பிரதமர் ஓகே சொன்னா போதும்... இந்தியர்கள் அனைவராலும் பறக்க முடியும்... எப்படி தெரியுமா..?

ஹாலிவுட் திரைப்படங்களில் இருப்பதைப் போன்று பறக்கும் கார்கள், இந்திய வாடகை கார் சேவையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவிற்கும் பறக்கும் வாடகை கார்... பிரதமரை சந்தித்த பிரபல வாடகை கார் நிறுவனம்...

இந்திய சாலைகளில் பொதுசேவை போக்குவரத்து வாகங்களைக் காட்டிலும் அதிகளவில் தனியார் வாடகை வாகனங்களின் ஆதிக்கமே கோளோச்சி நிற்கின்றது.

இந்த வாடகை வாகன சேவையில் விரைவில் பறக்கும் கார்கள் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்த தகவலை ஈடி ஆட்டோ தளம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கும் பறக்கும் வாடகை கார்... பிரதமரை சந்தித்த பிரபல வாடகை கார் நிறுவனம்...

அதுவெளியிட்டுள்ள தகவலின்படி, "டட்ச் நாட்டு நிறுவனமான பால்-V (Pal-V) இந்தியாவில் பறக்கும் வாடகை கார் சேவையை தொடங்குவதற்காக மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக" கூறப்பட்டுள்ளது.

பால்-V ஓர் பறக்கும் கார்கள்குறித்த ஆய்வினை மேற்கொண்டு வரும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனமே பறக்கும் வாடகை கார்களை வாடகை முறையில் இயக்கவிருக்கும் உலகின் முதல் நிறுவனமாகும்.

இந்தியாவிற்கும் பறக்கும் வாடகை கார்... பிரதமரை சந்தித்த பிரபல வாடகை கார் நிறுவனம்...

விரைவில் இந்நிறுவனத்தின் கார்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளின் வான்வெளியை ஆக்கிரமிக்க இருக்கின்றன. இதற்காக, பல நாடுகளிடம் பால்-V நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்து வருகின்றது.

இந்தியாவிற்கும் பறக்கும் வாடகை கார்... பிரதமரை சந்தித்த பிரபல வாடகை கார் நிறுவனம்...

தொடர்ந்து, இதனடிப்படையிலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அந்நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தியது. இதைத்தொடர்ந்து, விரைவில் இந்தியாவில் சோதனையோட்ட முறையில் பறக்கும் கார்கள் இயக்கப்பட இருக்கின்றன.

இந்தியாவிற்கும் பறக்கும் வாடகை கார்... பிரதமரை சந்தித்த பிரபல வாடகை கார் நிறுவனம்...

இந்த சோதனையோட்டம் நிறைவடையும்பட்சத்தில் விரைவில் அந்த பறக்கும் கார்கள் முழுமையாக வாடகை சேவையில் களமிறக்கப்படும். முதலில் இந்திய ஒரு சில முக்கிய நகரங்களில் இச்சேவை பயன்பாட்டிற்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டங்களாக நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கு இச்சேவை பரப்படும்.

இந்தியாவிற்கும் பறக்கும் வாடகை கார்... பிரதமரை சந்தித்த பிரபல வாடகை கார் நிறுவனம்...

பால்-V நிறுவனம், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த பறக்கும் காரை கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, பல கட்ட ஆராய்ச்சி பணிகளை அடுத்து பயன்பாட்டிற்கு களமிறக்கும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

மேலும், அடுத்து வரும் வருடத்தில் இந்த பறக்கும் காரை தனியார் பயன்பாட்டிற்கு விற்பனைச் செய்யவும் பால்-V திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிற்கும் பறக்கும் வாடகை கார்... பிரதமரை சந்தித்த பிரபல வாடகை கார் நிறுவனம்...

இந்த பறக்கும் காரை ஏற்கனவே பின்பற்றப்படும் சர்வதேச விமான மற்றும் நில விதிகளைக் கொண்டு மட்டுமே இயக்க முடியும். ஆகையால், இந்த புதிய காரை இயக்குவதற்கென தனி சான்று இந்நிறுவனத்தின் மூலமே வழங்கப்படுகின்றது. தொடர்ந்து இதற்கான பயிற்சி செயல்முறையையும் சுமார் 35-40 மணி நேரங்கள் அந்நிறுவனமே வழங்கும்.

இந்தியாவிற்கும் பறக்கும் வாடகை கார்... பிரதமரை சந்தித்த பிரபல வாடகை கார் நிறுவனம்...

இந்த பறக்கும் காரை பொது சேவையில் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல் நிலவுகின்றது. ஏற்கனவே, வானில் பறந்துக் கொண்டிருக்கும் விமானங்களுக்கு இந்த பறக்கும் கார் எந்தவகையிலும் இடையூறாக அமைந்துவிடக்கூடாது. இது, இடையூறாக அமையுமானால் பேராபத்தை ஏற்படுத்தும் ஒன்றாக மாறிவிடும்.

இந்தியாவிற்கும் பறக்கும் வாடகை கார்... பிரதமரை சந்தித்த பிரபல வாடகை கார் நிறுவனம்...

ஆகையால், பறக்கும் கார்கள் செயல்பாட்டில் வரமேண்டுமானால் தனி விதிகள் மற்றும் கட்டமைப்புகள் அவற்றிற்கென உருவாக்கப்பட வேண்டும். இதற்கான ஆலோசனை மற்றும் ஆராய்ச்சியை மேற்கொண்டுவருவதாக பால்-V நிறுவனத்தின் அதிகாரி ஜேன்பீட்டர் கோனிங் கூறினார்.

இந்தியாவிற்கும் பறக்கும் வாடகை கார்... பிரதமரை சந்தித்த பிரபல வாடகை கார் நிறுவனம்...

இந்த பறக்கும் கார் மின்சார வாகனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் எத்தனை கிமீ பயணிக்க முடியும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த பறக்கும் கார்களின் சோதனையோட்டம் இந்திய வான்வெளியில் விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, March 9, 2020, 11:35 [IST]
English summary
Flying Cars May Soon Become A Reality In India With Pal-V. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+