Just In
- 29 min ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 1 hr ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 1 hr ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 2 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விலையுயர்ந்த சொகுசு காருக்கு பதிலாக நானோ காரை பயன்படுத்தும் பிரபல நடிகை... ஏன் தெரியுமா..?
கோடியில் புரளும் திரைப் பிரபலங்கள் பல கோடி மதிப்புள்ள விலையுடைய கார்களுக்கு பதிலாக மலிவு விலை கார்களையும் பயன்படுத்தி வருகின்றார். அந்தவகையில் எந்தெந்த பிரபலங்கள் மலிவு விலை கார்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
கோலிவுட், மோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் என பல திரையுலகங்கள் காணப்பட்டாலும் அதிக மவுசு என்னமோ பாலிவுட்டிற்குதான் இருக்கின்றது. இதன்காரணாகவே, அந்த திரையுலகைச் சார்ந்த பல நடிகர்கள் செல்வம் கொழித்த கோடீசுவரர்களாக காட்சியளிக்கின்றனர். குறிப்பாக, அவர்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறை பலரை பொறாமைக்குள்ளாக்கும் வகையில் இருக்கின்றது.
இத்தகைய நிலைப்பாட்டிற்கு பாலிவுட் நடிகர்கள் பயன்படுத்தும் சொகுசு வீடுகள் மற்றும் ஆடம்பர கார்களே முக்கிய காரணமாக இருக்கின்றது.
அந்த கார்கள் நாம் நினைத்துகூட பார்க்க முடியாத பல லட்சங்களையும், கோடிகளையும் கொண்டதாக இருக்கின்றது.
ஆனால், இந்தளவிற்கு செல்வந்தர்களாகவும், சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பவர்களாகவும் கருதப்படும் பாலிவுட் நடிகர்கள் பலர் மிக குறைவான, பட்ஜெட் விலை கார்களைப் பயன்படுத்துவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தங்களிடம் இருக்கும் விலையுயர்ந்த கார்களுக்கு பதிலாக மிக குறைந்த விலையுடைய கார்களையே அவர்கள் வழக்கமான பயணத்திற்கு பயன்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.
அந்தவகையில், பாலிவுட்டின் மிகுந்த செல்வந்தர்கள் என்று போற்றப்படும் நடிகர்கள் நடிகைகள் என யாரெல்லாம் விலைக்குறைந்த கார்களைப் பயன்படத்துகின்றனர் என்பதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் காணிவிருக்கின்றோம்.
இதில், பல முன்னணி நட்சத்திரங்களும் இருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது.
ஜான் ஆபிரகாம்
பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஜான் ஆபிரகாமும். இவரை நடிகர் என்பதைவிட வாகனங்கள்மீது அதிகம் ஆர்வம் என்றும்கூட கூறலாம். ஏனென்றால் அந்தளவிற்கு பல விலையுயர்ந்த வாகனங்கள் முதல் விலை குறைந்த வாகனங்கள் வரை தன் வசம் வைத்திருக்கின்றார்.
குறிப்பாக, அவரிடத்தில் உள்ள நிஷான் ஜிடி-ஆர் போன்ற சூப்பர் கார் மற்றும் அதிதிறன் கொண்ட பைக்குள் பயன்பாட்டில் இருக்கின்றன.
இதுதவிர, ஆஃப்-ரோடு மற்றும் ஜாலி ரைடுகளுக்காக மாருதி சுசுகி ஜிம்ஸி போன்ற கார்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். இதையே அவர் பல நேரங்களில் வெளியே ஜாலியாக ரைடு செல்லும்போது அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகின்றது.
மாருதி நிறுவனம் இந்த ஜிப்ஸி ரகத்திலான காரின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஏற்கனவே நிறுத்திவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், இந்த காரை விலையுயர்ந்த கார்களுக்கு இணையாக ஜான் பராமரித்து பயன்படுத்தி வருகின்றார்.
ஜேக்கி ஷ்ரோஃப்
பழைய படங்கள் முதல் தற்போதைய புதிய படங்கள் வரை முக்கிய கதாபாத்திரங்கள் நடித்து வரும் ஓர் பிரபலமாக ஜேக்கி ஷ்ரோஃப் இருக்கின்றார். இவர், அதிகபட்ச பயணங்களுக்கு டொயோட்டா இன்னோவா கார்களையேப் பயன்படுத்துகின்றார். இதற்கேற்ப இந்த காரில் வலம் வரும்போதே மீடியாவின் கண்களில் அவர் அதிகம் சிக்குகின்றார்.
பழைய படங்கள் முதல் தற்போதைய புதிய படங்கள் வரை முக்கிய கதாபாத்திரங்கள் நடித்து வரும் ஓர் பிரபலமாக ஜேக்கி ஷ்ரோஃப் இருக்கின்றார். இவர், அதிகபட்ச பயணங்களுக்கு டொயோட்டா இன்னோவா கார்களையேப் பயன்படுத்துகின்றார். இதற்கேற்ப இந்த காரில் வலம் வரும்போதே மீடியாவின் கண்களில் அவர் அதிகம் சிக்குகின்றார்.
இவரிடத்தில் பென்ட்லீ நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், அதிக சொகுசு வசதிகளை டொயோட்டா இன்னோவா கார்களிலேயே அவர் அனுபவிப்பதாகவும், இதனாலயே அந்த காரை அதிகம் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.
இருப்பினும், சில நேரங்களில் பென்ட்லீ போன்ற சொகுசு கார்களைப் பயன்படுத்துவதற்கும் அவர் தவறுவதில்லை.
அனில் கபூர்
பாலிவுட் திரையுலகில் கடந்த 40 வருடங்களாக தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றார் அனில் கபூர். இவர் மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றவர் ஆவார். இதனாலயே பாலிவுட் உலகில் மிக நீண்ட நாட்களாக செயல்பட்டு வருகின்றார்.
மேலும், அதிகம் பாலிவுட்டின் பணக்கார நடிகர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவரிடத்தில் பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் ஆகிய நிறுவனங்களின் சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
இருப்பினும், அவற்றுடன் டாடா நிறுவனத்தின் சஃபாரி ஸ்டோர்மே எஸ்யூவி காரையும் வைத்திருக்கின்றார். இந்த காரை டாடா நிறுவனமே பரிசாக வழங்கியதாக கூறப்படுகின்றது. குறிப்பாக தொலைக்காட்சி விளம்பரத்திற்காக இதனை வழங்கியிருக்கின்றது டாடா
இந்த காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜினை பயன்படுத்தியிருக்கின்றது டாடா. இது மேனுவல் கியர்பாக்ஸைக் கொண்ட மாடல் ஆகும்.
ஆமிர்கான்
ஆமிர்கானும் அதிகம் செல்வம் கொழித்த நபராகவே பாலிவுட்டில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இவரிடத்தில், பிஎம்டபிள்யூ, பென்ஸ் மட்டுமின்றி பென்ட்லீ நிறுவனத்தின் விலையுயர்ந்த தயாரிப்புகள்கூட இருக்கின்றன.
அதில், மிகவும் புகழ்வாய்ந்த காராக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எஸ் குவார்ட் மற்றும் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, அவரிடத்தில் டொயோட்டா பார்ச்சுனர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 போன்ற கார்களும் இருக்கின்றன.
டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் எக்ஸ்யூவி500 ஆகிய இரு எஸ்யூவி கார்களும் நம்மைப் பொறுத்தவரை மிக அதிக விலைக் கொண்ட கார்களாக இருந்தாலும், அவருக்கு மிகவும் விலை குறைந்த கார்களாகும். இந்த கார்கள் மிகவும் நடுத்தரமான பணக்கார வர்க்கத்தினரிடமே அதிகம் பயன்பாட்டில் இருக்கின்றது.
நானே படேகர்
நானே படேகரை பலருக்கு காலா திரைப்படத்தின் மூலமே அறிந்திருப்பார்கள். ஆனால், இவர் பாலிவுட்டின் மிகவும் மூத்த நடிகர் ஆவார். இவர் பல கோடிகளைச் சம்பாதித்திருந்தாலும் எளிமைக்கு பெயர்போனவராக இருக்கின்றார். இதனாலயே வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் அவர் நடித்தாலும் ரசிகர்கள் பலர் இருக்கின்றனர்.
தொடர்ந்து, தன்னுடைய வாழ்க்கையில் மட்டுமின்றி பயன்படுத்தும் கார்களிலும் மிக எளிமையையே அவர் கடைபிடிக்கின்றார். இதனாலயே, அவரிடத்தில் ஒரு பேன்சி கார்கள்கூட பயன்பாட்டில் இல்லை. தற்போது, அவரிடத்தில் கவனிக்க வேண்டிய வகையில் மஹிந்திரா நிறுவனத்தின் சிஜே4ஏ மாடல் ஜீப் பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த ஜீப்பில் அவர் எப்போதாவதுதான் வெளியே வருகின்றார். மற்ற நேரங்களில் விலை குறைந்த கார்களில் வலம் வந்தவாறு இருக்கின்றார்.
குல் பனாக்
அட்வென்சர் பயணங்களுக்கு பெயர்போனவர் குல் பனாக். இதனாலயே இவரை அடிக்கடி மலையேறும் மோட்டார் பந்தயங்களில் காண முடிகின்றது. இதை வைத்தே நாம் யூகித்து விடலாம் இவர் ஓர் வாகனங்கள்மீது அதிகம் ஆர்வம் என்பதை.
ஆகையால், இவரிடத்தில் பல விலையுயர்ந்த ரேஸ் இன வாகனங்கள் இருக்கின்றன. கூடவே, மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கேட்வே ஆஃப்-ரோடு ரக காரும் இருக்கின்றது.
இந்த காரை அவர் அவ்வப்போது பயன்படுத்துவதால் அதில் ரூஃப்ட் டென்ட், ஸ்நோர்க்கிள், ஆஃப்-ரோடு பயணத்திற்கான டயர், கெமிக்கல் கழிவறை உள்ளிட்ட ஏராளமான வசதிகளை அவர் செய்திருக்கின்றார். இந்த மாடிஃபிகேஷன்களால் அந்த கார் மிகவும் அதிக வசதிகளைக் சொகுசு காருக்கு இணையாக மாறியிருக்கின்று.
பிபாஷா பாஷு
பாலிவுட் திரையுலகின் கவர்ச்சியான நடிகையாக பாஷு இருக்கின்றார். இவர் புல்லட்ப்ரூஃப் வசதியுடை பார்ச்சூனர் காரை பயன்படுத்தி வருகின்றார். வெள்ளை நிறம் கொண்ட அந்த காரில் பாஷு வலம் வருவதை மும்பை வாசிகள் அவ்வப்போது கண்டிருப்பதாக கூறப்படுகின்றது.
மும்பை போன்ற வாகனங்களின் அடர்த்தி அதிகம் கொண்ட சாலைகளில் விலையுயர்ந்த கார்களைக் கொண்டு சேதப்படுத்துவதைக் காட்டிலும், இதுபோன்ற நடுத்தர விலையுடைய கார்களைப் பயன்படுத்தி தப்பிப்பது மிகும் சிறந்த ஐடியா ஆகும்.
இதைத்தான் பாலிவுட் கவர்ச்சி நாயகி பிபாஷா பாஷு கையாண்டு வருகின்றார்.
திஷா படானி
பாலிவுட் திரையுலகில் இளைஞர்களின் மனதை அதிகம் கொள்ளைக் கொண்ட ஹீரோயின்களில் திஷா பட்டானியும் ஒருவர் ஆவார். ஆனால், இவர் வாழ்க்கையோ சற்றே எளிமையானதாக இருக்கின்றது. இதனை உறுதி செய்யும் வகையில், இரு பட்ஜெட் கார்களை அவர் பயன்படுத்தி வருகின்றார்.
குறிப்பாக ஹோண்டா சிவிக் மற்றும் செவ்ரோலட் க்ரூஸ் ஆகிய கார்களைப் பயன்படுத்தி வருகின்றார்.
மேற்கூறிய டி செக்மெண்ட் கார்கள் ஆகும். இருப்பினும், இவரிடத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் மற்றும் பிஎம்டபிள்யூ-7 செரீஸ் கார்களையும் பயன்படுத்தி வருகின்றார். ஆனால், பெரும்பாலான நேரங்களில் இவர் க்ரூஸ் மற்றும் சிவிக் கார்களை வழக்கமான பயணத்திற்கு பயன்படுத்தி வருகின்றார்.
மலாய்கா அரோரா
ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்கு பெயர்போனவர் மலாய்கா அரோ. இவர் புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் வோக் போன்ற பல சொக்சூரி கார்களைப் பயன்படுத்தி வருகின்றார். இதுமட்டுமின்றி, டொயோட்டோ இன்னோவா க்ரிஸ்டா போன்ற வழக்கமான கார்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார்.
இந்த காரில் வலம் வரும்போதே பல முறை ஊடகத்தின் கேமிரா கண்களில் அவர் சிக்கியிருக்கின்றார்.
கிம் ஷர்மா
நாம் மேலே பார்த்த ஒரு சில நடிகைகள், நடிகர்கள் பயன்படுத்தும் கார்களாவது பல லட்சங்களைக் கொண்டதாக இருக்கின்றன. ஆனால், கிம் ஷர்மா பயன்படுத்தும் கார் மிகவும் எளிமையான ஒன்று. அது மிக மிக மலிவு விலையுடைய டாடா நானோ கார் ஆகும். இது ஏழைகளின் காராகும்.
இந்த விலையில் இதற்கு முன்பாக ஓர் உலகளவில் எங்குமே கிடைக்கவில்லை. ஆனால், டாடா நிறுவனம் அனைவருக்கும் கார் என்ற பெயரில் டாடா நானோவை அறிமுகம் செய்தது.
அதன் சிறிய கவர்ச்சியான தோற்றத்தில் மயங்கிய கிம் ஷர்மா தனது கராஜில் இணைத்தார். தற்போது வரையும் இந்த காரை அவர் பயன்படுத்தி வருகின்றார். குறிப்பாக அருகாமையில் இருக்கும் பயணங்களுக்கு அந்த காரை அவர் பயன்படுத்தி வருகின்றார்.
இவர் மிகவும் பிரபலமான மாடலாக இருந்து வந்தார். இதன் பின்னரே பாலிவுட் திரையுலகில் கால் தடம் பதித்து தற்போது பிரபல ஹீரோயின்களுக்கு டஃப் கொடுத்து வருகின்றார்.
இதுபோன்ற கோடியில் புரளும் பல பிரபலங்கள் பட்ஜெட் விலையை வாழும் நடுத்தர மக்களைப் போன்று விலைக்குறைந்த கார்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
விலைக்குறைந்த சிறிய கார்களைப் பயன்படுத்த பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இடவசதி, டிராஃபிக்கில் எளிமையாக கையாளுதல், போன்ற பல்வேறு காரணங்களால் சிறிய மற்றும் பட்ஜெட் கார்களை பிரபல நடிகர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!