இளைஞர்களை கவர புது வியூகம்... ஸ்பெயின் வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இப்படி ஒரு இலவசம் நமக்கும் கிடைக்குமா?

பிரபல ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனம் தரமான அறிவிப்பு ஒன்றை ஸ்பெயின் நாட்டிற்கு அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

இளைஞர்களை கவர புது வியூகம்... ஸ்பெயின் வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இப்படி ஒரு இலவசம் நமக்கும் கிடைக்குமா?

வீடியோ கேம் பிரியர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த பிளே ஸ்டேஷன் 5 கடந்த ஜூன் மாதம் விற்பனைக்கு வந்தது. முன்னதாக விற்பனைக்கு வந்த நான்கு மாடல்களைக் காட்டிலும் மேம்படுத்தப்பட்ட தரத்தில் இதனை சோனி நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தது. அதிக ஆர்வத்தைத் தூண்டுகின்ற வகையில் மிக துல்லியமான விளையாட்டு அனுபவத்தை வழங்குவதாக இதன் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

இளைஞர்களை கவர புது வியூகம்... ஸ்பெயின் வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இப்படி ஒரு இலவசம் நமக்கும் கிடைக்குமா?

எனவேதான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதற்கு தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர். எனவே விற்பனைக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே பிளே ஸ்டேஷன் 5-க்கு எக்கசக்க டிமாண்ட் ஏற்படத் தொடங்கியது. குறிப்பிட்ட சில நாடுகளில் அதிக டிமாண்டின் காரணமாக விற்பனைக்குக் கிடைக்காத சூழ்நிலைகூட ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன.

இளைஞர்களை கவர புது வியூகம்... ஸ்பெயின் வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இப்படி ஒரு இலவசம் நமக்கும் கிடைக்குமா?

இத்தகைய ஒன்றையே பிரபல நிறுவனம் கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இலவசாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஃபோர்டு நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. ஆனால் இது ஸ்பெயின் நாட்டிற்கு மட்டுமே பொருந்தும். ஸ்பெயின் நாட்டு மக்களைக் கவரும் வகையிலேயே இந்த அறிவிப்பை ஃபோர்டு வெளியிட்டுள்ளது.

இளைஞர்களை கவர புது வியூகம்... ஸ்பெயின் வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இப்படி ஒரு இலவசம் நமக்கும் கிடைக்குமா?

அதுவும் புதிய எஸ்யூவி ரக கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இதனை இலவசாக வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாகனங்களை வாங்க விரும்புவோரையும், வீடியோ கேம் விளையாட்டு பிரியர்களைக் கவரும் நோக்கிலும் இந்த பிரத்யேக இலவச அறிவிப்பை ஃபோர்டு வெளியிட்டிருக்கின்றன. இந்த அறிவிப்பு ஸ்பெயின் நாட்டு மக்கள் அல்லாத ஃபோர்டு கார்கள் பிரியர்கள் மத்தியில் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்களை கவர புது வியூகம்... ஸ்பெயின் வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இப்படி ஒரு இலவசம் நமக்கும் கிடைக்குமா?

பிளே ஸ்டேஷன் 5 தற்போது ஸ்பெயின் நாட்டில் 399 யூரோக்களுக்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது இந்திய மதிப்பில் சுமார் 35,833 ரூபாய் ஆகும். ஆண்டு முடிவை முன்னிட்டு வாகன உற்பத்தி நிறுழனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் இருக்கின்றன. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே ஃபோர்டு நிறுவனம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது.

இளைஞர்களை கவர புது வியூகம்... ஸ்பெயின் வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இப்படி ஒரு இலவசம் நமக்கும் கிடைக்குமா?

அதேசமயம், பிற நாடுகளில் ஆண்டு இறுதியை முன்னிட்டு சிறப்பு கேஷ் பேக் மற்றும் தள்ளுபடி சலுகைகளை ஃபோர்டு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்நிறுவனத்தின் எஸ்யூவி கார்கள் அதிகபட்சமாக 80,000 யூரோக்களுக்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இத்தைகய விலையுயர்ந்த கார்களுக்கே தற்போது ஆன்லைன் வாயிலாக மட்டுமே விற்பனைக்கு வந்திருக்கும் ப்ளே ஸ்டேஷன் 5 இலவசமாக வழங்கப்பட இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Announces PlayStation 5 Free For SUV Cars: Here Is Where!.. Read In Tamil.
Story first published: Monday, December 21, 2020, 11:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X