வீட்டிற்கே சென்று மக்களை பரிசோதிக்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்...

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புனேவை சேர்ந்த பார்டியா ஜெயின் சங்காடான் என்ற அமைப்புடன் இணைந்து மஹிராஷ்டிராவில் வீட்டிற்கே சென்று மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

வீட்டிற்கே சென்று மக்களை பரிசோதிக்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்...

ஃபோர்ஸ் நிறுவனம் இந்த மருத்துவ வசதிகளை ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து மஹாராஷ்டிரா மக்களுக்கு வழங்கி வருகிறது. இதற்காக மருத்துவ பொருட்கள் அடங்கிய 30 வேன்களை பயன்படுத்தி வரும் இந்நிறுவனம், இதில் டாக்டர்கள், உதவியாளர்களை உட்படுத்தி வருகிறது.

வீட்டிற்கே சென்று மக்களை பரிசோதிக்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்...

இந்த மருத்துவ உதவிகள் முக்கியமாக புனேவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கபட்டு வருகிறது. ஃபோர்ஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் கொரோனா நோயாளிகளை கண்டறிவதும், நோய் முற்றிய நோயாளிகளை தகுந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதுமே ஆகும்.

வீட்டிற்கே சென்று மக்களை பரிசோதிக்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்...

அனைத்து மருத்துங்களும், மருத்துவ உதவிகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ பரிசோதனையின் மூலமாக தினமும் 2,500 நபர்களை பரிசோதிக்கும் ஃபோர்ஸ் நிறுவனம் குறைந்தது 500 கொரோனா வைரஸ் அறிகுறி உடையவர்களை அடையாளம் கண்டு வருகிறது.

வீட்டிற்கே சென்று மக்களை பரிசோதிக்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்...

30 வேன்கள் மூலமாக பொதுமக்களை சந்திக்கும் டாக்டர்கள் கொரோனா நோயாளிகளை அடையாளப்படுத்துவது மட்டுமில்லாமல் வைரஸில் இருந்து தற்காத்து கொள்வதற்கான தடுப்பு நடவடிக்கைகளை பற்றியும் மக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர்.

வீட்டிற்கே சென்று மக்களை பரிசோதிக்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்...

இதுவரை கடந்த 24 நாட்களில் மொத்தம் 95,600 நபர்கள் ஃபோர்ஸ் நிறுவனத்தின் இந்த மருத்துவ பரிசோதனையில் உட்படுத்தப்பட்டு 945க்கும் அதிகமான நோயாளிகள் கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் முழுவதும் முடிவுக்கு வரும் வரை தொடரவுள்ளன.

வீட்டிற்கே சென்று மக்களை பரிசோதிக்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்...

இதுகுறித்து ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ப்ரசன் ஃபிரோடியா கூறுகையில், தற்சமயம் இந்தியாவின் ஹாட்ஸ்பாட் மாநிலமாக மஹாராஷ்டிரா இருப்பதால் அங்குள்ள மருத்துவர்களும் மருத்துவ உதவியாளர்களும் மிகவும் வேலை பளுவில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனை சமாளிக்க எங்களது முயற்சியும் சிறிது உதவுகிறது எனும் போது பெருமையாகவுள்ளது.

வீட்டிற்கே சென்று மக்களை பரிசோதிக்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்...

எங்களது இந்த மருத்துவ உதவிகளை தவிர்த்து எங்களது க்ருப் (டாக்டர்.அபாய் ஃபிரோடியா க்ரூப்) ரூ.25 கோடியை கொரோனா நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளது. இந்த தொகை சுகாதார உள்கட்டமைப்பு, இரத்த சேகரிப்பு பணிகளை மேம்படுத்த, நடமாடும் க்ளினிக்/சோதனை மையங்களை விரிவுப்படுத்த மற்றும் தேவைப்படுவோர்க்கு உணவுகளை வழங்க பயன்படுத்தப்படவுள்ளது என கூறினார்.

More from DriveSpark

Article Published On: Monday, April 27, 2020, 18:28 [IST]
English summary
Coronavirus pandemic: Force Motors mobile dispensary treats 95,600 patients in Maharashtra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+