Just In
- 5 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 7 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 9 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Movies
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியருக்காக வான் வழியாக வந்த ஸ்பெஷல் கார்... விலையை கேட்டு மயங்கி போன மக்கள்...
இந்திய தொழிலதிபர் ஒருவருக்காக ஃபெர்ராரி 488 பிஸ்தா ஸ்பைடர் கார் வான் வழியாக வந்திறங்கியுள்ளது. இதன் விலை மற்றும் கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகின் மிகவும் புகழ்வாய்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஃபெர்ராரி நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனத்தின் கார்கள் அதிக திறன் கொண்டவை மட்டுமல்ல, அதீத கவர்ச்சியானவையும்கூட. எனவேதான், இந்நிறுவனத்தின் கார்கள் சாலையில் பயணிக்கும்போது மிகப்பெரிய கோடிஸ்வரராக இருந்தாலும்கூட அதனை ஒரு நிமிடம் திரும்பி பார்த்துவிடுகின்றனர்.

அந்த அளவிற்கு மிக கவர்ச்சியான மற்றும் சூப்பர் கார்களையே ஃபெர்ராரி நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்த நிறுவனமே தற்போது இந்தியர் ஒருவருக்காக ஸ்பெஷலாக கார் ஒன்றை தயார் செய்து வான்வழியாக இந்தியா அனுப்பி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் வளர்ந்து வரும் தொழிலதிபர்களில் ஒருவரே யோஹன் பூனவல்லா. இவருக்காகவே ஃபெர்ராரி நிறுவனம் ஸ்பெஷலாக கஸ்டமைஸ் செய்த ஃபெர்ராரி 488 பிஸ்தா ஸ்பைடர் (488 Pista Spider) மாடல் காரை அனுப்பி வைத்திருக்கின்றது. ஏற்கனவே இவரிடத்தில் ஃபெரர்ராரி நிறுவனத்தின் 458 ஸ்பெஷலே அபெர்டா (458 Speciale Aperta) கார் பயன்பாட்டில் இருக்கின்றது. இக்காரை இந்தியாவில் பயன்படுத்தும் ஒரே நபர் யோஹன் பூனவல்லா மட்டுமே ஆவார்.

இந்த நிலையிலேயே தனக்கான ஸ்பெஷல் அணிகலன்கள் மற்றும் சொகுசு வசதிகள் சேர்ப்புடன் புதிய 488 பிஸ்தா ஸ்பைடர் காரை அவர் வாங்கியிருக்கின்றார். இதுகுறித்த புகைப்படத்தை த்ரோட்டில்97 எனும் இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை வைத்து பார்க்கையில் இக்கார் மிக சமீபத்தில்தான் இந்தியா வந்திறங்கியிருக்கின்றது என்பது தெரியவந்துள்ளது.

சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இக்கார் ஓர் ஹார்ட்டாப் கன்வெர்டபிள் மாடலாகும். இதில், என்ன மாதிரியான கூடுதல் சிறப்பு விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அக்காரில் இடம் பெற்றிருக்கும் பேட்ஜ்களின் அடிப்படையில், காரில் பல்வேறு அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

கார்களின் வலது மற்றும் இடது பக்கங்களில் 'பி' எனும் ஆங்கில எழுத்து பொறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இது பூனவல்லாவைக் குறிக்கும் எழுத்தாகும். இதுமட்டுமின்றி, சில்வர் பிளேட் ஒன்றும் ஒட்டப்பட்டுள்ளது. அதில், 'யோஹன் பூனவல்லாவிற்காக ஸ்பெஷலாக தயார் செய்யப்பட்ட கார்' என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.

எனவே, யோஹன் பூனவல்லாவின் கராஜில் இணையக்கூடிய இரண்டாம் ஃபெர்ராரி காராக இது மாறியிருக்கின்றது. இந்த கார் மட்டுமின்றி அவரிடத்தில் பல்வேறு சூப்பர்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, மிகவும் அரிதான சூப்பர் கார்களில் ஒன்றான மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ரோட்ஸ்டர் கார் இவரிடத்தில் இருக்கின்றது.

இதுமட்டுமின்றி, ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம், ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் டிராப் ஹெட் கூப், லம்போர்கினி கல்லர்டோ, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி, பென்ட்லீ ஃபிளையிங் ஸ்பர் மற்றும் பல விண்டேஜ் கார்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த வரிசையிலேயே புதிதாக ஃபெர்ராரி 488 பிஸ்தா ஸ்பைடர் கார் சேர்ந்துள்ளது.

இக்கார் அதிக திறன் மிக்கது ஆகும். இதில், 3.9 லிட்டர் வி8 எஞ்ஜினையே ஃபெர்ராரி பயன்படுத்தியுள்ளது. இது, அதிகபட்சமாக 720 பிஎச்பி பவரையும், 770 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இது வெறும் 2.85 செகண்டுகளில் காரை பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தில் இயக்கக்கூடிய திறனாகும். இத்தகைய அதீத திறன் வாய்ந்த காரையே பூனவல்லா புதிதாக டெலிவரி பெற்றிருக்கின்றார்.

இந்த எஞ்ஜின் 'எஞ்ஜின் ஆஃப் தி இயர்' எனும் பட்டத்தைப் பெற்ற சிறப்பு வாய்ந்த மோட்டார் ஆகும். உச்சபட்சமாக மணிக்கு 340 கிமீ எனும் வேகத்தில் சாலையில் பறக்கும் திறனை இந்த மோட்டார் கொண்டிருக்கின்றது. இந்த அதீத வேகத்திற்கு ஏற்ப இக்காரில் கார்பன் ஃபைபர் ரேஸ் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது பிற அலுமினிய வீல்களைக் காட்டிலும் மிகவும் இலகுவானது ஆகும். மேலும் நீடித்த உழைக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றது. இதுபோன்ற பல்வேறு சிறப்பு வசதிகளை இக்கார் பெற்றிருக்கின்றது.

இந்த காரின் ஆரம்ப மாடலின் விலையே சுமார் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கின்றது. தற்போது பூனவல்லா வாங்கியிருக்கும் கார் பல்வேறு கூடுதல் சிறப்பு அணிகலன்களைப் பெற்றிருப்பதால் இக்காரின் விலை கூடுதலாக ஓரிரு கோடிகளைப் பெற்றிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இந்த காரை ஸ்பெஷல் மற்றும் லிமிடெட் எடிசனில் மட்டுமே விற்க ஃபெர்ராரி திட்டமிட்டுள்ளது. இதற்காக வெறும் 3,500 யூனிட்டுகள் மட்டுமே தற்போது தயார் செய்யப்பட்டிருக்கின்றன.