பாதுகாப்பிற்காக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி டாடா நிறுவனம் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடை மணிக்கு 120 கிலோ மீட்டர்கள் என்ற நிலையில் கட்டுப்படுத்தியுள்ளது. இது மிகவும் அதிகமான வேகம் என்று சொல்லி விட முடியாது. ஆனால் இந்திய சாலைகளுக்கு ஏற்ற வேகமாக இருக்கும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியத்தில் மூழ்கிடுவீங்க

கனெக்டட் டெக்னாலஜி வழங்கப்படும் முதல் டாடா கார்!

தற்போது பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்கள் கனெக்டட் வசதிகளை வழங்க தொடங்கியுள்ளன. இந்த வகையில், ஹூண்டாய் வெனியூ, எம்ஜி ஹெக்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்களில் கனெக்டட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இதேபோல் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரிலும் கனெக்டட் வசதிகள் வழங்கப்படவுள்ளன.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியத்தில் மூழ்கிடுவீங்க

எனவே கனெக்டட் டெக்னாலஜி வழங்கப்படும் முதல் டாடா கார் என்ற பெருமையை நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி பெறுகிறது. நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் டாடா நிறுவனம் மொத்தம் 35 கனெக்டட் வசதிகளை வழங்கவுள்ளது. எனவே சரியான விலை நிர்ணயம் செய்யப்பட்டால், இந்த கார் நிச்சயமாக வாடிக்கையாளர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles

English summary
Facts About Upcoming Tata Nexon EV. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X