அறிமுகச் சலுகை விலையிலேயே எண்டெவர் எஸ்யூவி தொடர்ந்து விற்பனை: ஃபோர்டு அறிவிப்பு

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் தொடர்ந்து அறிமுகச் சலுகை விலையிலேயே அடுத்த மூன்று மாதங்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

அறிமுகச் சலுகை விலையிலேயே எண்டெவர் எஸ்யூவி தொடர்ந்து விற்பனை: ஃபோர்டு அறிவிப்பு

இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இருந்து வருகிறது. பிரம்மாண்டமான தோற்றம், ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு என இரண்டு பயன்பாட்டிற்குமான தொழில்நுட்ப அம்சங்கள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

அறிமுகச் சலுகை விலையிலேயே எண்டெவர் எஸ்யூவி தொடர்ந்து விற்பனை: ஃபோர்டு அறிவிப்பு

இந்த நிலையில், புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகரான புதிய எஞ்சினுடன் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், ரூ.29.55 என்ற ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் வந்தது. மேலும், இது அறிமுகச் சலுகை விலையாக அறிவிக்கப்பட்டது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

அறிமுகச் சலுகை விலையிலேயே எண்டெவர் எஸ்யூவி தொடர்ந்து விற்பனை: ஃபோர்டு அறிவிப்பு

பொதுவாக அறிமுகச் சலுகையாக நிர்ணயிக்கப்படும் விலையானது அடுத்த மூன்றாவது மாதத்தில் கணிசமாக உயர்த்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது கொரோனா பிரச்னை காரணமாக, ஃபோர்டு எண்டெவர் விலைக்கு அறிவிக்கப்பட்ட அறிமுகச் சலுகை விலை அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடரும் என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.

அறிமுகச் சலுகை விலையிலேயே எண்டெவர் எஸ்யூவி தொடர்ந்து விற்பனை: ஃபோர்டு அறிவிப்பு

கடந்த இரண்டு மாதங்களாக ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் வீடுகளில் முடங்கிய நிலையில், புதிய விசாரணைகள் மற்றும் புக்கிங்குகள் இல்லை. மேலும், வாடிக்கையாளர்கள் புதிய கார் வாங்கும் திட்டத்தையும் ஒத்திப்போடும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழலில் விலையை உயர்த்துவது உசிதமாக இருக்காது என்று ஃபோர்டு கருதுகிறது.

அறிமுகச் சலுகை விலையிலேயே எண்டெவர் எஸ்யூவி தொடர்ந்து விற்பனை: ஃபோர்டு அறிவிப்பு

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் பிஎஸ்6 தரத்திற்கு இணையான புதிய 2.0 லிட்டர் ஈக்கோபுளூ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

அறிமுகச் சலுகை விலையிலேயே எண்டெவர் எஸ்யூவி தொடர்ந்து விற்பனை: ஃபோர்டு அறிவிப்பு

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 2 வீல் டிரைவ் மாடலானது லிட்டருக்கு 13.90 கிமீ மைலேஜையும், 4 வீல் டிரைவ் மாடலானது லிட்டருக்கு 12. 4 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அறிமுகச் சலுகை விலையிலேயே எண்டெவர் எஸ்யூவி தொடர்ந்து விற்பனை: ஃபோர்டு அறிவிப்பு

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், ரியர் ஸ்பாய்லர், 18 அங்குல அலாய் வீல்கள், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, டியூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், சன்ரூஃப் வசதிகள் உள்ளன.

அறிமுகச் சலுகை விலையிலேயே எண்டெவர் எஸ்யூவி தொடர்ந்து விற்பனை: ஃபோர்டு அறிவிப்பு

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் டைட்டானியம் 2 வீல் டிரைவ் மாடலுக்கு ரூ.29.55 லட்சம் விலையும், 2 வீல் டிரைவ் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டிற்கு ரூ.31.55 லட்சம் விலையும், 4 வீல் டிரைவ் மாடலுக்கு ரூ.33.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதே விலை அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.70,000 வரை விலை அதிகரிக்கப்பட இருந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு இது சேமிப்பாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 23, 2020, 10:58 [IST]
English summary
Ford has announced that their flagship model the Endeavour BS6 will continue to sell the SUV with its introductory pricing for the next three months. The company has taken the decision to delay the increase in pricing due to the ongoing Covid-19 pandemic in the country.
மேலும்... #ஃபோர்டு #ford
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+