9 மாதங்கள் வாகனம் ஓட்ட தடை! பிரபல கால்பந்தாட்ட வீரருக்கு அதிரடி உத்தரவு... இதவிடுங்க அபராதம் எவ்ளோ தெரியுமா?

பிரபல கால்பந்தாட்ட வீரரை 9 மாதங்களுக்கு வாகன ஓட்டக் கூடாது என அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை இப்பதிவில் காணலாம்.

9 மாதங்கள் வாகனம் ஓட்ட தடை! பிரபல கால்பந்தாட்ட வீரருக்கு அதிரடி உத்தரவு... இதவிடுங்க அபராதம் எவ்ளோ தெரியுமா?

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரரான ஜேக் கிரீலிஸ்-க்கே 9 மாதங்கள் வாகன ஓட்ட தடை என்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது. ஆஸ்டன் வில்லாவின் கேப்டனான இவர் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

9 மாதங்கள் வாகனம் ஓட்ட தடை! பிரபல கால்பந்தாட்ட வீரருக்கு அதிரடி உத்தரவு... இதவிடுங்க அபராதம் எவ்ளோ தெரியுமா?

இவர் கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி அன்று தன்னுடைய நண்பர்களைப் பார்க்க செல்வதற்காக காரை ஓட்டியபோது வேறு சிலரின் கார்களுடன் மோதியதாகக் கூறப்படுகின்றது. பார்க்கிங்கில் இருந்து காரை வெளியேற்றும்போதே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

9 மாதங்கள் வாகனம் ஓட்ட தடை! பிரபல கால்பந்தாட்ட வீரருக்கு அதிரடி உத்தரவு... இதவிடுங்க அபராதம் எவ்ளோ தெரியுமா?

இதனால், இரு விலையுயர்ந்த கார்கள் கடுமையாக சேதமடைந்திருக்கின்றன. அதில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு கார் என்றும், மற்றொன்று சிட்ரோவன் நிறுவனத்தின் வேன் என்றும் கூறப்படுகின்றது. இவற்றையே தனது ரேஞ்ஜ் ரோவர் காரால் பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுக்கும்போது மோதியிருக்கின்றார்.

9 மாதங்கள் வாகனம் ஓட்ட தடை! பிரபல கால்பந்தாட்ட வீரருக்கு அதிரடி உத்தரவு... இதவிடுங்க அபராதம் எவ்ளோ தெரியுமா?

இதன் விளைவாக இவரது ஓட்டுநர் உரிமம் 9 மாதங்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. இத்துடன், இங்கிலாந்து நாட்டின் பவுண்டு மதிப்பில் £82,499 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 82.16 லட்ச ரூபாயாகும். இந்த அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் ஜேக் கிரீலிஷ் செலுத்த வேண்டும் என இங்கிலாந்து நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 மாதங்கள் வாகனம் ஓட்ட தடை! பிரபல கால்பந்தாட்ட வீரருக்கு அதிரடி உத்தரவு... இதவிடுங்க அபராதம் எவ்ளோ தெரியுமா?

இந்த உச்சபட்ச அபராதத்தை கால்பந்தாட்ட வீரருக்கு வழங்குவதற்கு, அவர் விபத்தை ஏற்படுத்தியது மட்டுமே காரணமில்லை. அவர், கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த லாக்டவுண் உத்தரவையும் மீறியிருக்கின்றார். ஆமாங்க, இங்கிலாந்து நாட்டில் மார்ச் மாதத்திலேயே கடுமையான விதிகள் கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு நடைமுறைப்படுத்தியிருந்தன.

9 மாதங்கள் வாகனம் ஓட்ட தடை! பிரபல கால்பந்தாட்ட வீரருக்கு அதிரடி உத்தரவு... இதவிடுங்க அபராதம் எவ்ளோ தெரியுமா?

அந்தவேலையில், அவர் அவசர அவசரமாக தனது காரை எடுக்கும்போத இரு கார்களையும் சேதப்படுத்தியிருக்கின்றனர். இதில் அவருடைய விலையுயர்ந்த ரேஞ்ஜ் ரோவர சொகுசு காரும் கடுமையாக சேதத்தைச் சந்தித்திருக்கின்றது. இத்துடன், தற்போது உச்சபட்ச அபராதத்தையும் அவர் பெற்றிருக்கின்றனர்.

9 மாதங்கள் வாகனம் ஓட்ட தடை! பிரபல கால்பந்தாட்ட வீரருக்கு அதிரடி உத்தரவு... இதவிடுங்க அபராதம் எவ்ளோ தெரியுமா?

விளையாட்டு வீரர் செய்த இந்த செயல் அந்நாட்டு மக்களையும், அவரது ரசிகர்களையும் முகம் சுலிக்கச் செய்துள்ளது. ஆகையால், இந்த செயலுக்கு தான் வருத்தம் தெரிவிப்பதாக ஜேக் கிரீலிஷ் தெரிவித்திருக்கின்றார். அதேசமயம், இந்த விபத்து நடைபெற்ற பின்னர் சிறிது காலம் மிகுந்த பதற்றத்துடனேயே காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது. உதாரணமாக, நீதிமன்றத்திற்கு வரும்போது வெவ்வேறு காலணிகளை அவர் அணிந்திருந்தார்.

9 மாதங்கள் வாகனம் ஓட்ட தடை! பிரபல கால்பந்தாட்ட வீரருக்கு அதிரடி உத்தரவு... இதவிடுங்க அபராதம் எவ்ளோ தெரியுமா?

பதற்றத்தில் இருக்கும்போது வாகனத்தை இயக்குவது என்னமாதிரியான விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த சம்பவம் அமைந்திருக்கின்றது. கொரோனா முடக்கம் நடைமுறையில் இருந்ததால் அவர் பதற்றத்துடனேயே வெளி வந்திருக்கின்றார். அப்போதே பிறரின் கார்களை ரிவர்ஸ் எடுக்கும்போது சேதப்படுத்தியிருக்கின்றார்.

9 மாதங்கள் வாகனம் ஓட்ட தடை! பிரபல கால்பந்தாட்ட வீரருக்கு அதிரடி உத்தரவு... இதவிடுங்க அபராதம் எவ்ளோ தெரியுமா?

Image Courtesy: Hans_LFC

தூக்கம், பதற்றம், கோபம் போன்ற எந்தவொரு உணர்ச்சிகளும் உச்சத்தில் இருக்கும்போது வாகனத்தை இயக்கினால் இத்தகைய விபரீதமே அரங்கேறும். ஆகையால், இதுபோன்ற எந்தவொரு உணர்விற்கும் இடம் கொடுக்காமல் வாகனத்தை இயக்குவதே அனைவருக்கும் நல்லது. மேலும், இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முடியும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Famous Foodballer Jack Grealish Gets Fine £82k For Stay At Home Rule Violation. Read In Tamil.
Story first published: Thursday, December 17, 2020, 10:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X