இவ்ளோ சிக்கலானா பகுதியா லடாக்! வெளியேற முடியாமல் திணறிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்! ராணுவ வீரர்கள் கிரேட்!

லடாக்கின் கரடு முரடான சாலையில் ஃபோர்டு நிறுவனத்தின் அதி-திறன் கொண்ட காரான ஈகோஸ்போர்ட் சிக்கியிருப்பதைப் போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இவ்ளோ சிக்கலானா பகுதியா லடாக்! வெளியேற முடியாமல் திணறிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்! ராணுவ வீரர்கள் கிரேட்!

இந்தியாவின் பெரும்பாலான சாலைகள் அதிக சவால் நிறைந்தவையாக உள்ளன. இதற்கு மிக சிறந்த உதாரணம் லடாக் பகுதியின் மிக கரடு-முரடான சாலைகள் ஆகும். இங்குதான் இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளின் எல்லைப் பகுதியும் அமைந்துள்ளன. ஆகையால், இந்த பகுதியின் பாதைகளை சீரமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.

இவ்ளோ சிக்கலானா பகுதியா லடாக்! வெளியேற முடியாமல் திணறிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்! ராணுவ வீரர்கள் கிரேட்!

எனவேதான் அங்கு தற்போதும் அதிக சவாலை உருவாக்கும் சாலைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அம்மாதிரியான ஓர் சாலையிலேயே ஃபோர்டு நிறுவனத்தின் பிரபல மாடல்களில் ஒன்றான ஈகோஸ்போர்ட் சிக்கி, முன்னேற முடியாமல் தவிப்பதைப் போன்ற காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.

இவ்ளோ சிக்கலானா பகுதியா லடாக்! வெளியேற முடியாமல் திணறிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்! ராணுவ வீரர்கள் கிரேட்!

அதேவேலையில், குறிப்பிட்ட அதே சாலையின் ஊடாக பயணித்த மற்றுமொரு காரான மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, கரடு-முரடான சவால்கள் நிறைந்த சாலையை அசால்டாக கடக்கின்றது.

இவையிரண்டும் ஒரே பிரிவிலான வாகனங்கள் ஆகும். சொல்லப்போனால் ஒன்றிற்கு ஒன்று போட்டியாக, அதாவது, ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மாடலுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்கப்பட்ட மாடலாக விட்டாரா பிரெஸ்ஸா உள்ளது.

இவ்ளோ சிக்கலானா பகுதியா லடாக்! வெளியேற முடியாமல் திணறிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்! ராணுவ வீரர்கள் கிரேட்!

இந்த நிலையில், ஈகோஸ்போர்ட் காரால் சமாளிக்க முடியாததை எப்படி மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மட்டும் செய்து காட்டியது?, அப்படியானால் ஈகோஸ்போர்ட்டைக் காட்டிலும் அதிக திறன் வாய்ந்ததா விட்டாரா பிரஸ்ஸா? இவ்வாறு பல்வேறு கேள்விகள் நமக்குள் எழும்பியுள்ளது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இவ்ளோ சிக்கலானா பகுதியா லடாக்! வெளியேற முடியாமல் திணறிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்! ராணுவ வீரர்கள் கிரேட்!

நாம் முன்பே கூறியதைப் போன்று லடாக் பகுதியின் பெரும்பாலான பாதைகள் அதிக சவால் நிறைந்த ஒன்றாக இருக்கின்றன. இந்த பாதையில் எந்த மாதிரியான அதி திறன் வாய்ந்த கார்கள் பயணித்தாலும், சற்று சிரமத்துடனே கடக்கும். இந்த மாதிரியான சூழ்நிலையில்தான் நம் நாட்டு ராணுவத்தினர் தினந்தோறும், பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்ளோ சிக்கலானா பகுதியா லடாக்! வெளியேற முடியாமல் திணறிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்! ராணுவ வீரர்கள் கிரேட்!

இதே சூழலைதான் அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் அன்றாடம் அனுபவித்து வருகின்றனர். இதனை வெளிப்படுத்தும் விதமாகவே ஈகோ ஸ்போர்ட் சிக்கிய சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

லடாக்கின் இம்மாதிரியான பாதைகளில் பயணிக்க தனி பயிற்சியே வேண்டும் என்று கூறப்படுகின்றது. அல்லது, கரடு முரடான பாதைகளில் பயணித்த முன்னுபவமாவது இருக்க வேண்டும். இல்லையேல் இப்படிதான் சிக்க நேரிடும்.

இவ்ளோ சிக்கலானா பகுதியா லடாக்! வெளியேற முடியாமல் திணறிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்! ராணுவ வீரர்கள் கிரேட்!

ஆம், என்னதான் அதிக திறன் கொண்ட வாகனமாக இருந்தாலும், அது அனுபவமற்ற டிரைவர்களின் கைகளில் இருக்கிறதென்றால் இப்படிதான் சிக்கிக் கொள்ளும். இந்த விஷயத்தில் ஓட்டுநரின் அறியாமையே முக்கிய காரணமாக உள்ளது. ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் காரில் 4x4 டிரைவ்டிரெயின் சிஸ்டம் உள்ளது. இது, எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் அசால்டாக கடக்க உதவும்.

இவ்ளோ சிக்கலானா பகுதியா லடாக்! வெளியேற முடியாமல் திணறிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்! ராணுவ வீரர்கள் கிரேட்!

ஆனால், கையாளத் தெரியாத ஓட்டுநரின் கைவசம் இது இருந்ததன் காரணத்தினாலயே ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா காரைக் காட்டிலும் 2 மிமீ அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கின்றது ஈகோ ஸ்போர்ட். விட்டாரா பிரெஸ்ஸாவின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 198 மிமீ ஆகும். இதுமட்டுமின்றி வீல் பேஸிலும் அதிக அளவையேக் கொண்டிருக்கிறது ஃபோர்டு ஈகோஸ்போர்ட்.

இவ்ளோ சிக்கலானா பகுதியா லடாக்! வெளியேற முடியாமல் திணறிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்! ராணுவ வீரர்கள் கிரேட்!

இதன் வீல் பேஸ் 2,519 மிமீ ஆகும். அதேசமயம், விட்டாரா பிரெஸ்ஸாவின் வீல் பேஸ் 2,500 மிமீட்டராக உள்ளது. இவையிரண்டும் முன் வீல் இயக்க கொண்டவையாகும். எனவே, இரண்டு கார்களும் ஒன்றிற்கு ஒன்று சலைத்தது அல்ல என்பதைப் போலவே காட்சியளிக்கின்றது.

ஆனால், ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் காரின் எஞ்ஜின் திறன் விட்டாரா பிரெஸ்ஸாவைக் காட்டிலும் சற்று அதிக திறனைக் கொண்டிருக்கின்றது.

இவ்ளோ சிக்கலானா பகுதியா லடாக்! வெளியேற முடியாமல் திணறிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்! ராணுவ வீரர்கள் கிரேட்!

இருப்பினும், போதிய அனுபவம் இல்லாத ஓட்டுநரால் விட்டாரா பிரெஸ்ஸா முன் அக்கார் தோல்வியைச் சந்தித்திருக்கின்றது. அதேசமயம், இந்த நிலைக்கு ஈகோஸ்போர்ட் கார் தண்ணீர் நிறைந்த அந்த சாலையின் மையப் பகுதியில் சென்றதும் ஓர் காரணம் என்று கூறப்படுகின்றது. அதேசாலையின் ஓரத்தில் விடாமல் சென்றதாலயே விட்டாரா பிரெஸ்ஸா சிக்காமல் கடக்க முடிந்தது. இதேபாணியைக் கையாண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் காரும் அந்த பாதையில் சிக்காமல் செல்வதை நம்மால் காண முடிகின்றது.

இந்த சம்பவமானது, லடாக் போன்ற அதிக சவால் நிறைந்த சாலைகளில் பயணிக்கும்போது அனுபவம் நிறைந்த ஓட்டுநர்கள் இருப்பதே உகந்தது என்பதை உணர்த்தியுள்ளது.

இதுமட்டுமின்றி, தண்ணீர் நிறைந்த சாலையில் அதிக பள்ளம் எங்கு இருக்கின்றது என்பது தெரியாது. ஆகையால், மழை வெள்ளம் சூழ்ந்த சாலையில் பயணிக்கும்போது பிறருக்கு இடையூறு இல்லாத வகையில் சாலையோரத்தின் செல்வதின் அவசியத்தையும் இது வெளிக்காட்டியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
இவ்ளோ சிக்கலானா பகுதியா லடாக்! வெளியேற முடியாமல் திணறிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்! ராணுவ வீரர்கள் கிரேட்!
Story first published: Monday, July 20, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X