கண்களை கவரும் சிவப்பு நிறத்தில் ஃபோர்ஸ் குர்கா ஃபேஸ்லிஃப்ட்... மஹிந்திரா தாருக்கு போட்டி ரெடி...

பளபளப்பான சிவப்பு நிறத்தில் ஃபோர்ஸ் குர்கா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள் தொழிற்சாலைக்கு உள்ளே இருந்து வெளியாகியுள்ளன. இதனால் விரைவில் சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் வாகனத்தை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

கண்களை கவரும் சிவப்பு நிறத்தில் ஃபோர்ஸ் குர்கா ஃபேஸ்லிஃப்ட்... மஹிந்திரா தாருக்கு போட்டி ரெடி...

மஹிந்திரா நிறுவனம் அனைத்து விதமான வாடிக்கையாளர்களுக்கும் பிடித்தமான வடிவில் புதிய தலைமுறை தாரை மிக சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதனால் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களின் பேச்சு இந்த 2020ஆம் ஆண்டிற்கான வாகனத்தை பற்றிதான் உள்ளது.

கண்களை கவரும் சிவப்பு நிறத்தில் ஃபோர்ஸ் குர்கா ஃபேஸ்லிஃப்ட்... மஹிந்திரா தாருக்கு போட்டி ரெடி...

இப்படிப்பட்ட மஹிந்திரா தாருக்கு விற்பனையில் போட்டியாகவுள்ள ஒரே மாடல் என்றால் அது ஃபோர்ஸ் மோட்டார்ஸின் குர்கா மட்டும்தான். தார் அப்கிரேட் செய்யப்பட்டதை தொடர்ந்து குர்காவும் ஃபேஸ்லிஃப்ட் மாற்றத்தை ஏற்றுள்ளது. முன்னதாக குர்கா ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் 2020 ஏப்ரலில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

கண்களை கவரும் சிவப்பு நிறத்தில் ஃபோர்ஸ் குர்கா ஃபேஸ்லிஃப்ட்... மஹிந்திரா தாருக்கு போட்டி ரெடி...

ஆனால் கொரோனா வைரஸினால் இதன் அறிமுகம் எப்போது இருக்கும் என்பதே தெரியாத நிலைதான் உள்ளது. இதனால் ஷோரூம்களுக்கு வந்தடைய தாரை காட்டிலும் கூடுதல் காலத்தை இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் எடுத்து கொள்ளும். இதற்கிடையில் சாலை சோதனைகளிலும் ஃபோர்ஸ் குர்கா ஈடுப்படுத்தப்பட்டதை பார்த்திருப்போம்.

கண்களை கவரும் சிவப்பு நிறத்தில் ஃபோர்ஸ் குர்கா ஃபேஸ்லிஃப்ட்... மஹிந்திரா தாருக்கு போட்டி ரெடி...

இந்த வகையில் இந்த ஃபேஸ்லிஃப்ட்டின் மாதிரி கார் ஒன்று கண்களை கவரும் சிவப்பு நிறத்தில் தொழிற்சாலைக்கு உள்ளே அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான படங்களை சாரு கோகலே என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கண்களை கவரும் சிவப்பு நிறத்தில் ஃபோர்ஸ் குர்கா ஃபேஸ்லிஃப்ட்... மஹிந்திரா தாருக்கு போட்டி ரெடி...

இந்த குர்கா ஃபேஸ்லிஃப்ட் சாலை சோதனையில் உட்படுத்தப்படுவதற்கு முன்பாக மஹராஷ்டிரா, புனேவில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது நம்பர் ப்ளேட்டை பார்க்கும்போது தெரிய வருகிறது. சிவப்பு நிறத்தில் இந்த ஃபோர்ஸ் குர்கா மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலை ஞாபகப்படுத்துகிறது.

கண்களை கவரும் சிவப்பு நிறத்தில் ஃபோர்ஸ் குர்கா ஃபேஸ்லிஃப்ட்... மஹிந்திரா தாருக்கு போட்டி ரெடி...

இந்த ஸ்பை படங்களில் வாகனத்தின் முன்பக்கம் புதிய க்ரில் மற்றும் பம்பர் உடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதன் பம்பர் முக்கியமான மூடுப்பனி விளக்குகளுக்கான ஹௌசிங் மற்றும் செவ்வக வடிவிலான ஏர்-டேம் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. பொனெட்டிற்கு இரு புறங்களிலும் உள்ள ஹெட்லேம்ப்களுக்கு மேற்புறத்தில் வழங்கப்படும் டர்ன் இண்டிகேட்டர்களின் வடிவத்தில் மாற்றமில்லை.

கண்களை கவரும் சிவப்பு நிறத்தில் ஃபோர்ஸ் குர்கா ஃபேஸ்லிஃப்ட்... மஹிந்திரா தாருக்கு போட்டி ரெடி...

இதன் ஹெட்லைட் அமைப்பை பற்றி செல்ல வேண்டுமென்றால், வட்ட வடிவிலான டிஆர்எல்கள் உடன் பை-எல்இடி ஹெட்லைட்களின் இணைகள் இந்த அமைப்பில் அடங்கியுள்ளன. மொத்தமாக வாகனத்தின் முன்பக்கம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகன் மாடலை போன்று உள்ளது. பின்பக்கத்தில் கதவில் அகலமான ஜன்னல் பேனல் பொருத்தப்பட்டுள்ளது.

கண்களை கவரும் சிவப்பு நிறத்தில் ஃபோர்ஸ் குர்கா ஃபேஸ்லிஃப்ட்... மஹிந்திரா தாருக்கு போட்டி ரெடி...

டெயில்லேம்ப்கள் செங்குத்தான வடிவிலும் பம்பரில் கிடைமட்ட வடிவிலும் உள்ளன. அலாய் சக்கரங்கள் 16 இன்ச்சில் வழங்கப்பட வழக்கம்போல் கூடுதல் ஸ்பேர் சக்கரம் பின் கதவில் பொருத்தப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதிகளில் ஃபெண்டர்கள் மிகவும் செங்குத்தான வடிவில் பொருத்தப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

கண்களை கவரும் சிவப்பு நிறத்தில் ஃபோர்ஸ் குர்கா ஃபேஸ்லிஃப்ட்... மஹிந்திரா தாருக்கு போட்டி ரெடி...

இதனால் உட்புற கேபினில் கூடுதல் இட வசதி ஏற்பட்டிருக்கும். அதேபோல் வாகனத்தின் பக்கவாட்டுகளில் தனித்தனியாக இரட்டை கண்ணாடி பேனலுக்கு பதிலாக ஒற்றை கண்ணாடி பேனல் வழங்கப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. இதற்கு முன்னதாக வெளியாகி இருந்த ஸ்பை படங்களின் மூலம் இதன் கேபினில் கொண்டுவரப்பட்டுள்ள மிகவும் சிறிய அளவிலான அப்டேட்களை அறிந்திருந்தோம்.

கண்களை கவரும் சிவப்பு நிறத்தில் ஃபோர்ஸ் குர்கா ஃபேஸ்லிஃப்ட்... மஹிந்திரா தாருக்கு போட்டி ரெடி...

இந்த வகையில் மொத்த கேபினும் ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பிற்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும், டேஸ்போர்டு பழைய வாகனங்களில் உள்ளதை போன்று இன்னமும் தடிமனான பிளாஸ்டிக்கில் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முன்பக்கமாக பார்க்கப்பட்ட பின் இருக்கைகள் நம்மை கவர்ந்துவிடும்.

லைஃப் ஸ்டைல் ஆஃப்-ரோடு வாகனம் என்பதால் குர்காவின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனும் ஏணி வடிவிலான ஃப்ரேம் சேசிஸை தான் தொடர்ந்துள்ளது. இதில் மெர்சிடிஸ் பென்ஸ் ஒஎம்616 மாடலில் வழங்கப்படும் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 தரத்தில் வழங்கப்படவுள்ளது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

கண்களை கவரும் சிவப்பு நிறத்தில் ஃபோர்ஸ் குர்கா ஃபேஸ்லிஃப்ட்... மஹிந்திரா தாருக்கு போட்டி ரெடி...

இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் குறை-விகித கியர்பாக்ஸ் உடன் 4x4 ட்ரைவ்ட்ரெயின் உள்ளிட்டவை இணைக்கப்படவுள்ளன. புதிய ஃபோர்ஸ் குர்கா ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகத்தை அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தையில் எதிர்பார்க்கலாம். மஹிந்திரா தாரை போல் இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 10, 2020, 13:30 [IST]
English summary
Force Gurkha Facelift Red Colour Spied Inside Plant – Launch Soon
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+